ஓயா ஆறு
ஓயா ஆறு (மலாய்: Sungai Oya; ஆங்கிலம்: Oya River); மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு ஆகும். சரவாக், முக்கா பிரிவின், கிலிங்கான் மலைத்தொடரில் தொடங்கும் இந்த ஆறு, கோலா ஒயா கிராமத்தைச் சென்றடைந்த பின்னர், தென்சீனக்கடலில் கலக்கிறது.
ஓயா ஆறு Oya River Sungai Oya | |
---|---|
ஓயா ஆற்றங் கரையில் மெலனாவ் மக்களின் கிராம வீடுகள் (2011) | |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | கிலிங்கான் மலைத்தொடர் |
⁃ அமைவு | Sarawak, Malaysia |
முகத்துவாரம் | ஓயா |
⁃ அமைவு | தென்சீனக் கடல், மலேசியா |
⁃ ஆள்கூறுகள் | 2°52′30″N 111°52′55″E / 2.875°N 111.882°E |
⁃ உயர ஏற்றம் | 0 m (0 அடி)} |
நீளம் | 31 km (19 mi) |
வடிநில அளவு | 2143.92 km2[1] |
வெளியேற்றம் | |
⁃ சராசரி | 490 m3/s (17,000 cu ft/s) |
31 கிலோமீட்டர்கள் நீளம் கொண்ட இந்த ஆறு, 2,143.922 கி.மீ. வடிநிலப் பகுதியைக் கொண்டுள்ளது. இந்த ஆறுதான் முக்கா பிரிவில் மிக நீளமான ஆறாகும்.[2][3]
பொது
தொகு1861-ஆம் ஆண்டில் ஜேம்சு புரூக்கிற்கு வழங்கப்பட்டு சரவாக் ராஜாவின் ஒரு பகுதியாக மாறும் வரையில், இந்த ஆறு புரூணை பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.[4]
இந்த ஆறு சுதாபாங் (Stapang), தலாத் (Dalat) மற்றும் ஓயா ஆகிய சிறிய நகரங்கள் வழியாகப் பாய்ந்து செல்கிறது.
நீர் கருங்குவளை
தொகுநீர்க் கருங்குவளையின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியினால் ஆற்றின் ஓட்டம் தடைபடுவது வழக்கமாக உள்ளது; மற்றும் நீர் தேங்குவதற்கும் காரணமாக அமைகின்றது. மேலும் பல பிரச்சனைகளை நீர்க் கருங்குவளைகள் ஏற்படுத்துகின்றன. அத்துடன் மீனவர்களும், படகு ஓட்டுநர்களும் தங்கள் படகுகளை இயக்குவதில் சிரமம் கொள்கின்றனர்.[5]
முதலை தாக்குதல்கள்
தொகுஓயா ஆறு, அதன் முதலைகளின் தாக்குதல்களுக்கு நன்கு அறியப்பட்டது. குறிப்பாக ஆற்றின் கீழ் பகுதியில், உப்பு நீர் முதலைகளின் தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்வது உண்டு. இந்தத் தாக்குதல்களினால், ஓயா ஆற்றை நம்பி வாழும் மீனவர்கள் பெரும்பான்மையோர் பாதிக்கப் படுகின்றனர்.[6][7][8]
மார்ச் 2021-இல் சரவாக் வனக் கழகத்தின் (Sarawak Forestry Corporation) ஊழியர்களும்; மற்றும் அரச மலேசிய காவல் துறையினரும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில்; 22 முதலைகள் அவர்களின் பார்வையில் பட்டதாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த நடவடிக்கையின் போது 4.5 மீட்டர் நீளமுள்ள ஒரு முதலையும் பிடிபட்டது.[9]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ [1] பரணிடப்பட்டது 2014-08-12 at the வந்தவழி இயந்திரம் Gazetted Rivers. URL assessed on 11 August 2014
- ↑ Henry Siyu (14 November 2017). "Poser over floating 'parok' at Oya River". New Sarawak Tribune. https://www.newsarawaktribune.com.my/news/poser-over-floating-parok-at-oya-river/.
- ↑ [2] பரணிடப்பட்டது 2018-09-24 at the வந்தவழி இயந்திரம் Department of Irrigation and Drainage Sarawak. URL assessed on 11 August 2014
- ↑ Hughes-Hallet, H. R. (1940). "A Sketch of the History of Brunei". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society 18 (2): 38.
- ↑ Moh, Jane (29 December 2020). "Joint study meant to tackle water hyacinth overgrowth". The Borneo Post. பார்க்கப்பட்ட நாள் 23 March 2021.
- ↑ "A man who went missing while fishing was found dead, believed to have been attacked by a crocodilea". Astro Awani. 7 March 2021. பார்க்கப்பட்ட நாள் 23 March 2021.
- ↑ Yahya, Harun (18 April 2019). "The determination to hunt 'Si Kudung' wants revenge". Berita Harian. பார்க்கப்பட்ட நாள் 23 March 2021.
- ↑ Yahya, Harun (11 November 2016). "The 'cane thorn' method helps the effect of crocodile victims". Berita Harian. பார்க்கப்பட்ட நாள் 23 March 2021.
- ↑ Chua, Andy (22 March 2021). "4.5m-long croc caught in Dalat after 10 days of surveillance". The Star Malaysia. பார்க்கப்பட்ட நாள் 23 March 2021.