கிறிஸ் பிரோட்

(கிரிஸ் புரொட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரையன் கிறிஸ்டோபர் பிரோட் (Chris Broad, பிறப்பு: 29 செப்டம்பர் 1957) என்பவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 34 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 340 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 319 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தேர்வுப் போட்டிகளில் இவர் இங்கிலாந்து அணியினை 1984-1989 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

கிறிஸ் பிரோட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிறையன் கிறிஸ்டோபர் பிரோட்
பிறப்பு29 செப்டம்பர் 1957 (1957-09-29) (அகவை 67)
நோலே, பிரிஸ்டோல், இங்கிலாந்து
உயரம்6 அடி 4 அங் (1.93 m)
மட்டையாட்ட நடைஇடது-கை
பந்துவீச்சு நடைவலது-கை மிதம்
பங்குதொடக்க வீரர்
உறவினர்கள்ஸ்டூவர்ட் பிரோட் (மகன்)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 506)சூன் 28 1984 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுசூன் 17 1989 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப முத பஅ
ஆட்டங்கள் 25 34 340 319
ஓட்டங்கள் 1661 1361 21892 10396
மட்டையாட்ட சராசரி 39.54 40.02 38.07 34.76
100கள்/50கள் 6/6 1/11 50/105 11/68
அதியுயர் ஓட்டம் 162 106 227* 122
வீசிய பந்துகள் 6 6 1631 1027
வீழ்த்தல்கள் 0 0 16 25
பந்துவீச்சு சராசரி 64.81 36.80
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/14 3/46
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/– 10/– 189/– 82/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 24 2007

இவரது பிள்ளைகள் இருவரும் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவரது மகன் ஸ்டூவர்ட் ஒரு வேகப்பந்து வீச்சாளர், தனது தந்தையைப் போலவே இங்கிலாந்து மற்றும் நாட்டிங்ஹாம்ஷைர் ஆகிய இரு அணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவரது மகள் ஜெம்மா இங்கிலாந்தின் ஒருநாள் அணியில் செயல்திறன் ஆய்வாளராகப் பணியாற்றுகிறார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. The Broad Family, The Broad Appeal
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்_பிரோட்&oldid=2876690" இலிருந்து மீள்விக்கப்பட்டது