ஐபீரோ-அமெரிக்கா
ஐபீரோ-அமெரிக்கா (எசுப்பானியம்: Iberoamérica, போர்த்துக்கேய மொழி: Ibero-América) அல்லது ஐபீரிய அமெரிக்கா (Iberian America) என்பது அமெரிக்கக் கண்டங்களில் உள்ள எசுப்பானிய மற்றும் போர்த்துக்கேய மொழிகளை முதன்மையானதாகக் கொண்ட நாடுகளை உள்ளடக்கிய பகுதி ஆகும். பொதுவாக ஐபீரோ-அமெரிக்கா என்பது எசுப்பானியா மற்றும் போர்த்துக்கல் நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் முன்னர் இருந்த அமெரிக்கப் பகுதிகளையே குறிக்கும். ஐபீரோ-அமெரிக்க உச்சி மாநாட்டில் எசுப்பானிய, போர்த்துக்கேய நாடுகளும் பங்குபெறும். ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பில் எசுப்பானிய, போர்த்துக்கேய நாடுகளுடன் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள எசுப்பானிய மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ள நாடான எக்குவடோரியல் கினியும் உறுப்பினராக உள்ளது.[1][2] ஆனால், போர்த்துக்கீச மொழி பேசும் ஆப்பிரிக்க நாடுகள் இவ்வமைப்பில் இடம்பெறவில்லை.
ஐபீரோ-, ஐபீரியன் என்பவை ஐரோப்பாவில் உள்ள ஐபீரியன் தீபகற்பத்தை குறிக்கிறது. இந்நிலப்பகுதி இன்றைய எசுப்பானியம், போர்த்துக்கல் ஆகிய நாடுகள் அமைந்திருக்கும் இடம் ஆகும். இந்நாடுகள் தவிர ஆண்டோரா நாடும், கிப்ரால்ட்டர் பிரித்தானிய ஆட்சிப்பகுதியும் ஐபீரியன் தீபகற்பத்தில் அடங்கும் . ஐபீரோ-அமெரிக்கா என்பது வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் உள்ள எஸ்பானிய மொழி அதிகம் பேசும் நாடுகளையும் போர்த்துகேய மொழியை முதன்மையாக கொண்ட நாடான பிரேசில்லையும் குறிக்கிறது . ஐபீரோ-அமெரிக்க நாடுகளுடன் பிரஞ்சு மொழி பேசும் நாடான ஹெய்தி, பிரான்ஸ் வெளிநாட்டு துறை கட்டுபாட்டில் உள்ள பகுதிகளான பிரெஞ்சு கயானா, மார்டீனிக் மற்றும் குவாதலூப்பே, பிரான்சின் கடல்கடந்த தொகுப்புகளான செயிண்ட் மார்டின், செயிண்ட் பார்த்தலெமி ஆகியவை இலத்தீன் அமெரிக்கா என்று அழைக்கபடுகிறது .
1991ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐபீரோ-அமெரிக்கன் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது . இந்த மாநாட்டில் ஐபீரோ-அமெரிக்க நாடுகளுடன் ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் அன்டோரா நாடுகளும் உறுப்பினர்களாக பங்கு பெறும்,[3][4]
ஐபீரோ-அமெரிக்க நாடுகள்
தொகு- எஸ்பானிய மொழி பேசும் நாடுகள் : (430,567,462 மக்கள் )
- அர்ஜென்டீனா(Argentina) 42,669,500
- பொலிவியா(Bolivia) 10,556,102
- சிலி (Chile) 17,772,871
- கொலொம்பியா(Colombia) 47,425,437
- கோஸ்ட்டா ரிக்கா (Costa Rica) 4,586,353
- கியூபா (Cuba)11,167,325
- டொமினிக்கன் குடியரசு(Dominican Republic) 9,445,281
- எக்குவடோர் (Ecuador) 15,223,680
- எல் சால்வடோர் (El Salvador) 6,134,000
- குவாத்தமாலா (Guatemala)15,806,675
- ஹொண்டுராஸ் (Honduras) 8,249,574
- மெக்சிக்கோ (Mexico) 118,395,054
- நிக்கராகுவா (Nicaragua) 6,071,045
- பனாமா (Panama) 3,608,431
- பராகுவே (Paraguay) 6,800,284
- பெரு (Peru) 30,814,175
- புவேர்ட்டோ ரிக்கோ(Puerto Rico) 3,667,084
- எசுப்பானியா(Spain) 46,704,314
- உருகுவே (Uruguay) 3,324,460
- வெனிசுவேலா Venezuela 28,946,101
- போர்த்துக்கேய மொழி பேசும் நாடுகள்: (211,520,003 மக்கள்)
- பிரேசில் (Brazil) 201,032,714
- போர்த்துகல்(Portugal) 10,487,289
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Presentación, Acerca de la OEI, Organización de Estados Iberoamericanos para la Educación, la Ciencia y la Cultura.
- ↑ Países பரணிடப்பட்டது 2007-11-12 at the வந்தவழி இயந்திரம், Cumbres Iberoamericanas de Jefes de Estado y de Gobierno.
- ↑ Ibero-American Summit பரணிடப்பட்டது 2007-12-06 at the வந்தவழி இயந்திரம், Foreign Office, Republic of Brazil.
- ↑ pp. 312–313, Spain: Democracy Regained, Ergasto Ramón Arango, Spain: Westview Press.
வெளி இணைப்புகள்
தொகு- Official website of the Organization of Ibero-American States (OEI) (Spanish)
- Official website of Ibero-America's Secretariat General (SEGIB) (Spanish)
- Official website of the Organization of Ibero-American Youth (OIJ) (Spanish)
- Digital history of Ibero-America from the 14th to the 18th century பரணிடப்பட்டது 2007-12-12 at the வந்தவழி இயந்திரம் (Spanish)
- La Insignia, news about Ibero-America (Spanish)
- Pensar Iberoamerica பரணிடப்பட்டது 2009-02-20 at the வந்தவழி இயந்திரம், cultural magazine about Ibero-America (Spanish)
- Official website of El Ojo de Iberoamerica, one of the most important festivals devoted to Ibero-America (Spanish)