கானா (கவிஞர்)

கானா (Khana) டாக் அல்லது லீலாவதி என்றும் அழைக்கப்படுகிறார். (IPA: [khaw-naa]) ஒரு வங்காளக் கவிஞர் மற்றும் பழம்பெரும் சோதிடர் ஆவார். இவர் கி.பி ஒன்பதாம் மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இடைக்கால வங்காள மொழியில் கவிதைகளை இயற்றினார். மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் உள்ள தற்போதைய பராசத்தில் உள்ள தியுலியா ( சந்திரகேதுகர், பெரச்சம்பாவுக்கு அருகில்) கிராமத்துடன் தொடர்புடையவர்.

கானா
பிறப்புஅண். 8th–12-ஆம் நூற்றாண்டு பொஊ
வங்காளம்
தொழில்கவிஞர், சோதிடர்
காலம்பாலப் பேரரசு
குறிப்பிடத்தக்க படைப்புகள்" கானார் பச்சன்"

கானார் பச்சன் (அல்லது வச்சன் ) என்று அழைக்கப்படும் இவரது கவிதை ( வங்காள மொழி: খনার বচন ; 'கானாவின் வார்த்தைகள்' என்று பொருள்), வங்காள இலக்கியத்தின் ஆரம்பகால படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.இவரது படைப்புகள் விவசாயத்தினைக் கருப்பொருள்களுக்காகக் கொண்டுள்ளது.[1]

புராணக் கதை

தொகு
 
மேற்கு வங்கம், பெரச்சம்பா, சந்திரகேதுகர்,பிரிதிபா சாலையில் உள்ள கானா-மிகிர் அல்லது பராகா-மிகிர் மேடு.

கானாவின் புராணக்கதை (சில இடங்களில் லீலாவதி என்றும் அழைக்கப்படுகிறது) பிரக்ஜோதிசுபூர் ( வங்காள / அசாம் எல்லை) அல்லது தெற்கு வங்காளத்தில் சந்திரகேதுகர் (கானா மற்றும் மிகிர் பெயர்களுடன் தொடர்புடைய இடிபாடுகளுக்கு இடையே ஒரு மண் திட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது) உடனான இவரது தொடர்பை மையமாகக் கொண்டது. மேலும் இவர் இரண்டாம் சந்திரகுப்த விக்ரமாதித்யாவின் புகழ்பெற்ற நவரத்ன சபையில் இருந்த வானியலாளர் மற்றும் கணிதவியலாளரான வராகமிகிரரின் மருமகள் ஆவார்.

தெய்வசுன வராகமிகிர் (505-587), வராகா அல்லது மிகிரா என்றும் அழைக்கப்படுகிறார், உஜ்ஜயினில் (அல்லது வங்காளத்தில், சில புராணங்களின்படி) பிறந்த ஓர் இந்திய வானியலாளர், கணிதவியலாளர் மற்றும் சோதிடர் ஆவார். இந்திய பாராளுமன்றக் கட்டிடத்தில் வராகமிகிரா மற்றும் ஆர்யபட்டாவின் படங்கள் உள்ளன. இவரது வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை என்றாலும்,இவர் தெற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக, கானாவின் அறிவுரைகள் வங்காளத்தின் கிராமப்புறப் பகுதிகளில் (நவீன மேற்கு வங்காளம், பங்களாதேஷ் மற்றும் பீகாரின் சில பகுதிகள்) ஓர் ஆரக்கிள் தன்மையைப் பெற்றுள்ளது. அசாமி மற்றும் ஒரியாவிலும் பண்டைய பதிப்புகள் உள்ளன. "கொஞ்சம் உப்பு, சிறிது கசப்பு, எப்பொழுதும் வயிறு நிரம்புவதற்கு முன் நிறுத்துங்கள்" போன்ற அறிவுரைகள் காலம் கடந்தும் நிற்பதாகக் கருதப்படுகிறது. [2] [3] [4] [5] [6]

சான்றுகள்

தொகு
  1. http://www.infobridge.org/asp/documents/4341.doc [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Azhar Islam. "Khana". Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 28 July 2015.
  3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 16 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 5 June 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: archived copy as title (link)
  4. "siddhagirimuseum.org". Archived from the original on 2011-07-28. பார்க்கப்பட்ட நாள் 2023-10-20.
  5. Saptarishis Astrology. "ISSUU - 48-KhannarVachan-1 by Saptarishis Astrology".
  6. "Hinduism in Indian Nationalism & role of Islam: Maharaja Pratapaditya Roy - Last Hindu King, Icon & Saviour of Bangabhumi".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கானா_(கவிஞர்)&oldid=4109132" இலிருந்து மீள்விக்கப்பட்டது