கால்சியம் அயோடைடு

கால்சியம் அயோடைடு (Calcium iodide) என்பது CaI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். கால்சியம் மற்றும் அயோடின் சேர்ந்து அயனிச் சேர்மமாக இது உருவாகிறது. நிறமற்ற திண்மமாக உள்ள இச்சேர்மம் நீர்த்துப் போகும் தன்மையுடன் நீரில் நன்றாகக் கரையக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கிறது. கால்சியம் அயோடைடு சேர்மத்தின் பண்புகள் அதனுடன் தொடர்புடைய ஆலைடு சேர்மமான கால்சியம் குளோரைடுடன் ஒத்திருக்கிறது. புகைப்பட வேதியியலில்[1] கால்சியம் அயோடைடு பயன்படுத்தப்படுகிறது. மேலும், பூனைகளுக்கு அயோடின் சத்து வழங்கக் கூடிய அயோடின் மூலமாகவும் இது உணவில் பயன்படுகிறது.

கால்சியம் அயோடைடு
Calcium iodide
Calcium iodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் அயோடைடு
இனங்காட்டிகள்
10102-68-8 Y
13640-62-5 (tetrahydrate) N
ChemSpider 59629 Y
InChI
  • InChI=1S/Ca.2HI/h;2*1H/q+2;;/p-2 Y
    Key: UNMYWSMUMWPJLR-UHFFFAOYSA-L Y
  • InChI=1/Ca.2HI/h;2*1H/q+2;;/p-2
    Key: UNMYWSMUMWPJLR-NUQVWONBAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66244
வே.ந.வி.ப எண் EV1300000
  • [Ca+2].[I-].[I-]
UNII 8EKI9QEE2H Y
பண்புகள்
CaI2
வாய்ப்பாட்டு எடை 293.887 கி/மோல் (நீரிலி)
365.95 கி/மோல் (நான்கு நீரேற்று)
தோற்றம் வெண்மையான திண்மம்
அடர்த்தி 3.956 கி/செ.மீ3[1]
உருகுநிலை 779 °C (1,434 °F; 1,052 K) சிதைவுடன் கூடிய (நான்கு நீரேற்று)
கொதிநிலை 1,100 °C (2,010 °F; 1,370 K)
64.6 கி/100 மி.லி (0 °செ)
66 கி/100 மி.லி (20 °செ)
81 கி/100 மி.லி (100 °செ)
கரைதிறன் அசிட்டோன் மற்றும் ஆல்ககால் களில் கரையும்.
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம், hP3
புறவெளித் தொகுதி P-3m1, No. 164
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம்
தீங்குகள்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் கால்சியம் புளோரைடு
கால்சியம் குளோரைடு
கால்சியம் புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பெரிலியம் அயோடைடு
மக்னீசியம் அயோடைடு
இசுட்ரான்சியம் அயோடைடு
பேரியம் அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

வினைகள்

தொகு

1898 ஆம் ஆண்டில் என்றி மோயிசான், கால்சியம் அயோடைடை தூய சோடியம் உலோகத்துடன் சேர்த்து ஒடுக்குதல் வினையின் மூலமாக தூய நிலை கால்சியத்தைத் தயாரித்தார்:[2]

CaI2 + 2 Na → 2 NaI + Ca

கால்சியம் கார்பனேட்டுடன் கால்சியம் ஆக்சைடு அல்லது கால்சியம் ஐதராக்சைடு சேர்த்து ஐதரயோடிக் அமிலத்துடன் சூடுபடுத்துவதன் மூலமாக கால்சியம் அயோடைடைத் தயாரிக்கலாம்:[3]

CaCO3 + 2 HI → CaI2 + H2O + CO2

காற்றில் மெல்ல ஆக்சிசன் மற்றும் கர்பன் டை ஆக்சைடுடன் வினைபுரிந்து அயோடினை வெளியேற்றுகிறது. மாசடைந்த அயோடின் மாதிரிகளின் ஐயந்தரும் மஞ்சள் நிறத்திற்கு இதுவே காரணமாகும் [4]

2 CaI2 + 2 CO2 + O2 → 2 CaCO3 + 2 I2

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Turner, Jr., Francis M., ed. (1920), The Condensed Chemical Dictionary (1st ed.), New York: Chemical Catalog Co., p. 127, பார்க்கப்பட்ட நாள் 2007-12-08
  2. Mellor, Joseph William (1912), Modern Inorganic Chemistry, New York: Longmans, Green, and Co, p. 334, பார்க்கப்பட்ட நாள் 2007-12-08
  3. Gooch, Frank Austin; Walker, Claude Frederic (1905), Outlines of Inorganic Chemistry, New York: Macmillan, p. 340, பார்க்கப்பட்ட நாள் 2007-12-08
  4. Jones, Harry Clary (1906), Principles of Inorganic Chemistry, New York: Macmillan, p. 365, பார்க்கப்பட்ட நாள் 2007-12-08
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_அயோடைடு&oldid=4173318" இலிருந்து மீள்விக்கப்பட்டது