ஊமச்சிகுளம்

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

ஊமச்சிகுளம் (ஆங்கில மொழி: Oomachikulam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

ஊமச்சிகுளம்
Oomachikulam
ஊர்மெச்சிகுளம்
ஊமச்சிகுளம் Oomachikulam is located in தமிழ் நாடு
ஊமச்சிகுளம் Oomachikulam
ஊமச்சிகுளம்
Oomachikulam
ஊமச்சிகுளம், மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°59′39″N 78°08′45″E / 9.994200°N 78.145800°E / 9.994200; 78.145800
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்
172 m (564 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
தொலைபேசி குறியீடு+91452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, செல்லூர், நரிமேடு, பீபி குளம், சின்ன சொக்கிகுளம், சிம்மக்கல், தல்லாகுளம், கோ. புதூர், கோரிப்பாளையம், செனாய் நகர், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தத்தனேரி, கூடல் நகர் மற்றும் ஆரப்பாளையம்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்சு. வெங்கடேசன்
இணையதளம்https://madurai.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 172 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஊமச்சிகுளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°59′39″N 78°08′45″E / 9.994200°N 78.145800°E / 9.994200; 78.145800 ஆகும். மதுரை, செல்லூர், நரிமேடு, பீபி குளம், சின்ன சொக்கிகுளம், சிம்மக்கல், தல்லாகுளம், கோ. புதூர், கோரிப்பாளையம், செனாய் நகர், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தத்தனேரி, கூடல் நகர் மற்றும் ஆரப்பாளையம் ஆகியவை ஊமச்சிகுளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதி வரை, 35 கி.மீ. நீளத்தில் ரூ.1,028 கோடி செலவில் நான்கு வழிச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டு, அதன் ஒரு கட்டமாக தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை 7.5 கி.மீ. தூரத்தில் ரூ.612 கோடி செலவில் பாலம் கட்டப்பட்டுள்ளது.[2] மேலும், மதுரையிலிருந்து நத்தம் வழியாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் துவரங்குறிச்சி பகுதியை இணைக்கும் வண்ணம் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஊமச்சிகுளம் கண்மாய் கரைகளை அழகுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.[3] ஊமச்சிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாலம் உயர்மட்டப் பாதை கொண்டது.[4] மேலும் இச்சாலையில் குறுகிய இடைவெளிகளில் அதிகளவில் மையத்திட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளதால், விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.[5] இந்த நான்கு வழிச் சாலை, தமிழகத்திலேயே மிக நீளமான சாலையாக அமைவதுடன், பயண தூரத்தை வெகுவாகக் குறைக்கும் என்று அறியப்படுகிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Madras (India : State) Legislature Legislative Council (1965). Madras Legislative Council Debates (in ஆங்கிலம்). Legislative Council Department.
  2. "மதுரையில் "பிரம்மாண்டம்"- 7.5 கிமீ.. ரூ.612 கோடி! தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம் விரைவில் திறப்பு". பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
  3. "Elevated corridor linking Madurai, Tiruchy to be unveiled in January". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
  4. Staff Reporter (2019-11-11). "Oomachikulam residents allege police torture, extortion". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
  5. "மதுரை புதுநத்தம் சாலையில் 'சென்டர் மீடியம் கேப்'-களை குறைக்க கோரிக்கை - விபத்துகள் அதிகரிப்பதாகப் புகார்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
  6. "தமிழகத்திலேயே மிக நீளமான மதுரை - நத்தம் பறக்கும் பால கட்டுமானப் பணி 95% நிறைவு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊமச்சிகுளம்&oldid=3656824" இலிருந்து மீள்விக்கப்பட்டது