மயில் துத்தம்

(காப்பர் (II) சல்ஃபேட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மயில் துத்தம் (Copper(II) sulfate, cupric sulfate அல்லது copper sulphate, செம்புச்சல்பெற்று) எனப்படும் வேதிச் சேர்மமான காப்பர் சல்ஃபேட்டின் (Copper(II) sulfate, blue vitriol, blue vitreol) வேதியியல் வாய்பாடு CuSO4 ஆகும். இந்த உப்பு வெவ்வேறு அளவு படிக நீரேற்றங்களை கொண்ட பல்வேறுச் சேர்மங்களாக காணப்படுகிறது. இதன் நீரற்ற வடிவம் வெளிர் பச்சை அல்லது சாம்பல் வெள்ளை நிற பொடியாகவும், சாதாரணமாகக் காணப்படும் ஐந்து நீரேறி (pentahydrate) (CuSO4·5H2O) ஒளிர்நீலமாகவும் உள்ளன. நீல நிறச்சாயலில் உள்ள ஐந்து நீரேறி (CuSO4·5H2O) சுற்றுப்புற சூழலுக்கு கடும் நஞ்சாகவும், கண்கள் மற்றும் தோலுக்கு நமைச்சல் காரணியாவும், விழுங்கிவிட்டால் ஊறு விளைவிப்பதாகவும் உள்ளது. மயில் துத்தம் நீரில் கரையும்போது வெப்ப உமிழ் வினை (exothermic reaction) நிகழ்ந்து, எண்முக வடிவம் கொண்ட, இணைக்காந்த தன்மையுள்ள மாழை-நீர் கூட்டுப்பொருளைத் [Cu(H2O)6]2+ (metal aquo complex) தருகிறது. மயில் துத்தத்தின் பிற பெயர்கள்: துரிசு, துருசு, நீலக்கல் (bluestone)[3].

மயில் துத்தம் [காப்பர் (II) சல்ஃபேட்டு]
Crystals of CuSO4·5H2O
Anhydrous CuSO4 powder
Ball-and-stick model of CuSO4
Space-filling model CuSO4
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காப்பர் (II) சல்ஃபேட்டு
வேறு பெயர்கள்
குயூபிரிக் சல்ஃபேட்டு
மயில் துத்தம் (ஐந்து நீரேறி)
நீலக்கல் (ஐந்து நீரேறி)
போனட்டைட்டு (மூன்று நீரேறிய கனிமம்) - Bonattite
பூத்தைட்டு (ஏழு நீரேறிய கனிமம்) - Boothite
சால்கந்தைட்டு (ஐந்து நீரேறிய கனிமம்) - Chalcanthite
சால்கோசயனைட்டு (கனிமம்) - Chalcocyanite
இனங்காட்டிகள்
7758-98-7 Y
ATC code V03AB20
ChEBI CHEBI:23414 Y
ChEMBL ChEMBL604 Y
ChemSpider 22870 Y
EC number 231-847-6
InChI
  • InChI=1S/Cu.H2O4S/c;1-5(2,3)4/h;(H2,1,2,3,4)/q+2;/p-2 Y
    Key: ARUVKPQLZAKDPS-UHFFFAOYSA-L Y
  • InChI=1/Cu.H2O4S/c;1-5(2,3)4/h;(H2,1,2,3,4)/q+2;/p-2
    Key: ARUVKPQLZAKDPS-NUQVWONBAI
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C18713 Y
பப்கெம் 24462
வே.ந.வி.ப எண் GL8800000 (நீரற்றது)
GL8900000 (ஐந்து நீரேறி)
  • [O-]S(=O)(=O)[O-].[Cu+2]
UNII KUW2Q3U1VV Y
பண்புகள்
CuSO4
வாய்ப்பாட்டு எடை 159.62 கி/மோல் (நீரற்றது)
249.70 கி/மோல் (ஐந்து நீரேறி)
தோற்றம் நீலம் (ஐந்து நீரேறி)
சாம்பல் வெள்ளை (நீரற்றது)
அடர்த்தி 3.603 கி/செமீ3 (நீரற்றது)
2.284 கி/செமீ3 (ஐந்து நீரேறி)
உருகுநிலை 110 °செ (·4H2O)
150 °செ (423 K) (·5H2O)
<650 °செ decomp.
ஐந்து நீரேறி
316 கி/லி (0 °செ)
2033 கி/லி (100 °செ)
நீரற்றது
243 கி/லி (0 °செ)
320 கி/லி (20 °செ)
618 கி/லி (60 °செ)
1140 கி/லி (100 °செ)
கரைதிறன் நீரற்றது
எதனோலில் கரையாதது
ஐந்து நீரேறி
மெதனாலில் கரையும்
10.4 கி/லி (18 °செ)
எதனோலில் கரையாதது.
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.733 (நீரற்றது)
1.514 (ஐந்து நீரேறி)
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம் (Orthorhombic) - சால்கோசயனைட்டு, space group Pnma, oP24, a = 0.839 nm, b = 0.669 nm, c = 0.483 nm[1]
முச்சரிவு (Triclinic) (ஐந்து நீரேறி), space group P1, aP22, a = 0.5986 nm, b = 0.6141 nm, c = 1.0736 nm, α = 77.333°, β = 82.267°, γ = 72.567°[2]
வெப்பவேதியியல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
109.05 J K−1 mol−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் anhydrous
pentahydrate
ஈயூ வகைப்பாடு தீங்கானது (Xn)
நமைச்சல் காரணி (Xi)
சுற்று சூழலுக்கு தீங்கானது (N)
R-சொற்றொடர்கள் R22, R36/38, R50/53
S-சொற்றொடர்கள் (S2), S22, S60, S61
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாதவை
Lethal dose or concentration (LD, LC):
300 mg/kg (oral, rat)
87 mg/kg (oral, mouse)
470 mg/kg (oral, mammal)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் இரும்பு (II) சல்பேட்டு
மாங்கனீசு (II) சல்பேட்டு
நிக்கல் (II) சல்பேட்டு
துத்தநாகச் சல்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு மற்றும் கிடைக்கும் விதம்

