காப்பிட் வானூர்தி நிலையம்
காப்பிட் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: BLG[2], ஐசிஏஓ: WBGP); (ஆங்கிலம்: Kapit Airport; மலாய்: Lapangan Terbang Kapit; சீனம்: 加帛机场) என்பது மலேசியா, சரவாக், காப்பிட் பிரிவு; காப்பிட் மாவட்டம், காப்பிட் நகரத்தில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.
Kapit Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் (Malaysia Airports Holdings Berhad) | ||||||||||
சேவை புரிவது | காப்பிட், காப்பிட் மாவட்டம், காப்பிட் பிரிவு, சரவாக், கிழக்கு மலேசியா | ||||||||||
அமைவிடம் | காப்பிட், சரவாக், மலேசியா | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00) | ||||||||||
உயரம் AMSL | 65 ft / 19.812 m | ||||||||||
ஆள்கூறுகள் | 02°00′35″N 112°55′55″E / 2.00972°N 112.93194°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
Source: Aeronautical Information Publication Malaysia[1] |
முன்பு இந்த வானூர்தி நிலையத்தை மலேசியா எயர்லைன்சு நிறுவனம் (Malaysia Airlines), அதன் டுவின் ஓட்டர் (Twin Otter) வானூர்திகள் மூலமாக இயக்கி வந்தது. குறைந்த பயன்பாடுகள் காரணமாக அந்தச் சேவை நிறுத்தப்பட்டது.
மேலும் இந்த வானூர்தி நிலையம் அப்படியே கைவிடப்பட்டது. இருப்பினும் திட்டமிடப்படாத உலங்கூர்தி சேவைகள் (Unscheduled Helicopter Services) தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பொது
தொகு2018-ஆம் ஆண்டில், காப்பிட் நகரத்திற்கான வானூர்திச் சேவைகளை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான திட்டங்களை மாஸ் விங்ஸ் (MASwings) வானூர்தி நிறுவனம் அறிவித்தது. ஆனால் தற்போதைய விமான நிலைய தளத்தின் உள்கட்டமைப்பு புனரமைப்பு செய்தால் மட்டுமே தன் சேவையைத் தொடக்கும் என மாஸ் விங்ஸ் நிறுவனம் ஒரு கட்டுப்பாட்டையும் முன்மொழிந்தது.
அந்த அறிவிப்புக்கு பல்வகையான விமர்சனங்கள் வந்தன. இதற்கிடையில், சரவாக் துணை முதல்வர் சேம்சு செமுட் மாசிங் (James Jemut Masing), காப்பிட் நகரத்திற்கு அருகில் சுபுக்கிட் மாபோங் (Bukit Mabong) எனும் இடத்தில் புதிய வானூர்தி நிலையம் கட்டப்படும் என்று அறிவித்தார்.[3]
173.5 மில்லியன் ரிங்கிட் செலவிலான அந்த வானூர்தி நிலையம் 790 மீட்டர் நீளம் கொண்ட ஓடுபாதையைக் கொண்டு இருக்கும்; 2023-ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் புதிய வானூர்தி நிலையம் கட்டிமுடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.[3]
காப்பிட் நகரம்
தொகுகாப்பிட் நகரம் போர்னியோ காட்டு உட்பகுதியில் இருப்பதால், முன்னர் காலத்தில் ராஜாங் ஆற்று வழியாகத்தான் அங்கு செல்ல முடியும். இப்போது புது தார் சாலைகளை அமைத்து இருக்கிறார்கள்.[4]
சிபு நகரில் இருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ளது. விரைவுப் படகு மூலம் செல்லலாம். 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பிடிக்கும். இலகுரக விமானம் மூலமாகவும் செல்லலாம். கார் மற்றும் பேருந்தில் செல்ல சுமார் 1 மணி 30 நிமிடங்கள் பிடிக்கும்.
சான்றுகள்
தொகு- ↑ AIP Malaysia: Index to Aerodromes பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
- ↑ Airport information for KPI at Great Circle Mapper.
- ↑ 3.0 3.1 "The Sarawak government has identified sites for the construction of airports in Bukit Mabong, Kapit and Bebuling in Spaoh, Betong, said Deputy Chief Minister Tan Sri Datuk Amar Dr James Jemut Masing". Borneo Post Online. 30 June 2020. பார்க்கப்பட்ட நாள் 23 January 2023.
- ↑ "Gawai revellers jam incomplete road to Kapit - The Star".
வெளி இணைப்புகள்
தொகு- Short Take-Off and Landing Airports (STOL) at Malaysia Airports Holdings Berhad]