கான்டி-மான்ஸி தன்னாட்சி வட்டாரம்
கான்டி-மான்சி, தன்னாட்சி பிராந்தியத்திற்கான - யுக்ரா அல்லது காந்தி-மன்சிய்ஸ்க் தன்னாட்சி பிராந்தியத்திற்கான - உக்ரா (Khanty-Mansi Autonomous Okrug — Yugra or Khanty-Mansiysk Autonomous Okrug – Ugra) [8] ( ரஷியன் :Ха́нты-Манси́йский автоно́мный о́круг — Югра́, Khanty-Mansiysky avtonomny okrug – Yugra) என்பது இரஷ்யக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு பகுதியாகும். மக்கள் தொகை: 1,532,243 ( 2010 கணக்கெடுப்பு ) ஆகும்.[5] இந்த பகுதியின் பூர்வகுடி மக்கள் கஹண்டி, மற்றும் மன்சி ஆவர் இவர்கள் ஓப் அக்ரிக் மக்கள் என்று போதுவாக அழைக்கப்படுகின்றனர். இங்கு உள்ளூர் மொழிகளாக, கஹண்டி மொழி மற்றும் மன்சி மொழி ஆகியவை உள்ளன. தன்னாட்சி பிராந்தியத்திற்கான உள்ள சிறப்பு அந்தஸ்தாக யூரலிய மொழிகளான ஹங்கேரியன் . ரஷியன் போன்றவை மட்டுமே உத்தியோகபூர்வ மொழிகளாக உள்ளன. இரஷ்யாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் பெரும்பான்மை (51%) [9] பகுதி இந்த தன்னாச்சி பகுதியில் இருந்தே எடுக்கப்படுவதால் இது பொருளாதார முக்கித்துவம்வாய்ந்த பகுதியாக விளங்குகிறது.
கான்டி-மான்சி தன்னாட்சி பிராந்தியத்திற்கான — யுக்ரா | |
---|---|
Khanty-Mansi Autonomous Okrug — Yugra Ханты-Мансийский автономный округ — Югра | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | உரல்[1] |
பொருளாதாரப் பகுதி | மேற்கு சைபீரியா[2] |
நிர்வாக மையம் | கான்டி-மான்சிக் |
அரசு | |
• நிர்வாகம் | Duma |
• ஆளுநர் | நதல்யா கோமரோவா[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,34,800 km2 (2,06,500 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 9th |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[5] | |
• மொத்தம் | 15,32,243 |
• தரவரிசை | 29th |
• அடர்த்தி | 2.9/km2 (7.4/sq mi) |
• நகர்ப்புறம் | 91.5% |
• நாட்டுப்புறம் | 8.5% |
நேர வலயம் | ஒசநே+5 ([6]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-KHM |
அனுமதி இலக்கத்தகடு | 86 |
OKTMO ஐடி | 71800000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[7] |
இணையதளம் | http://www.admhmao.ru/ |
வரலாறு
தொகுஒக்ரு பிராந்தியத்தியம் திசம்பர் 10 1930இல் நிறுவப்பட்டது. ( Ostyak–Vogul National Okrug (Остя́ко-Вогу́льский национа́льный о́круг). அக்டோபர் 1940 ல், இது கான்டி-மான்சி தேசிய பிராந்தியத்தியம் (Khanty-Mansi National Okrug) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1977 ஆம் ஆண்டில், பிற தேசியப் ஓக்ருகுஸ்களுடன் இணைந்து ரஷியன் SFSR , சுயாட்சி பிராந்தியத்திற்கான (கன்டி-மான்சி தன்னாட்சி பிராந்தியம்) என்று மாறியது. நிர்வாக மையமாக காந்தி-மன்சிய்ஸ்க் ஆகும். 2003 ஆம் ஆண்டில், யுங்ரா (Yugra ) என்ற அதிகாரப்பூர்வ பெயர் இணைக்கப்பட்டது.
புவியியல்
தொகுஇந்த பிராந்தியத்தியம் மேற்கு சைபீரியாவின் மையப்பகுதியில் உள்ளது. இங்கு பாயும் முதன்மை ஆறு ஓப் ஆகும் இதில் இதன் கிளை ஆறுகளான இர்டைஷ், ட்ரைபுடரி ஆகியவை வந்து கலக்கின்றன.