தொகு
 
செப்பு மின்முனைகளைக் கொண்டு கந்தக அமிலத்தை மின்னாற் பகுத்தல் மூலமாக மயில் துத்தத்தைத் தயாரித்தல்

தொழிற்சாலைகளில் மயில் துத்தம், செம்புத் தகடுகளை சூடான, அடர்த்தியான கந்தக அமிலத்தால் வினைப்படுத்துவதன் மூலமாகவோ, அதன் ஆக்சைடுகளை நீர்த்த கந்தக அமிலத்தை கொண்டோ தயாரிக்கப்படுகிறது. ஆய்வகப் பணிகளுக்கு சாதாரணமாக மயில் துத்தம் வாங்கிக்கொள்ளப்படுகிறது.

இதன் நீரற்ற வடிவம் அரிதான கனிமமாக (சால்கோசயனைட்டு) காணப்படுகிறது. நீரேறிய மயில் துத்தம் இயற்கையாக சால்கந்தைட்டாகக் (ஐந்து நீரேறி) கிடைக்கிறது. அரிதாக பின்வரும் பொருள்களாகவும் கிடைக்கிறது: மூன்று நீரேறிய கனிமமான போனட்டைட்டு (Bonattite)
ஏழு நீரேறிய கனிமமான பூத்தைட்டு (Boothite).

ஐந்து நீரேறிய மயில் துத்தத்தை வெற்றிடத்தில் பகுதியாக நீரிறக்கம் செய்வதன் மூலமாக படிக உருவமற்ற, குறைவான நீரேற்றம் கொண்ட மயில் துத்தத்தைத் தயாரிக்க முடியும்[4].

