கர்மீத் தேசாய்
கர்மீத் தேசாய் (Harmeet Desai) இந்திய நாட்டினைச்சார்ந்த டேபிள் டென்னிசு வீரர் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டு சூலை மாதம் 19 ஆம் தேதியன்று பிறந்தார். 2021 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் நிலவரப்படி இவர் தற்போது உலக தரவரிசையில் 71வது இடத்தில் உள்ளார். இவர் குசராத்து மாநிலம் சூரத்து மாநகராட்சியினைச் சேர்ந்தவர் ஆவார். [1] [2] [3] [4] 2018 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவின் கோல்ட் கோசுடில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில், [5] சரத் கமல், அந்தோணி அமல்ராசு, சத்தியன் ஞானசேகரன் மற்றும் சனில் செட்டியுடன் ஆடவர் பிரிவில் தங்கமும், சனில் செட்டியுடன் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெண்கலமும் வென்றார். [6] ஒடிசா மாநிலம் கட்டக்கில் 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுநலவாய டேபிள் டென்னிசு சாம்பியன்சிப் போட்டியில், கர்மீத் தேசாய் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார். இந்தியாவின் ஆடவர் ஒற்றையர் பட்டத்தைப் பிடித்த சத்தியன் ஞானசேகரனை தோற்கடித்தார். [7] 2019 ஆம் ஆண்டு இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அருச்சுனா விருது இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது [8] .
கர்மீத் தேசாய் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Personal information | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேசியம் | இந்தியன் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வதிவிடம் | டுமாசு, சூரத்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 19-சூலை-1993 (வயது 30) சூரத்து, குசராத்து, இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
சாதனைகள்
தொகுஆத்திரேலியா நாட்டில் உள்ள குயின்சுலாந்தில் உள்ள கோல்ட் கோசுட் நகரில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் அணியில் தங்கப் பதக்கமும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார். மேசைப்பந்தாட்டத்தில் இவரது சிறந்த செயல்திறனுக்காக 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் இவருக்கு அருச்சுனா விருது வழங்கப்பட்டது.
இவர் 2019 ஆம் ஆண்டு சர்வதேச மேசைப்பந்தாட்ட கூட்டமைப்பு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற இந்தோனேசியா ஓபன் போட்டியில் வென்றார். ஆசிய கண்டத்தில் சர்வதேச மேசைப்பந்தாட்ட கூட்டமைப்பு போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்பதால் இது ஒரு வரலாற்று தருணம் ஆகும். 2020 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில், இவர் 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய சாம்பியன்சிப் பட்டத்தை வென்றதன் மூலம் வரலாற்றை உருவாக்கினார். ஏனெனில் அவர் குசராத்து மாநிலத்திலிருந்து மேசைப்பந்தாட்டத்தில் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் வீரர் ஆவார். இளையோர் சாம்பியன்சிப்பை வென்று வரலாறு படைத்த இந்திய இளையோர் அணியில் உறுப்பினராக இருந்தார். இந்தோனேசியா நாட்டின் சகார்த்தா நகரில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
2022 ஆம் ஆண்டு பிர்மிங்காமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் சரத் கமல், சத்தியன் ஞானசேகரன் மற்றும் சனில் செட்டியுடன் ஆண்கள் அணி பிரிவில் தேசாய் தங்கப் பதக்கம் வென்றார். [9] [10]
2023 ஆம் ஆண்டில், அல்டிமேட் கூடைப்பந்தாட்ட சீசன் 4 பிரிவில், கர்மீத் தேசாய் அணியான கோவா சேலஞ்சர்சு சென்னை லயன்சு அணியை தோற்கடித்து சாம்பியனாகியது. [11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Harmeet Desai touches career-high 95, three Indians in top-100". Indian Express. 3 May 2017. பார்க்கப்பட்ட நாள் 9 April 2018.
- ↑ "Harmeet Desai". பார்க்கப்பட்ட நாள் 20 April 2018.
- ↑ "This is the best moment of my career: Harmeet Desai". 11 April 2018. பார்க்கப்பட்ட நாள் 20 April 2018.
- ↑ "CWG 2018: Winning gold is like dream coming true, says Harmeet Desai's mother". Indian Express. 10 April 2018. பார்க்கப்பட்ட நாள் 20 April 2018.
- ↑ "Commonwealth Games 2018: Sharath Kamal leads India to gold medal in men's table tennis team event". 10 April 2018. https://www.firstpost.com/sports/commonwealth-games-2018-sharath-kamal-leads-india-to-gold-medal-in-mens-team-event-4424473.html. பார்த்த நாள்: 15 April 2018.
- ↑ "CWG 2018: Sanil Shetty, Harmeet Desai win Bronze in table tennis men's doubles". 14 April 2018. https://www.indiatoday.in/sports/story/cwg-2018-sanil-shetty-harmeet-desai-win-bronze-in-table-tennis-men-s-doubles-1212187-2018-04-14. பார்த்த நாள்: 21 April 2018.
- ↑ "Commonwealth Table Tennis Championships: Harmeet Desai claims the men's singles title.". 23 July 2019. https://www.firstpost.com/sports/commonwealth-table-tennis-championships-harmeet-desai-ayhika-mukherjee-win-mens-and-womens-titles-as-india-claim-7-golds-7036411.html. பார்த்த நாள்: 23 July 2019.
- ↑ "Arjuna Awards 2019: Harmeet Desai receives Arjuna Award.". 28 August 2019. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/it-was-my-childhood-dream-to-receive-arjuna-award-harmeet-desai/articleshow/70873407.cms. பார்த்த நாள்: 28 August 2019.
- ↑ "Men's table tennis tennis team clinches India's fifth gold medal". பார்க்கப்பட்ட நாள் 2 August 2022.
- ↑ "Harmeet pulled off a crucial win in the third singles. He just raised his arms in the moment of victory. His win gave India a 3-1 win and the gold medal". பார்க்கப்பட்ட நாள் 3 August 2022.
- ↑ "Goa Challengers are UTT Season 4 Champions!".