காகர்லா சுப்பா ராவ்
காகர்லா சுப்பா ராவ் (Kakarla Subba Rao) (25 ஜனவரி 1925 – 16 ஏப்ரல் 2021) ஓர் இந்திய கதிரியக்க நிபுணராவார். இவர் ஐதராபாத்தில் உள்ள நிசாமின் மருத்துவ அறிவியல் கழகத்தின் முதல் இயக்குநராக பணியாற்றினார். மருத்துவத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக, சுப்பா ராவுக்கு 2000 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[1] இவர் வட அமெரிக்காவின் தெலுங்கு சங்கத்தின் நிறுவனராகவும் மற்றும் அதன் தலைவராகவும் இருந்தார்.[2]
காகர்லா சுப்பா ராவ் | |
---|---|
பிறப்பு | கிருஷ்ணா மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா | 25 சனவரி 1925
இறப்பு | 16 ஏப்ரல் 2021 ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா | (அகவை 96)
கல்வி | ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி (இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல்) நியூயார்க் பல்கலைக்கழகம் |
பணி |
|
மருத்துவப் பணிவாழ்வு | |
குறிப்பிடத்தக்க விருதுகள் | பத்மசிறீ (2000) |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுசுப்பா ராவ் 25 ஜனவரி 1925 அன்று இந்தியாவில் இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள பெடமுட்டேவி என்ற சிறிய கிராமத்தில் ஒரு நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்தார்.[3] சல்லப்பள்ளியிலுள்ள எஸ். ஆர். உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து 1937 முதல் 1944 வரை மச்சிலிப்பட்டணத்திலுள்ள இந்து கல்லூரியில் படித்தார். 1950 ஆம் ஆண்டில் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் ஆந்திரா மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் முடித்தார்.[3] மருத்துவப் பட்டம் பெற்ற பிறகு 1951 ஆம் ஆண்டில் விசாகப்பட்டினத்திலுள்ள கே. ஜி. மருத்துவமனையில் பயிற்சி பெற்றார். பின்னர் இவர் உதவித்தொகையில் உயர் கல்விக்காக அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு இவர் பிராங்க்ஸ் மருத்துவமனையில் தனது முதுகலை மருத்துவத்தையும் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கத்தில் முதுகலையும் முடித்தார்.[4] இந்த நேரத்தில், தனது கல்விக்கு பணம் செலுத்துவதற்காக பிராங்க்ஸ் மருத்துவமனையில் இரவு நேர தொழில்நுட்ப வல்லுநராகவும் பணியாற்றினார்.[4] 1954 மற்றும் 1956 க்கு இடையில், நியூயார்க் மற்றும் பால்டிமோர் மருத்துவமனைகளில் கதிரியக்கவியல் சிறப்பு உறுப்பினராக இருந்தார். 1955 ஆம் ஆண்டில் கதிரியக்கவியலில் அமெரிக்க வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்றார்.[3]
தொழில் வாழ்க்கை
தொகுஅமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய சுப்பா ராவ் உசுமானியா மருத்துவக் கல்லூரிரியில் கதிரியக்க நிபுணராக பணியில் சேர்ந்தார். ஆனாலும் தனது கல்வியை முடிக்க மீண்டும் அமெரிக்கா திரும்பினார்.[5][6][7][8] அமெரிக்காவுக்குத் திரும்புவதற்கான இவரது முடிவு 1969 இல் தெலுங்கானா போராட்டத்தின் போது இவரது வீடு எரிக்கப்பட்ட ஒரு சம்பவத்தால் தூண்டப்பட்டது. அமெரிக்காவில் இவர் மான்டிஃபியோர் மருத்துவ மையத்தில் சேர்ந்தார். அங்கு தனது கல்வியை முடித்தார். மேலும் உதவி பேராசிரியராகவும் பின்னர் பேராசிரியராகவும் ஆனார்.[4] நியூயார்க்கின் பிராங்க்ஸில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியில் கதிரியக்க பேராசிரியராக பணியாற்றினார்.[9] இந்த நேரத்தில், இவர் சர்வதேச எலும்பு சங்கத்தின் உறுப்பினராகவும், அதன் ஆசிரியர் குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றினார்.[4] சுப்பா ராவ் வட அமெரிக்காவின் தெலுங்கு சங்கத்தின் நிறுவனராகவும் மற்றும் அதன் முதல் தலைவராகவும் இருந்தார். இது அமெரிக்காவில் தெலுங்கு மொழி பேசுபவர்களுக்கான ஒரு அமைப்பாகும்.[10]