வேதிப் பண்புகள்

தொகு

ஐந்து நீரேறிய மயில் துத்தம் 150 °செ (302 °பா) வெப்பநிலையில் உருகுவதற்கு முன் சிதைவடைகிறது. இரண்டு நீர் மூலக்கூறுகளை 63 °செ (145 °பா) வெப்பநிலையிலும், 109 °செ (228 °பா) வெப்பநிலையில் இன்னும் இரண்டு நீர் மூலக்கூறுகளையும், இறுதியாக கடைசி நீர் மூலக்கூற்றை 200 °செ (392 °பா) வெப்பநிலையிலும் இழக்கிறது[5][6].

காப்பர் (II) சல்ஃபேட்டு, 650 °செ (1,202 °பா) வெப்பநிலையில் காப்பர் (II) ஆக்சைடாகவும் (CuO), கந்தக டிரைஆக்சைடாகவும் சிதைவடைகிறது (SO3).

இது நீரேற்றத்தால் நீல வண்ணமாகக் காணப்படுகின்றது. இப்படிகங்களை தீச்சுடரில் சூடுபடுத்தும்போது நீரிறக்கப்பட்டு சாம்பல்-வெள்ளை நிறத்தையடைகிறது[7].

அடர்வான ஐதரோகுளோரிக் அமிலத்துடன் அதித் தீவிரமாக மயில் துத்தம் வினைபுரிகிறது. இவ்வினையில், நீல நிற காப்பர் (II) சல்ஃபேட்டு கரைசல், டெட்ராகுளோரோ கியூப்ரேட்டு (II) உருவாவதன் மூலமாக, பச்சை வண்ணமாக மாறுகிறது:

Cu2+ + 4 ClCuCl2−
4

தாமிரத்தைக் காட்டிலும் அதிகமாக வினைபுரியும் உலோகங்களுடன் வினைபுரிகின்றது (உதாரணமாக: Mg, Fe, Zn, Al, Sn, Pb):

CuSO4 + Zn → ZnSO4 (துத்தநாக சல்பேட்டு) + Cu
CuSO4 + Fe → FeSO4 (ஃபெரசு சல்பேட்டு) + Cu
CuSO4 + Mg → MgSO4 (மக்னீசியம் சல்பேட்டு) + Cu
CuSO4 + Sn → SnSO4 (வெள்ளீய சல்பேட்டு) + Cu
3 CuSO4 + 2 Al → Al2(SO4)3 (அலுமினியம் சல்பேட்டு) + 3 Cu

மேற்கோள்கள்

தொகு
  1. Kokkoros, P. A.; Rentzeperis, P. J. (1958). "The crystal structure of the anhydrous sulphates of copper and zinc". Acta Crystallographica 11 (5): 361–364. doi:10.1107/S0365110X58000955. 
  2. Bacon, G. E.; Titterton, D. H. (1975). "Neutron-diffraction studies of CuSO4 · 5H2O and CuSO4 · 5D2O". Z. Kristallogr. 141 (5–6): 330–341. doi:10.1524/zkri.1975.141.5-6.330. 
  3. "Copper(II) sulfate MSDS". Oxford University. Archived from the original on 2007-10-11. பார்க்கப்பட்ட நாள் 2007-12-31.
  4. Li, Yinghua; Han, Jun; Zhang, Geoff; Grant, David; Suryanarayanan, Raj (May 2000). "In Situ Dehydration of Carbamazepine Dihydrate: A Novel Technique to Prepare Amorphous Anhydrous Carbamazepine". Pharmaceutical Development and Technology (UK: Taylor & Francis Ltd) 5 (2): 258. doi:10.1081/PDT-100100540. பன்னாட்டுத் தர தொடர் எண்:10837450. http://informahealthcare.com/doi/abs/10.1081/PDT-100100540. பார்த்த நாள்: 20 October 2011. 
  5. Andrew Knox Galwey; Michael E. Brown (1999). Thermal decomposition of ionic solids. Elsevier. pp. 228–229. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-444-82437-5.
  6. Wiberg, Egon (2001). Inorganic chemistry. Academic Press. p. 1263. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  7. Holleman, A. F.; Wiberg, E. (2001). Inorganic Chemistry. San Diego: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயில்_துத்தம்&oldid=3566506" இலிருந்து மீள்விக்கப்பட்டது