கான்காய் மலைகள்

கன்காய் மலைகள் (மொங்கோலியம்: Хангайн нуруу, ஹன்கைன் நுரு) என்பவை மத்திய மங்கோலியாவில்[2] அமைந்திருக்கும் ஒரு மலைத்தொடராகும். இவை உலான் பாத்தூருக்கு மேற்கில் சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இவை பண்டைய சீனாவில் யன்ரன் மலைகள் (சீனம்: 燕然山, யன்ரன் ஷன்) என்று அழைக்கப்பட்டன. 

கான்காய்
燕然山
தெரகீன் திசகான் ஏரியின் அகலப் பரப்புக் காட்சி, கான்காய் மலைகள்.
உயர்ந்த புள்ளி
உச்சிஒதகன்தெங்கர்
உயரம்4,031 m (13,225 அடி)
பெயரிடுதல்
தாயகப் பெயர்Хангай
புவியியல்
கான்காய் is located in Mongolia
கான்காய்
கான்காய்
நாடுமங்கோலியா
அயிமக்குகள்அர்கான்காய்[1], ஒவர்கான்காய், பயன்கோன்கோர் and சவ்கான்
ஆறுகள்இதர் ஆறு and ஓர்கோன் ஆறு
ஊர்கள்சச்சர்லக், பயன்கோன்கோர் and உலியசுதை
தொடர் ஆள்கூறு47°30′N 100°0′E / 47.500°N 100.000°E / 47.500; 100.000

பெயர்

தொகு

மங்கோலியர்களால் தங்கள் நாட்டின் வடக்கே உள்ள முழுமையான பசுமையான காடு-புல்வெளிப் பகுதியை[3] விவரிக்க கான்காய் என்ற சொல் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. தெற்குப் பாலைவனம் கோவி (கோபி) என்று அழைக்கப்படுகிறது. இடைநிலை புல்வெளிப் பகுதி கீர் அல்லது தல் என்று அழைக்கப்படுகிறது. கன்காய் என்ற சொல் "கான்கா-" என்ற வினைச்சொல் மற்றும் "-அய்" என்ற விகுதி இணைந்து உருவாகி உள்ளது. கான்கா என்ற சொல்லின் பொருள் "வழங்கல், தேவைகளை வழங்கல்" என்பதாகும். கான்காய் என்ற சொல் கான் (மன்னர்) என்ற சொல்லில் இருந்தும்  உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒருவேளை கான்கா என்ற வினைச்சொல்லும் கூட கானில் இருந்து உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆகையால், கான்காய் வழக்கமாக முன்யோசனை உள்ள இறைவன், உதாரகுணமுள்ள மன்னர், தாராளமான இரக்கமுள்ள இறைவன் அல்லது அபரிமிதமான மன்னர் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது. இப்பண்டைய பெயர் மலையின் புனிதத்தன்மையையும் இதை நம்பியிருக்கும் மக்களின் இதயத்தில் இது பெற்றிருக்கும் சிறப்பு இடத்தையும் குறிக்கின்றது. புனித மலைகள் என்று பொருளுடைய ஒரு ஒத்த மங்கோலிய வார்த்தையானது கைர்கான் என்பதாகும். இதன் பொருள் அன்பான மன்னர் (உதாரணமாக அசரலத் கைர்கான் என்பது குறிப்பாக அக்கறையுள்ள அன்பான மன்னரைக் குறிக்கும்  ஒரு நெருங்கிய பெயராகும்) என்பதாகும். பாரம்பரியப்படி, மலைத்தொடர் பார்வையில் படும்படி இருக்கும் போது ஒரு கைர்கானின் பெயரைக் கூறக்கூடாது. மலைத்தொடர் பார்வையில் படும்படி இருக்கும் போது அதன் முழுப் பெயரைக் குறிக்காமல், வெறும் கைர்கான் என்றே அழைக்கப்பட வேண்டும். மங்கோலியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இந்தக் கண்டிப்பான பழக்கம் பொருந்தும். பார்வைக்கு அழகாக இருக்கும் அல்லது வேறு எவ்விதத்திலோ மனமகிழ்வை ஏற்படுத்தும் எந்த மலையுமோ அல்லது குன்றோ "அது உண்மையில் ஒரு சிறப்பு கைர்கான்" அல்லது "என்ன ஒரு கம்பீரமான கைர்கான்!" போன்ற சொற்களால் போற்றப்படலாம். மலை சார்ந்த வன-புல்வெளியின் எந்தப் பகுதியும் தனியாகவோ அல்லது அது கொண்டுள்ள அனைத்தையும் சேர்த்தோ (ஆறுகள், நீரூற்றுகள், தாவரங்கள், விலங்குகள்) "அது உண்மையில் ஒரு பெரிய கான்காய்" அல்லது "அது ஒரு தனித்துவமான கான்காய் என்று மறுக்கவில்லை!" போன்ற சொற்களால் பாராட்டப்படலாம். 