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்த பிரதேசத்தின் மக்கள் தொகை: 1,532,243 ( 2010 கணக்கெடுப்பு ); 1,432,817 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); [11] 1,268,439 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .) [12] இந்த தன்னாட்சி பிராந்தியத்தியம் 523.100 கி.மீ² பரப்பளவு கொண்டது, ஆனால் இந்த பிரதேசப்பகுதியில் மக்கள் அடர்த்தி குறைவாகவே உள்ளது. இதன் நிர்வாக மையம் காந்தி-மன்சிய்ஸ்க் என்றாலும் பெரிய நகரங்களில் என்றால் அவை சூர்குத் , நிழ்நெவர்த்தோவிஸ்க் , மற்றும் நிப்டடையுகன்ஸ்க் போன்றவை ஆகும்.
இனக்குழுக்கள்
தொகுஇந்த தன்னாட்சி பிராந்தியத்தில் காண்டை, மன்சி, நினிட்ஸ் போன்ற பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இந்த பிராந்தியத்திற்கான மொத்த மக்கள் தொகையில் இவர்கள் தொகை 2.2% மட்டுமே ஆகும். தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள இயற்கை எரிவாயு வளம் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து குடியேறியவர்களை ஈர்த்துள்ளது. 2010 கணக்கெடுப்பில் இருபத்து ஐந்து இனக்குழுக்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது ஒவ்வுரு குழுவிலும் இரண்டாயிரம் பேருக்கு மேல் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. பின்வருமாறு இனக் கலவை உள்ளது: கான்டி-மான்சி தன்னாட்சி பிராந்தியத்தில் வாழும் இனக்குழுக்களின் விகிதம்:[10]
இனக்குழு | % |
---|---|
ருஷ்யன் | 68.1% |
டட்டர் | 7.6% |
உக்ரேனியர் | 6.4% |
பாஷ்கிர் | 2.5% |
அசிரி | 1.8% |
கான்டை | 1.3% |
பிலருஷியன் | 1% |
கும்வைக் | 1% |
சுவாஷ் | 0.9% |
லிஸ்ஜின் | 0.9% |
மன்சி | 0.8% |
மோல்டோவன் | 0.7% |
உஸ்பெக் | 0.7% |
செசெனியர் | 0.5% |
ஜெர்மனியர் | 0.5% |
ஆர்மீனியன் | 0.4% |
பிறர் | 3.4% |
மதம்
தொகு2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புபடி[11] இப்பிராந்திய மக்கள் தொகையில் 38.1% உருசிய மரபுவழித் திருச்சபை (கிருத்துவம்) , 5% பொதுவாக இருக்கும் கிருத்துவர், மக்கள் தொகையில் 1% ஸ்லாவிக் ரோண்னோவெரி (ஸ்லாவிக் நியோபகனியம்) நம்பிக்கையாளர்கள் ஆவர். ஷமானிஸம் . முஸ்லிம்கள் (பெரும்பாலும் டட்டார் இனத்தவர் ) மக்கள் தொகையில் 11% ஆவார்கள். மக்கள் தொகையில் 23% மதத்தைப் பற்றி குறிப்பிடாதவர்கள் ஆவர். 11% நாத்திகர் , மற்றும் 10.9% மற்ற மதத்தினர் அல்லது கேள்விக்கு பதில் தராதவர்கள் ஆவர்.[11]
போக்குவரத்து
தொகுஇந்த தன்னாட்சி பிராந்தியத்திற்கான சரக்குப் போக்குவரத்து முதன்மையாக நீர் வழியாகவும், தொடர்வண்டி போக்குவரத்து வழியாக நடக்கிறது. 29% சாலை வழியாகவும், 2% விமான போக்குவரத்து வழியாகவும் நடக்கிறது. இருப்புப்பாதைகளின் மொத்த நீளம் 1106 கி.மீ. ஆகும். சாலைகள் நீளம் மொத்தம் 18,000 ற்கும் மேற்பட்ட கி.மீ. தொலைவு உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ Official website of Khanty–Mansi Autonomous Okrug. Natalya Vladimirovna Komarova, Governor of Khanty–Mansi Autonomous Okrug பரணிடப்பட்டது 2011-03-21 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ 5.0 5.1 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ "GENERAL INFORMATION". The official site of the Khanty-Mansi Autonomous Okrug — Yugra. 2012-08-29. Archived from the original on 2015-02-06. பார்க்கப்பட்ட நாள் 2015-04-18.
- ↑ В Ханты-Мансийском автономном округе добыта 10-миллиардная тонна нефти
- ↑ (XLS) National Composition of Population for Regions of the Russian Federation. 2010 Russian All-Population Census. 2010. http://www.gks.ru/free_doc/new_site/population/demo/per-itog/tab7.xls. பார்த்த நாள்: 2011-12-22.
- ↑ 11.0 11.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org