மறைந்த ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். டி. ராமராவின் அழைப்பின் பேரில், சுப்பா ராவ் 1986 ஆம் ஆண்டில் இந்தியா திரும்பி நிசாம் எலும்பியல் மருத்துவமனை சேர்ந்தார். மருத்துவமனையை மேம்படுத்த இவர் நிறைய பணிகளை மேற்கொண்டார். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களைப் போலவே ஒரு முதன்மையான மருத்துவ நிறுவனமாக அதை மாற்றினார். இது இப்போது நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது.[4] ஆரம்ப ஆண்டுகளில், இவர் தனது பணிக்காக ஊதியம் ஏதும் பெறவில்லை. 1985 மற்றும் 1990 முதல், ராவ் அதன் முதல் இயக்குநராகவும், மீண்டும் 1997 மற்றும் 2004 க்கு இடையில், ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை பணியாற்றினார்.[11] இவரது முயற்சிகள் நோயாளியின் சேவை, கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒரு மதிப்புமிக்க மருத்துவ நிறுவனமாக மருத்துவமனையை நிறுவியது. அதே நேரத்தில் குறைந்த கட்டணம் மற்றும் அணுகலில் கவனம் செலுத்தியது.[12] சிறீ பத்மாவதி மகளிர் மருத்துவக் கல்லூரி, கோனசீமா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை, சர்வதேச கல்விக் கழகம் மற்றும் காகர்லா சுப்பா ராவ் கதிரியக்க கல்வி சேவைகளின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் என். டி. ராமராவின் தனிப்பட்ட மருத்துவராகவும் பணியாற்றினார்.[13]
விருது
தொகுமருத்துவத் துறையில் இவரது மதிப்புமிக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், இந்திய அரசு 2000 ஜனவரி 26 அன்று இவருக்கு பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது.[14]
இறப்பு
தொகுவயது தொடர்பான நோய்கள் காரணமாக 2021 ஏப்ரல் 16 அன்று தனது 96 வயதில் செகந்திராபாத் உள்ள கிருஷ்ணா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் ராவ் காலமானார்.[1]
புத்தகங்கள்
தொகு- Subba Rao, Dr Karkala (2013). A Doctors Story of Life & Death. Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8184301809.
- Subba Rao, Dr Karkala (2003). Diagnostic radiology and imaging. New Delhi: Jaypee Bros. Medical Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-8061-069-1. இணையக் கணினி நூலக மைய எண் 601059826.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Renowned radiologist and first Director of NIMS, Kakarla Subba Rao passes away". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.
- ↑ "Leadership - TANA". tana.org. Archived from the original on 18 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 17 April 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 3.0 3.1 3.2 Andhra Entrepreneurs: Past, Present and Future. Chennai: Indian Innovators Association. 2018. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781643249346. பார்க்கப்பட்ட நாள் 23 July 2020.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 ".:Indian Radiology:". www.indianradiologist.com. பார்க்கப்பட்ட நாள் 17 April 2021.
- ↑ "Dr. Kakarla's profile". Archived from the original on 2007-09-08. பார்க்கப்பட்ட நாள் 2024-06-17.
- ↑ "Dr. Kakarla Subba Rao – a Profile".
- ↑ "Dr. Rao formally hands over charge of Director, NIMS" இம் மூலத்தில் இருந்து 2004-08-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040804022515/http://www.hindu.com/2004/07/09/stories/2004070904650400.htm.
- ↑ "Tele-Radiology set up of Kakarla Subba Rao Radiological and Imaging Educational Sciences Trust, Hyderabad".
- ↑ "Renowned radiologist Kakarla Subba Rao is no more". @businessline (in ஆங்கிலம்). 16 April 2021. பார்க்கப்பட்ட நாள் 17 April 2021.
- ↑ "Past Presidents of TANA". Telugu Association of North America.
- ↑ "Noted radiologist and former NIMS director Kakarla Subba Rao passes away". www.thehansindia.com (in ஆங்கிலம்). 16 April 2021. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.
- ↑ "Noted radiologist Kakarla Subba Rao passes away". https://www.thehindu.com/news/national/andhra-pradesh/noted-radiologist-kakarla-subba-rao-passes-away/article34338970.ece.
- ↑ "Renowned Radiologist Dr. Kakarla Subba Rao Passes Away". Gulte (in அமெரிக்க ஆங்கிலம்). 16 April 2021. பார்க்கப்பட்ட நாள் 17 April 2021.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.