கடல் கல்லறை
கடல் கல்லறை (Marine Cemetery) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டின் பேப்பூர் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு கலை நிறுவல் அமைப்பாகும். அழிந்து வரும் ஒன்பது கடல் மற்றும் ஆற்றங்கரை உயிரினங்களுக்காக இந்நிறுவல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடற்கரையில் இருந்து சேகரிக்கப்பட்ட 2,000 நெகிழிக் குப்பிகளால் ஆனதாகும். கடல் கல்லறை 2019 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
மாலையில் கடல் கல்லறை | |
ஆள்கூறுகள் | 11°09′48″N 75°48′13″E / 11.163281°N 75.803560°E |
---|---|
இடம் | பேப்பூர் கடற்கரை, கோழிக்கோடு, கேரளம், இந்தியா |
வகை | நிறுவல் |
கட்டுமானப் பொருள் | இரும்பு சட்டங்கள், நெகிழிப் புட்டிகள் |
திறக்கப்பட்ட நாள் | திசம்பர் 4, 2019 |
அர்ப்பணிப்பு | அழிந்து வரும் ஒன்பது நீரில் வாழும் இனங்கள் |
வரலாறு
தொகுநெகிழிக் கழிவுகள், நீர் மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் அதிகப்படியான சுரண்டல் போன்றவற்றால் அழிந்து வரும் கடல் மற்றும் ஆற்றங்கரை உயிரினங்களுக்காக கடல் கல்லறை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது . கலை நிறுவல் அமைப்பு ஒரு விழிப்புணர்வு முயற்சியாகும். [1] [2]
நவம்பர் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சுமார் 80 தன்னார்வலர்கள் குழு பேப்பூர் கடற்கரையை சுத்தம் செய்து 800 கிலோவுக்கும் மேற்பட்ட நெகிழிக் குப்பையை சேகரித்தது. இக்குப்பை மறுசுழற்சிக்காக கோழிக்கோடு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. 2,000 நெகிழிக் குப்பிகள் மட்டும் ஒப்படைக்காமல் விடப்பட்டன, பின்னர் அவை கலை நிறுவலுக்குப் பயன்படுத்தப்பட்டன. [1] [2] பேப்பூர் துறைமுக நிர்வாகம், கோழிக்கோடு மாவட்ட அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் தூய்மையான கடற்கரை இயக்கத்தின் கீழ், காலநிலை ஆர்வலர் ஆகாசு ராணிசன் மற்றும் சொறிமீன் நீர்விளையாட்டு அமைப்பினர் மூலம் இந்த நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டது. [3] உலக வனவிலங்கு பாதுகாப்பு தினமான திசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று 2019 ஆம் ஆண்டு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் எசு.சாம்பசிவ ராவ் மற்றும் பேப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.கே.சி மம்மது கோயா ஆகியோரால் திறக்கப்பட்டது. [1] [2] [4] [5]
நிறுவல்
தொகுஇந்த நிறுவலில் ஒன்பது குறிப்பான்கள் உள்ளன, ஒவ்வொன்றும் அழிந்து வரும் கடல் மற்றும் ஆற்றங்கரை உயிரினங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டவையாகும். கல்லறை வடிவ இரும்பு சட்டங்களில் நெகிழிக் குப்பிகளால் இவை கட்டப்பட்டுள்ளன. இவற்றில் எட்டு குறிப்பான்கள் 4 அடிகள் (1.2 m) உயரத்தில், கடல் குதிரை, கிளி மீன், தோல்முதுகு ஆமை, , கடல் ஆமைகள், கழுகு கதிர் மீன்கள், வேளா மீன், ஆவுளியா அல்லது கடற்பசு, வரிக்குதிரை சுறா, மற்றும் சுத்தியல் சுறா ஆகிய உயிரினங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. எஞ்சியிருக்கும் ஒரு குறிப்பான் 6 அடிகள் (1.8 m) உயரம் கொண்டதாகும். அழிந்து வரும் பூர்வீக நன்னீர் மீன் இனமான உரோசுலின் சுறாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. [1] [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Kozhikode's new marine cemetery is a call to action to save the world" (in அமெரிக்க ஆங்கிலம்). 13 December 2019. பார்க்கப்பட்ட நாள் 14 December 2019."Kozhikode's new marine cemetery is a call to action to save the world". Architectural Digest India. 13 December 2019. Retrieved 14 December 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "World's first marine cemetery unveiled in Kerala" (in en). 12 December 2019. https://www.hindustantimes.com/it-s-viral/world-s-first-marine-cemetery-unveiled-in-kerala/story-S8F4fFzASv6rATgkZCZrhO.html."World's first marine cemetery unveiled in Kerala". Hindustan Times. 12 December 2019. Retrieved 14 December 2019.
- ↑ "This 'Marine Cemetery' in Kerala is Dedicated to Aquatic Life Killed By Plastic Pollution". 5 December 2019. பார்க்கப்பட்ட நாள் 7 January 2020.
- ↑ "Kerala gets world's first marine cemetery". 12 December 2019. பார்க்கப்பட்ட நாள் 14 December 2019.
- ↑ "Kerala gets world's first marine cemetery". 13 December 2019. பார்க்கப்பட்ட நாள் 14 December 2019.