கடச்சனேந்தல்

கடச்சனேந்தல் (ஆங்கில மொழி: Kadachanendhal) என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4] கடைச் சிலம்பு ஏந்தல் என்ற பெயரே மருவி கடச்சனேந்தல் என்றாகி விட்டது. சிலப்பதிகாரத்தில், கோவலன் மற்றும் அவரது மனைவி கண்ணகி, சமணத் துறவி கவுந்தியடிகளால் மதுரைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, முதல் நாள் தங்க வைக்கப்பட்ட இடமே இந்த கடச்சனேந்தல் ஆகும்.[5] மதுரையிலிருந்து அழகர்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ள கடச்சனேந்தல் பகுதிக்கு அருகில் ஒவ்வோர் ஆண்டும் சூன் மாதம் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கி மனதுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும்.[6]

கடச்சனேந்தல்
Kadachanendhal

கடைச் சிலம்பு ஏந்தல்
புறநகர்ப் பகுதி
கடச்சனேந்தல் Kadachanendhal is located in தமிழ் நாடு
கடச்சனேந்தல் Kadachanendhal
கடச்சனேந்தல்
Kadachanendhal
கடச்சனேந்தல், மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°58′39″N 78°10′13″E / 9.9776°N 78.1703°E / 9.9776; 78.1703
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்187 m (614 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்625107
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, மூன்றுமாவடி, அப்பன்திருப்பதி, கோ. புதூர், பீபி குளம், ஊமச்சிகுளம், யா. ஒத்தக்கடை, தல்லாகுளம், கே. கே. நகர், கோரிப்பாளையம் மற்றும் மாட்டுத்தாவணி
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்மருத்துவர் எஸ். அனீஷ் சேகர், இ. ஆ. ப.
இணையதளம்https://madurai.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 187 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கடச்சனேந்தல் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 9°58′39″N 78°10′13″E / 9.9776°N 78.1703°E / 9.9776; 78.1703 ஆகும்.

மதுரை, மூன்றுமாவடி, அப்பன்திருப்பதி, கோ. புதூர், பீபி குளம், ஊமச்சிகுளம், யா. ஒத்தக்கடை, தல்லாகுளம், கே. கே. நகர், கோரிப்பாளையம் மற்றும் மாட்டுத்தாவணி ஆகியவை கடச்சனேந்தல் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

புனித அந்தோணியார் தேவாலயம் ஒன்று கடச்சனேந்தல் பகுதியில் அமைந்துள்ளது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. To Paramacivan̲ (1989). Al̲akar Kōyil. Patipputtur̲ai, Maturai Kāmarācar Palkalaik Kal̲akam.
  2. Mu Irāmacuvāmi (1983). Tōṟpāvai niḻaṟkūttu. Patipputuṟai, Maturai Kāmarācar Palkalaikkaḻakam.
  3. Nana Yaw Obiri-Yeboa Boaitey (2004). Preface to Spoken Tamil (in ஆங்கிலம்). University of California, Berkeley.
  4. "மதுரை மாநகர் கே.புதூர், பீ.பீ.குளம், அய்யர் பங்களா, கடச்சனேந்தல், மாட்டுத்தாவணியில் கனமழை". www.dinakaran.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
  5. kannagitemple (2016-02-18). "கடச்சனேந்தல்". kannagitemple (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
  6. "கொத்துக்கொத்தாக கொன்றை பூக்கள் - Dinamalar Tamil News" (in ta). 2023-06-26. https://m.dinamalar.com/detail.php?id=3358359. 
  7. "St. Antony's Church – Kadachanendal – Archdiocese of Madurai" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடச்சனேந்தல்&oldid=3756032" இலிருந்து மீள்விக்கப்பட்டது