மங்கோலியாவின் இரண்டு மாகாணங்கள் கான்காய் மலைகளுக்குபின் பெயரிடப்பட்டுள்ளன: அர்கான்காய் (வடக்கத்தியக் கான்காய்) மற்றும் ஒவர்கான்காய் (தெற்கத்தியக் கான்காய்).[4] இரண்டு மாகாணங்கள் சந்திக்கும் மிதமான காலநிலைப் பகுதி (கிழக்கு கான்காய்) மங்கோலிய மற்றும் நாடோடி நாகரிகத்தின் தொட்டிலாகக் கருதப்படுகிறது.[5] கிழக்கு கான்காயின் அடிவாரத்தில் உள்ள சமவெளியில் உலக பாரம்பரியக் களமான ஓர்கோன் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. சியோக்னுவின் (கி.மு. 209 - கி.பி. 93) தலைநகர் லூத் கோத் (லுங்செங்), சியான்பேயின் (கி.பி. 93 - கி.பி. 234) தலைநகர் ஓர்டோ மற்றும் ருரன் ககானேட்டின் (கி.பி. 330 -கி.பி. 555) தலைநகர் மூமத் (முமே) ஆகியவை இங்கு அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் வந்த பேரரசுகளும் தங்கள் தலைநகரங்களை இங்கு நிறுவின. உதாரணமாக உய்குர் சாம்ராச்சியத்தினர் (கி.பி. 745 - கி.பி. 840) இப்பகுதியில் தங்கள் தலைநகரான ஓர்டு-பாலிக்கைக் கட்டினர்.[6]

அம்சங்கள்

தொகு
 
அர்கான்காய் மாகாணத்தின் தலைநகரான திசத்சர்லிக்கில் உள்ள கான்காய் மலைகள்.
 
வடக்கு கான்காய் மலைகளில் உள்ள அழிந்துபோன கோர்கோ எரிமலை

இத்தொடரின் உயரமான மலை ஓதகன்தெங்கர் (பொருள் "இளைய வானம்") ஆகும். தகவல்களின் மூலத்தைப் பொறுத்து இதன் உயரம் 3,905, 4,021 மற்றும் 4,031 மீ என வழங்கப்படுகிறது. இது மங்கோலியாவின் நான்கு முக்கிய புனித மலைகளில் ஒன்றாகும். அரசாங்க விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.

சுவரகா கைர்கான் (தூப கைர்கான், உயரம் 3,117 மீ) என்பது திசத்சர்லிக்கிற்குக் கிழக்கில் உள்ள மற்றொரு புனித மலையாகும்.

தர்யது-சுலுது என்பது கான்காய் மலைகளின் வடக்கு சரிவுகளில் உள்ள அழிந்துபோன எரிமலைப் பகுதியாகும்.

இம்மலைகளில் இருந்து நீரானது ஒர்கோன், செலெங்கே, இதர், சவ்கான் ஆறுகள் மற்றும், ஒரோக் மற்றும் பூன் திசகான் ஏரிகளுக்கு நீரானது செல்கிறது. மேற்கில், கான்காய் மலைகள் பெரிய ஏரிகள் பள்ளமாக மாற்றம் அடைகின்றன.

கான்காய் மலைப்பகுதியின் சில பகுதிகளில் அதன் மிதமான நுண் சீதோஷ்ண நிலைகளுக்காக இது அறியப்படுகிறது. நாட்டின் பிற பகுதிகளைப் போல் குளிர்காலம் இப்பகுதியில் கடுமையாக இருப்பதில்லை. பிரெஸ்னியாக் மற்றும் நியேஜ்விச்சின் "வெர்டிகல் வேரியபிலிடி ஆப் க்லைமேடிக் கண்டிசன்ஸ் இன் த கான்காய் மவுண்டைன்ஸ்" புத்தகத்தின் 34வது பக்கத்தில் எழுதப்பட்டிருப்பதாவது:[7]

மங்கோலியாவின் மாறுபடும் காலநிலையின் (கவரிலோவா 1974) ஒரு தனித்துவமாக அறியப்படுகின்ற, எதிரிடையாக மாறும் வலுவான குளிர் காலநிலை காரணமாக, சுற்றியுள்ள பகுதிகளை விட 10°C வெப்பமாக இருக்கும். இதன் மிக உயர்ந்த மலைகளின் உச்சிகளில் கூட இதன் பள்ளத்தாக்கை விட 5°C வெப்பமானதாக இருக்கும்.

 
மத்திய ஆசியாவில் கான்காய் மலைகளின் அமைவிடம்

உசாத்துணை

தொகு
  1. J. K. Sanders, Alan (25-Aug-2017). Historical Dictionary of Mongolia. Rowman & Littlefield. p. 455. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-538-10227-5. பார்க்கப்பட்ட நாள் November 11, 2017. {{cite book}}: Check date values in: |date= (help)
  2. Dergunov, A.B. (November 23, 2004). Tectonics, Magmatism and Metallogeny of Mongolia. Routledge. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-49941-0. பார்க்கப்பட்ட நாள் November 11, 2017.
  3. Blunden, Jane (01-Oct-2014). Mongolia. Bradt Travel Guides. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-841-62416-7. பார்க்கப்பட்ட நாள் November 11, 2017. {{cite book}}: Check date values in: |date= (help)
  4. Alan J. K. Sanders, Jantsangiyn Bat-Ireedui (14-Aug-2015). Colloquial Mongolian: The Complete Course for Beginners. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-30597-2. பார்க்கப்பட்ட நாள் November 11, 2017. {{cite book}}: Check date values in: |date= (help)
  5. Blunden, Jane (01-Oct-2014). Mongolia. Bradt Travel Guides. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-841-62416-7. பார்க்கப்பட்ட நாள் November 11, 2017. {{cite book}}: Check date values in: |date= (help)
  6. Cunliffe, Barry (24-Sep-2015). By Steppe, Desert, and Ocean: The Birth of Eurasia. OUP Oxford. p. 415. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-191-00335-6. பார்க்கப்பட்ட நாள் November 11, 2017. {{cite book}}: Check date values in: |date= (help)
  7. # Eligiusz Brzezniak, Tadeusz Niedzwiedz, Vertical Variability of Climatic Conditions in the Khangai Mountains, 1980.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்காய்_மலைகள்&oldid=2446798" இலிருந்து மீள்விக்கப்பட்டது