சந்திரகேதுகர்

சந்திரகேதுகர் அல்லது சந்திரகேது கோட்டை (Chandraketugarh) இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் வித்தியாதாரி ஆற்றின் அருகே அமைந்துள்ளது. இது கொல்கத்தா நகரத்திற்கு வடகிழக்கே 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கிபி 12-ஆம் நூற்றாண்டு முன்னர் வரை கோட்டையுடன் கூடிய நகரமாக இருந்த சந்திரகேதுகர், 12-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் சிதிலமடைந்து குன்று போல் காணப்படுகிறது.

சந்திரகேதுகர் தொல்லியல் களம்
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள்
சந்திரகேதுகர் தொல்லியல் களத்தின் சிதிலங்கள்
சந்திரகேதுகர் is located in மேற்கு வங்காளம்
சந்திரகேதுகர்
Shown within India West Bengal
இருப்பிடம்சந்திரகேதுகர், வடக்கு 24 பர்கனா மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா
ஆயத்தொலைகள்22°41′52″N 88°41′18″E / 22.69778°N 88.68833°E / 22.69778; 88.68833
வகைகுடியிருப்புப் பகுதி
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 300
பயனற்றுப்போனதுகிபி 12-ஆம் நூற்றாண்டு

சந்திரகேதுகர் தொல்லியல கள்த்தில் 1957 முதல் 1968-ஆம் ஆண்டுகள் வரை பல முறை அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.[1]

சந்திரகேது கோட்டை இந்தியாவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சினனங்களில் ஒன்றாக திகழ்கிறது. சந்திரகேது கோட்டையை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது. .[2]

சந்திரகேது கோட்டை தொல்லியல் களத்தின் சிதிலங்கள்

வரலாறு தொகு

கிமு மூன்றாம் நூற்றாண்டில் வங்காளத்தை ஆண்ட கங்காரிதாய் இராச்சியத்தின் ஒரு பகுதியாக சந்திரகேதுகர் விளங்கியது. சந்திரகேதுகர் கோட்டை மௌரியப் பேரரசு, சுங்கர், குப்தப் பேரரசு, பாலப் பேரரசு மற்றும் சென் பேரரசு காலம வரை தொடர்ந்து விளங்கியது. சந்திரகேது கோட்டையுடன் கூடிய நகரம் முக்கிய வணிக மையமாக விளங்கியது. சந்திரகேதுகர் தொல்லியல் களத்தில் கரோஷ்டி மற்றும் பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளது.

காலம் அரசமரபு ஆண்டு
காலம் I மௌரியப் பேரரசு கிமு 300-200
காலம் II சுகப் பேரரசு கிமு 200 - கிபி 50
காலம் III குசானப் பேரரசு கிபி 50-300
காலம் IV குப்தப் பேரரசு கிபி 300-500
காலம் V பிற்கால குபதர் காலம் கிபி 500-750
காலம் VI பாலப் பேரரசு-சென் பேரரசு கிபி 750-1250

[1]

சந்திரகர் தொல்லியல் களத்தின் கண்டுபிடிப்புகள் தொகு

 
சுங்கப் பேரரசர், சந்திரகேதுகர், கிமு இரண்டாம் நூற்றாண்டு - கிமு முதல் நூற்றாண்டு
 
சுங்கப் பெண்
 
சுங்கத் தாயும் சேயும்

சந்திரகேதுகர் தொல்லியல் களத்தில் கிடைத்த பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட செப்புப் பட்டயத்தில், இராமேசுவரத்திலிருந்து இலங்கைத் தீவானது 50 யோசனை தொலைவில் உள்ளது எனக்குறிப்பிட்டுள்ளது.[3][4] வங்காளத்தை ஆண்ட விஜயசிங்கனின் முத்திரைகளில், தாமிரபரணியை ஆண்ட சிங்கள மன்னரின் இளவரசி குவேனியை விஜயசிங்கன் மணந்தார் எனக்குறிப்பிட்டுள்ளது.[5]

கிமு 400 - கிமு 100 முற்பட்ட வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு காலம் முதல் குசானப் பேரரசு வரையான காலத்திய தொல்பொருட்கள் சந்திரகேதுகர் தொல்லியல் களத்தில் கண்டுக்கப்பட்டுள்ளது. பல வெள்ளி மற்றும் தங்க நாணகள் மற்றும் சந்திரகுப்த-குமாரதேவியின் தங்க நாணயங்கள் இத்தொல்லியல் களத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Dr. Gaurishankar de & Prof. Subhradip de, Prasanga: Pratna-Prantar Chandraketugarh, First Edition: 2013, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-82435-00-6
  2. "List of Ancient Monuments and Archaeological Sites and Remains of National Importance". West Bengal. Archaeological Survey of India. Archived from the original on 27 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 17 April 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  3. Mondal, Sambhu Nath (2006) (in en). Decipherment of the Indus-Brâhmî Inscriptions of Chandraketugarh (Gangâhrada)--the Mohenjodaro of East India. University of Michigan: Shankar Prasad Saha. பக். 32-51. https://books.google.com/books?id=UGVlAAAAMAAJ&dq=chandraketugarh+tamraparni&focus=searchwithinvolume&q=tamraparni. பார்த்த நாள்: 25 June 2019. 
  4. Sambhu Nath Mondal. 2006. Decipherment of the Indus-Brâhmî Inscriptions of Chandraketugarh (Gangâhrada)--the Mohenjodaro of East India. pp28 Sanskritization : "yojanani setuvandhat arddhasatah dvipa tamraparni"
  5. Sambhu Nath Mondal. 2006. Decipherment of the Indus-Brâhmî Inscriptions of Chandraketugarh (Gangâhrada)--the Mohenjodaro of East India. pp28 vijayasihasa bivaha sihaurata tambapaniah yakkhini kubanna,a" Sanskritized as "vijayasirihasya vivaha sirihapuratah tamraparnyah yaksinf kubarjuaaya"

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chandraketugarh
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகேதுகர்&oldid=3929554" இலிருந்து மீள்விக்கப்பட்டது