கஞ்சிக்கோடு

கேரள சிற்றூர்

கஞ்சிக்கோடு (Kanjikode) என்பது கேரளத்தின் பாலக்காடுக்கு கிழக்கே 13 கிமீ (8.1 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஒரு தொழில் நகரமாகும்.[2] காஞ்சிக்கோடு கேரளத்தில் கொச்சிக்கு அடுத்து இரண்டாவது பெரிய தொழில்துறை மையமாக உள்ளது.[3] இந்த ஊர் புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது. பாலக்காடு நகரின் வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதிகளில் இதுவும் ஒன்று. கேரளத்தில் உள்ள முதல் மற்றும் ஒரே இந்திய தொழில்நுட்பக் கழகமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பாலக்காடு கஞ்சிக்கோட்டில் நிறுவப்பட்டது.[4]

கஞ்சிக்கோடு
Kanchikode
ஊர்
கஞ்சிக்கோடில் தேசிய நெடுஞ்சாலை 544
கஞ்சிக்கோடில் தேசிய நெடுஞ்சாலை 544
கஞ்சிக்கோடு is located in கேரளம்
கஞ்சிக்கோடு
கஞ்சிக்கோடு
கேரளத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 10°47′51″N 76°44′35″E / 10.7976°N 76.7430°E / 10.7976; 76.7430
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • வகைபுதிச்சேரி ஊராட்சி
ஏற்றம்
84 m (276 ft)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்[1]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
678621
தொலைபேசி குறியீடு0491
வாகனப் பதிவுKL-09
Parliament constituencyபாலக்காடு
சட்டமன்றத் தொகுதிமலம்புழா

அமைவிடம்

தொகு

காஞ்சிக்கோடு பாலக்காட்டில் இருந்து சுமார் 13 கி. மீ (8.1 மை) தொலைவிலும், கோயம்புத்தூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 544 வழியாக 41 கி. மீ (25 மை) தொலைவிலும் அமைந்துள்ளது.

பொருளாதாரம்

தொகு

கஞ்சிக்கோடு கேரளத்தின் மிகப்பெரிய தொழில்துறை பகுதிகளில் ஒன்றாகும். இங்கு இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஐடிஐ), இன்ஸ்ட்ரூமென்டேஷன் லிமிடெட்,[5] ஃப்ளூயிட் கன்ட்ரோல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்,[6] செயிண்ட்-கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (முன்னர் எஸ்இபிஆர் ரெஃப்ராக்டரீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்), பாட்ஸ்பின் இந்தியா லிமிடெட், பெப்சி, பிபிஎஸ் ஸ்டீல் (கெரெலா) பிரைவேட் லிமிடெட், யுனைடெட் ப்ரூவரீஸ், எம்பீ டிஸ்டில்லரீஸ், மரிகோ, பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பிஇஎம்எல்), ரூப்ஃபிலா இன்டர்நேஷனல் லிமிடெட், ஆர்யா வைத்யா பார்மசி ஆகியவை உற்பத்தி கூடங்களைக் கொண்டுள்ளன. மேலும் பல தொழில்கள் மற்றும் உற்பத்தி அலகுகள் இங்கு உள்ளன. இது கொச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தொழில்துறை பகுதியாகும். மேலும் இங்கு ஹோலி டிரினிட்டி,[7] கேந்திரிய வித்யாலயா பள்ளி போன்ற பள்ளிகள் அமைந்துள்ளன. ஒரு தீயணைப்பு நிலையமும் அமைந்துள்ளது.

 
தே. நெ544, கஞ்சிக்கோடு பக்கத்தில் உள்ள வணிக வளாகம்

கல்வி

தொகு
  • இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பாலக்காடு
  • கேந்திரிய வித்யாலயா, காஞ்சிகோடு
  • வி வி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  • அஹலியா எடு-சுகாதார வளாகம், பாலக்காடு
  • சாத்தம்குளம் எம்பிஏ கல்லூரி-சிபிஎஸ்
 
சத்ரபாடி சந்திப்பு, காஞ்சிக்கோடு.jpg

அணுகல்

தொகு

கஞ்சிக்கோட்டில் இரயில் பெட்டி தொழிற்சாலையும், இந்திய தொழில்நுட்பக் கழகமும் வரவிருக்கின்றன. வாளையார் சோதனைசாவடி அருகில் அமைந்துள்ளது. இங்கு உள்ளூர் தொடருந்துகள் மட்டுமே நிறுத்தப்படும் ஒரு தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. பாலக்காடிலிருந்து கோயம்புத்தூருக்குச் செல்லும் கே. எஸ். ஆர். டி. சி. பேருந்து சேவைகளும், பாலக்காட்டில் இருந்து வாலையாருக்குச் செல்லும் உள்ளூர் பேருந்துகளும் அவ்வப்போது காஞ்சிக்கோட்டை கடந்து செல்கின்றன. இங்கிருந்து மலம்புழா மற்றும் சிற்றூருக்கு பேருந்து வழித்தடங்கள் உள்ளன. பெட்ரோல் பம்புகள், தானியங்கி பணப் பெறிகள், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன. காஞ்சிக்கோடு மலம்புழா சட்டமன்றத் தொகுதி மற்றும் பாலக்காடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

கஞ்சிக்கோடு ஊரானது பாலக்காடு நகரின் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 544 கோயம்புத்தூரையும், பெங்களூரையும் இணைக்கிறது. கேரளத்தின் பிற பகுதிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை 966 வழியாக செல்லலாம். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் பாலக்காடு சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகும். அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோயம்புத்தூரில் உள்ளது.

 
அணுகு சாலை கஞ்சிக்கோடு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Kerala Official Language (Legislation) Act, 1969" (PDF).
  2. "Pin Code: Kanjikode, Palakkad, Kerala, India, Pincode.net.in". pincode.net.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-23.
  3. "Kerala: Kanjikode becoming a medical oxygen hub". The Times of India (in ஆங்கிலம்). April 28, 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  4. "Kerala's first IIT in Palakkad to get a new campus, Nila campus inaugurated". The News Minute (in ஆங்கிலம்). 2020-10-23. பார்க்கப்பட்ட நாள் 2022-06-26.
  5. "Instrumentation Limited, Palakkad, Kerala, India - Manufacturers and exporters of control, butterfly, globe, safety relief, bellows sealed, engineering, angle, high pressure valves and actuator, instrumentation, transmitter, desuper heater, power cylinder, orifice, cavitation and positioner". ilpgt.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-23.
  6. "Fluid Control Research Institute -". FCRI India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-23.
  7. "Holy Trinity School". www.schoolholytrinity.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சிக்கோடு&oldid=4130772" இலிருந்து மீள்விக்கப்பட்டது