கிள்ளான் மக்களவைத் தொகுதி

(கிள்ளான் (மக்களவை தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிள்ளான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Klang; ஆங்கிலம்: Klang Federal Constituency; சீனம்: 巴生联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டத்தில் (Klang District) உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P110) (Dewan Rakyat) ஆகும்.[1]

கிள்ளான் (P110)
மலேசிய மக்களவைத் தொகுதி
சிலாங்கூர்
Klang (P110)
Federal Constituency in Selangor
சிலாங்கூர் மாநிலத்தில்
கிள்ளான் மக்களவைத் தொகுதி
மாவட்டம்கிள்ளான் மாவட்டம்; சிலாங்கூர்
வாக்காளர் தொகுதிகிள்ளான் தொகுதி
முக்கிய நகரங்கள்கிள்ளான்; கிள்ளான் மாவட்டம்; கிள்ளான் துறைமுகம்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சிபாக்காத்தான்
மக்களவை உறுப்பினர்கணபதிராவ் விருமன்
(Ganabatirau Veraman)
வாக்காளர்கள் எண்ணிக்கை209,052
தொகுதி பரப்பளவு162 ச.கி.மீ
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் கிள்ளான் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (26.44%)
  சீனர் (55.26%)
  இதர இனத்தவர் (1.22%)

கிள்ளான் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பாலிங் தொகுதி 56 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[2]

பொது

தொகு

கிள்ளான் நகரம்

தொகு

கிள்ளான் நகரம் (Klang) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். சா ஆலாம் பெருநகரம், சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக மாறுவதற்கு முன்னர், கிள்ளான் நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாகத் திகழ்ந்து உள்ளது.

இருப்பினும் வரலாறு சிறப்புமிக்க இந்த நகரம், இன்றும் சிலாங்கூர் மாநிலத்தின் அரச நகரமாக விளங்கி வருகிறது. கிள்ளான் எனும் பெயரில் கிள்ளான் மாவட்டமும் பெயர் கொண்டு உள்ளது. கிள்ளான் நகரம், கோலாலம்பூரில் இருந்து 32 கி.மீ மேற்கில் அமைந்து உள்ளது.

கிள்ளான் வரலாறு

தொகு

14-ஆம் நூற்றாண்டின் மஜபாகித் பேரரசின் நகரகிரேதாகமம் எனும் இலக்கியப் படைப்பில் கிள்ளான் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் 1409 முதல் 1433 வரை மலாக்காவிற்குப் பயணம் செய்த சீனக் கடல் படைத் தளபதி செங் கோவின் தொடக்கக் கால கடல்சார் வரைபடங்களில் கிள்ளான் ஆறு குறிக்கப்பட்டு பெயரிடப்பட்டும் உள்ளது.

துன் பேராக்

தொகு

15-ஆம் நூற்றாண்டில் மலாக்கா சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் கிள்ளான் இருந்தது. மலாக்காவின் வரலாற்றுத் தலைவர் என்று கொண்டாடப்படுபவர் துன் பேராக். இவர் கிள்ளான் நகரத்தில் இருந்து தான் மலாக்காவிற்குச் சென்று மலாக்காவின் மூத்த அமைச்சரனார்.

17-ஆம் நூற்றாண்டில், சிலாங்கூர் கடலோரப் பகுதிகளில், இந்தோனேசியாவில் இருந்து பூகிஸ் மக்கள் குடியேறத் தொடங்கினர். சிலாங்கூர் சுல்தானகம் 1766-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[3][4]

கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி

தொகு
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
கிள்ளான் தொகுதி சிலாங்கூர் பாராட் தொகுதியில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டு,
கிள்ளான் தொகுதி என மறுபெயரிடப்பட்டது
மலாயா கூட்டரசு நாடாளுமன்றம்
1-ஆவது 1959–1963 வி. மாணிக்கவாசகம்
(V. Manickavasagam)
தேசிய முன்னணி
(ம.இ.கா)
மலேசிய நாடாளுமன்றம்
1-ஆவது 1963–1964 வி. மாணிக்கவாசகம்
(V. Manickavasagam)
தேசிய முன்னணி
(ம.இ.கா)
2-ஆவது 1964–1969
1969–1971 நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
3-ஆவது 1971–1973 வி. மாணிக்கவாசகம்
(V. Manickavasagam)
தேசிய முன்னணி
(ம.இ.கா)
1973–1974 பாரிசான் நேசனல்
(ம.இ.கா)
தொகுதி நீக்கப்பட்டது; கிள்ளான் துறைமுகத் தொகுதி;
சா ஆலாம் தொகுதி என பிரிக்கப்பட்டது.
தொகுதி மீண்டும் கிள்ளான் துறைமுகத் தொகுதி;
சா ஆலாம் தொகுதி என உருவாக்கப்பட்டது.
7-ஆவது 1986–1990 இங் செங் கியாட்
(Ng Cheng Kiat)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
8-ஆவது 1990–1995 பாங் குய் லுன்
(Fong Kui Lun)
ஜனநாயக செயல் கட்சி
9-ஆவது 1995–1999 டான் யீ கியூ
(Tan Yee Kew)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
10-ஆவது 1999–2004
11-ஆவது 2004–2008
12-ஆவது 2008–2013 சார்லசு சந்தியாகோ
(Charles Anthony Santiago)
ஜனநாயக செயல் கட்சி
13-ஆவது 2013–2018
14-ஆவது 2018–2022 பாக்காத்தான்
(ஜசெக)
15-ஆவது 2022 – தற்போது கணபதிராவ் விருமன்
(Ganabatirau Veraman)

தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
(கிள்ளான் தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள் 208,913 -
வாக்களித்தவர்கள் 165,554 78.46%
செல்லுபடி வாக்குகள் 163,905 100.00%
செல்லாத வாக்குகள் 1649 -
பெரும்பான்மை 91,801 -
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 வேட்பாளர் விவரங்கள்
சின்னம் வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள் (%)
  கணபதிராவ் விருமன்
(Ganabatirau Veraman)
பாக்காத்தான் 115,539 70.49%
  செயசந்திரன் பெருமாள்
(Jaya Chandran Perumal)
பெரிக்காத்தான் 23,738 14.48%
  தீ ஊய் லிங்
(Tee Hooi Ling)
பாரிசான் 19,762 12.06%
  எட்ரின் ரம்லி
(Hedrhin Ramli)
சுயேச்சை 3,016 1.84%
லூ செங் வீ
(Loo Cheng Wee)
சபா பாரம்பரிய கட்சி 1,140 0.70%
  தீபக் செய்கிசன்
(Deepak Jaikishan)
சுயேச்சை 439 0.27%
  சந்திரா சிவராசன்
(Chandra Sivarajan)
மலேசிய மக்கள் கட்சி 271 0.17%

மேற்கோள்கள்

தொகு
  • "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-12.
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 24. Archived from the original (PDF) on 25 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Ooi Keat Gin (2010). The A to Z of Malaysia. Scarecrow Press. p. 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781461671992.
  4. Swee-Hock Saw (1989). The Population of Peninsular Malaysia. Singapore University Press. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9971691264.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு