கங்காளி தொல்லியல் மேடு
கங்காளி தொல்லியல் மேடு (Kankali Tila or Kankali mound or Jaini mound) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தின் தலைமையிடமான மதுரா நகரத்தில் அமைந்த சமணத் தொல்லியல் மேடு ஆகும். செர்மானிய தொல்லியல் அறிஞர் அலோயிஸ் அன்டன் ஃபூரர் என்பவர் இவ்விடத்தில் 1890-1891களில் அகழாய்வு செய்த போது சமணச் சிற்பங்கள், தூண்கள் மற்றும் கல்வெட்டுக்களைக் கண்டெடுத்தார்.[3] கங்காளி தொல்லியல் மேடு 500 அடி உயரம், 350 அடி அகலத்தில் செவ்வக வடிவம் கொண்டிருந்தது. [3]
கங்காளி தொல்லியல் மேடு | |
---|---|
இந்தியாவின் மதுரா நகரத்தில் கங்காளி தொல்லியல் மேட்டின் அமைவிடம் கிபி முதலாம் நூற்றாண்டின் அயாகாபட்டா எனும் சமணச் சிற்ப கற்பலகை, மதுரா அருங்காடசியகம் | |
மதுராவில் கங்காளி தொல்லியல் மேட்டின் அமைவிடம்
|
கங்காளி தொல்லியல் மேட்டை அகழாய்வு செய்த போது கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி 12-ஆம் நூற்றாண்டு வரையிலான, சமணத்தில் திகம்பரர்-சுவேதாம்பரர் பிரிவுகள் உண்டாவதற்கு முந்தைய சமண சமயத்தின் அழகிய சிற்பங்கள், கல்வெட்டுக்கள், தூண்கள்,[4]சிலைகள், அயாகாபட்டா எனும் சமணக் கல் சிற்பப் பலகை போன்ற தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கங்காளி தொல்லியல் மேட்டில் கண்டிபிடிக்கப்பட்ட சமணத் தொல்லியல் பொருட்கள் மதுரா அரசு அருங்காடசியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கங்காளி தொல்லியல் மேட்டில் கிடைத்த சமணத் தொல்பொருட்கள்
தொகுகங்காளி தொல்லியல் மேட்டில் கிடைத்த சமணத் தொல்பொருட்கள் அனைத்தும் மதுரா அரசு அருங்காடசியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவைகள்:
-
ரிசபநாதர் சிற்பம், (கிபி 8-ஆம் நூற்றாண்டு)
-
சதுர வடிவிலான சமணச் சிற்பம், கிபி முதலாம் நூற்றாண்டு
-
சமணச் சிற்ப கற்பலகை, கிபி 1-ஆம் நூற்றாண்டு
-
தியான நிலையில் ஜீனர்
-
ரிசபநாதர் சிற்பம்
-
தீர்த்தங்கரர்களின் சிலைகள், கிமு 42
-
மகாவீரரின் சிற்பங்கள்
-
குப்தர் காலத்து சமணத்துறவியின் தலைச்சிற்பம்
-
பார்சுவநாதரின் சிற்பம், கிபி 1014
-
நேமிநாதரின் சிற்பம், 12-ஆம் நூற்றாண்டு
-
பார்சுவநாதர் சிற்பம், பிற்கால குப்தர்கள் காலம்
-
நேமிநாதர் சிற்பம், கிபி 12-ஆம் நூற்றாண்டு
-
கனிஷ்கரின் கல்வெட்டு
-
தூண்கள்
-
சமண யட்சினி அம்பிகையின் சிற்பம்
-
சமண யட்சினி சக்ரேஷ்வரி தேவியின் சிற்பம்
மேற்கோள்கள்
தொகு- ↑ The Jain stûpa and other antiquities of Mathurâ by Smith, Vincent Arthur Plate XIV
- ↑ Chandra, Ramaprasad (1919). Memoirs of the archaeological survey of India no.1-5. p. 22.
- ↑ 3.0 3.1 Smith 1901, ப. Introduction.
- ↑ The Jaina Stupa at Mathura: Art and Icons, Renuka Porwal, Prachya Vidyapeeth, Shajapur, 2016
- ↑ The Jain Stupa And Other Antiquities Of Mathura. 1901. p. 53.
உசாத்துணை
தொகு- Smith, Vincent Arthur (1901), The Jain stupa and other antiquities of Mathura, Allahabad, Printed by KFrank Luker, Superintendent, Government Press, North-Western Provinces and Oudh
- Das, Kalyani (1980), Early Inscriptions of Mathurā
- Thomas, Edward (1877), "Jainism or The early faith of Asoka", Nature, London: London, Trübner & co., 16 (407): 329, Bibcode:1877Natur..16..329., எண்ணிம ஆவணச் சுட்டி:10.1038/016329a0