கார்னிதின்

வேதிச் சேர்மம்

கார்னிதின் (Carnitine) என்னும் நான்கிணைய அமோனியாச் சேர்மம் லைசின் மற்றும் மெத்தியோனின் அமினோ அமிலங்களிலிருந்து உயிரியல் முறையில் தொகுக்கப்படுகின்றது.[1] கார்னிதின், உயிரணுக்களில் கொழுப்பைச் சிதைத்துப் பெறப்படும் வளர்சிதை மாற்ற (அ) உடல் இயக்க எரிசக்தி உருவாக்கத்திற்கு கொழுப்பு அமிலங்களை உயிரணுக்கணிகத்திலிருந்து மணியிழையத்திற்கு எடுத்துச் செல்லத் தேவைப்படுகிறது. இது, உணவுச் சேர்ப்பாக விற்பனை செய்யப்படுகின்றது. முதன்முதலில், கார்னிதின் புழு உணவில் வளர் காரணியாகக் கண்டறியப்பட்டது. கார்னிதின் உயிர்ச்சத்தாகவும் (விட்டமின் Bt) அழைக்கப்படுகின்றது. கார்னிதின் இரு முப்பரிமாண மாற்றியங்களைக் கொண்டுள்ளது. L-கார்னிதின் உயிரிச் செயற்படு வடிவத்தில் உள்ளது. ஆனால், இதன் ஆடி மாற்றியன், D-கார்னிதின் உயிரிச் செயல்படா வடிவத்தில் உள்ளது.[2]

கார்னிதின்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
3-ஹைட்ராக்சி-4-(டிரைமீதைல் அசானியுமைல்)பியூட்டனோயேட்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
வழிகள் வாய்வழி மற்றும் சிரைவழி
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்பு < 10%
புரத இணைப்பு எதுவுமில்லை
வளர்சிதைமாற்றம் சிறிதளவு
கழிவகற்றல் சிறுநீர் (> 95%)
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 541-15-1
ATC குறியீடு A16AA01
பப்கெம் CID 288
DrugBank APRD01070
ChemSpider 282 Yes check.svgY
UNII 0G389FZZ9M Yes check.svgY
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் C00318 Yes check.svgY
ChEMBL CHEMBL172513 Yes check.svgY
வேதியியல் தரவு
வாய்பாடு C7

H15Br{{{Br}}}N O3 

மூலக்கூற்று நிறை 161.199 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C7H15NO3/c1-8(2,3)5-6(9)4-7(10)11/h6,9H,4-5H2,1-3H3 Yes check.svgY
    Key:PHIQHXFUZVPYII-UHFFFAOYSA-N Yes check.svgY

மாந்தர்களின் குடலில் இருக்கும் நுண்ணுயிரிகளின் இயக்கத்தால் உணவாக உட்கொள்ளும் பொருளில் உள்ள எல்-கார்னிதின் குருதிக்குழாயில் கொழுப்பிய படிவு ஏற்படுத்துகின்றது; இது குழாயின் குறுக்களவைக் குறைக்கும் தன்மை ஏற்படுத்தும் டி.எம்.ஏ.ஓ (TMAO எனப்படும் திரைமெத்தில்-அமைன்-என்-ஆக்சைடு, trimethylamine-N-oxide) என்னும் பொருளை உண்டாக்குகின்றது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சிவப்பு இறைச்சியில் அதிகம் இருப்பதால், இதயக்குழாய் சார்ந்த நோய்கள் கூடும் வாய்ப்புள்ளது என்றும் அறியப்படுட்டுள்ளது[3]

உயிரிவேதியியல்தொகு

உயிரித்தொகுப்புதொகு

விலங்குகளில், கார்னிதின் முதன்மையாக கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் லைசின் மற்றிம் மெத்தியோனின் அமினோ அமிலங்களிலிருந்து உயிரியல் முறையில் தொகுக்கப்படுகிறது.[4] கார்னிதின் தொகுப்பிற்கு விட்டமின் C (அஸ்கார்பிக் அமிலம்) இன்றியமையாதது. மனித வளர்ச்சியின் போதும்[5], கர்ப்பக் காலத்திலும்[6] கார்னிதின் இயற்கையில் தயாரிக்கப்படுவதைவிட அதிகமாக அளவில் தேவைப்படுகிறது.

கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் கார்னிதினின் பங்குதொகு

 

உணவு மூலங்கள்தொகு

பொருள் அளவு கார்னிதின்
மாட்டிறைச்சித் துண்டம் 100 கி 95 மிகி
அரைக்கப்பட்ட மாட்டிறைச்சி 100 கி 94 மிகி
பன்றி இறைச்சி 100 கி 27.7 மிகி
பன்றி இறைச்சி (பேக்கன்) 100 கி 23.3 மிகி
சோயா உணவு 100 கி 19.5 மிகி
மீன் 100 கி  5.6 மிகி
கோழிக்கறி 100 கி  3.9 மிகி
அமெரிக்கப் பாலாடைக் கட்டி 100 கி  3.7 மிகி
பனிக்குழைமம் (ஐஸ் கிரீம்) 100 மிலி  3.7 மிகி
நிறைபால் 100 மிலி  3.3 மிகி
வெண்ணைப் பழம் நடுத்தர அளவு 2 மிகி[7]
பாலாடைக்கட்டி 100 கி  1.1 மிகி
முழு கோதுமை ரொட்டி 100 கி  0.36 மிகி
தண்ணீர்விட்டான் கொடி 100 கி  0.195 மிகி
மைதா ரொட்டி 100 கி  0.147 மிகி
கோதுமைவகை உணவுப்பொருள் 100 கி  0.126 மிகி
நிலக்கடலை வெண்ணெய் 100 கி  0.083 மிகி
சாதம் 100 கி  0.0449 மிகி
முட்டை 100 கி  0.0121 மிகி
ஆரஞ்சுச் சாறு 100 மிலி  0.0019 மிகி

மேற்கோள்கள்தொகு

  1. Steiber A, Kerner J, Hoppel C (2004). "Carnitine: a nutritional, biosynthetic, and functional perspective". Mol. Aspects Med. 25 (5-6): 455–73. doi:10.1016/j.mam.2004.06.006. பப்மெட்:15363636. 
  2. A. J. Liedtke, S. H. Nellis, L. F. Whitesell and C. Q. Mahar (1 November 1982). "Metabolic and mechanical effects using L- and D-carnitine in working swine hearts". Heart and Circulatory Physiology 243 (5): H691–H697. பப்மெட்:7137362. http://ajpheart.physiology.org/cgi/content/abstract/243/5/H691. 
  3. Robert A Koeth,Zeneng Wang, Bruce S Levison, Jennifer A Buffa, Elin Org, Brendan T Sheehy, Earl B Britt, Xiaoming Fu, Yuping Wu, Lin Li, Jonathan D Smith, Joseph A DiDonato, Jun Chen, Hongzhe Li, Gary D Wu, James D Lewis, Manya Warrier, J Mark Brown, Ronald M Krauss, W H Wilson Tang, Frederic D Bushman, Aldons J Lusis, and Stanley L Hazen (7 April 2013; doi:10.1038/nm.3145). "Intestinal microbiota metabolism of l-carnitine, a nutrient in red meat, promotes atherosclerosis". NATURE MEDICINE Advance online pub. 
  4. "L-Carnitine". 2007-05-08 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2007-06-01 அன்று பார்க்கப்பட்டது.
  5. Cederblad, G; Niklasson, A; Rydgren, B; Albertsson-Wikland, K; Olegård, R; “Carnitine in Maternal and Neonatal Plasma”; Acta Pædiatrica; Published Online: 21 Jan 2008; Volume 74, Issue 4: Pp 500 – 504
  6. Cederblad, G; Fahraeus, L; Lindgren, K; “Plasma carnitine and renal-carnitine clearance during pregnancy”; American Journal of Clinical Nutrition; 1986; Volume 44:Pp
  7. Linus Pauling Institute at Oregon State University
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்னிதின்&oldid=3575098" இருந்து மீள்விக்கப்பட்டது