ஐதரோ அயோடிக்கு அமிலம்

ஐதரசன் அயோடைடின் கரைசல்

ஐதரோ அயோடிக்கு அமிலம் (Hydroiodic acid) என்பது HI என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஐதரயோடிக்கு அமிலம் என்ற பெயராலும் இது அழைக்கப்படும். ஐதரசன் அயோடைடின் நீரிய கரைசலான இது நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. இது ஒரு வலிமையான அமிலமாகும். இதில் ஐதரசன் அயோடைடு நீரிய கரைசலில் முழுமையாக அயனியாக்கம் செய்யப்படுகிறது. ஐதரசன் அயோடைடின் செறிவூட்டப்பட்ட நீர்த்த கரைசல்கள் பொதுவாக 48% முதல் 57% HI நிறையை கொண்டிருக்கும்.[2]

ஐதரோ அயோடிக்கு அமிலம்
Hydroiodic acid
Space-filling model of hydrogen iodide
Space-filling model of hydrogen iodide
Space-filling model of water
Space-filling model of water
அயோடைடு அயனி
அயோடைடு அயனி
Space-filling model of the hydronium cation
Space-filling model of the hydronium cation
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • நீர்த்த ஐதரசன் ஐயோடைடு
  • ஐதரோ அயோடிக்கு அமிலம்
  • ஐதரசன் அயோடைடு, ஐதரசு
  • ஐதரோனியம் அயோடைடு
இனங்காட்டிகள்
10034-85-2 Y
ChEBI CHEBI:43451 Y
ChemSpider 23224 Y
EC number 233-109-9
InChI
  • InChI=1S/BrH/h1H Y
    Key: CPELXLSAUQHCOX-UHFFFAOYSA-N Y
  • InChI=1/BrH/h1H
    Key: CPELXLSAUQHCOX-UHFFFAOYAZ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24841
வே.ந.வி.ப எண் MW3760000
  • [OH3+].[I-]
UNII 694C0EFT9Q N
பண்புகள்
HI(aq)
வாய்ப்பாட்டு எடை 127.91 g·mol−1 (HI)
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் கடுமையானது
அடர்த்தி 1.70 கி/மி.லி, azeotrope
(57% HI)
கொதிநிலை 127 °C (261 °F; 400 K) 1.03 பார்,
நீரிய கரைசல்
காடித்தன்மை எண் (pKa) −9.3 (HI)[1]
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H314
P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P405, P501
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது.
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
ஐதரோ அயோடிக்கு அமிலத்தின் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்ட கரைசல்.

வினைகள்

தொகு

ஐதரோ அயோடிக்கு அமிலம் காற்றிலுள்ள ஆக்சிசனுடன் வினைபுரிந்து நீரையும் அயோடினையும் கொடுக்கிறது.

4 HI(நீரிய) + O2 → 2 H2O + 2 I2

ஐதரசன் ஆலைடுகளைப் போலவே, ஐதரோ அயோடிக்கு அமிலமும் ஆல்க்கீன்களுடன் சேர்த்து ஆல்க்கைல் அயோடைடுகளைக் கொடுக்கிறது. இது ஒரு குறைக்கும் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக அரோமாட்டிக்கு நைட்ரோ சேர்மங்களை அனிலின்களாகக் குறைப்பதில் இது பயன்படுகிறது.[3]

கேடிவா செயல்முறை

தொகு

கேடிவா செயல்முறையானது ஐதரோ அயோடிக்கு அமிலத்தின் முக்கிய இறுதிப் பயன்பாடாகும். இது மெத்தனாலின் கார்பனைலேற்ற வினையின் மூலம் அசிட்டிக் அமிலத்தை உற்பத்தி செய்வதற்கான இணை-வினையூக்கியாக செயல்படுகிறது.[4][5]

 
கேடிவா செயல்முறையின் வினையூக்கச் சுழற்சி

பயன்பாடுகள்

தொகு

ஐதரோ அயோடிக்கு அமிலத்தை அமெரிக்க போதைப்பொருள் அமலாக்க நிர்வாகக் கூட்டமைப்பு பட்டியல் I இரசாயனமாக பட்டியலிட்டுள்ளது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Perrin, D. D., ed. (1982) [1969]. Ionisation Constants of Inorganic Acids and Bases in Aqueous Solution. பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் Chemical Data (2nd ed.). Oxford: Pergamon (published 1984). Entry 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-029214-3. LCCN 82-16524.
  2. Lyday, Phyllis A. (2005), "Iodine and Iodine Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, pp. 382–390, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a14_381
  3. Kumar, J. S. Dileep; Ho, ManKit M.; Toyokuni, Tatsushi (2001). "Simple and chemoselective reduction of aromatic nitro compounds to aromatic amines: reduction with hydriodic acid revisited". Tetrahedron Letters 42 (33): 5601–5603. doi:10.1016/s0040-4039(01)01083-8. 
  4. Jones, J. H. (2000). "The Cativa Process for the Manufacture of Acetic Acid". Platinum Metals Rev. 44 (3): 94–105. http://www.platinummetalsreview.com/pdf/pmr-v44-i3-094-105.pdf. 
  5. Sunley, G. J.; Watson, D. J. (2000). "High productivity methanol carbonylation catalysis using iridium - The Cativa process for the manufacture of acetic acid". Catalysis Today 58 (4): 293–307. doi:10.1016/S0920-5861(00)00263-7. 
  6. Skinner, Harry F. (1990). "Methamphetamine synthesis via hydriodic acid/Red phosphorus reduction of ephedrine". Forensic Science International 48 (2): 123–134. doi:10.1016/0379-0738(90)90104-7. https://archive.org/details/sim_forensic-science-international_1990-12_48_2/page/123. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரோ_அயோடிக்கு_அமிலம்&oldid=4076401" இலிருந்து மீள்விக்கப்பட்டது