குழிப்பணியாரம்

உணவுப்பொருள்
(குழிப் பணியாரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குழிப் பணியாரம் என்பது அரிசிமாவினால் செய்யப்படும் ஒரு உணவுப்பொருள். இது குழிகளுடனுள்ள ஒரு பாத்திரத்தில் (குழிப்பணியாரச் சட்டி) செய்யப்படுகிறது. தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற உணவு. இது உருண்டை வடிவம் கொண்டது. இட்லி மற்றும் தோசை போல் இதுவும் அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள்களால் செய்யப்படுவது. காரம் மற்றும் இனிப்பு என இருவகையான குழிப்பணியாரங்கள் செய்யப்படுகின்றன. சில பகுதிகளில் இது முக்குழி பணியாரம் என்றும் அழைக்கப்படுகிறது.

குழிப்பணியாரம் சுடுதல்
குழிப்பணியாரம்
குழிப்பணியாரம் இனிப்பு (வெல்லம் கலந்தது)

இத்தகுப் பணியாரங்கள் தமிழர் திருவிழாக்களின்போது சிறப்பாகச் செய்யப்படும் பலகாரங்களாகும். பால் பணியாரம் இவற்றுள் இன்னொரு வகையாகும். இனிப்புப் பணியாரத்துக்கு வெல்லம் கலந்த அரிசி மாவை பணியாரக் கல்லில் ஊற்றி வேக வைத்து எடுப்பர்.

துணை உணவுகள்

தொகு

குழிப் பணியாரம் உட்கொள்வதற்கும், சுவையினைக் கூட்டுவதற்கும் சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.

இலக்கியத்திலும் அன்றாட வாழ்விலும்

தொகு

கலித்தொகையில் மருதத்திணையில் உழுந்துப் பணியாரம் பற்றிய குறிப்பொன்று காணப்படுகிறது.[1] முதுவர் பழங்குடியினரின் நாட்டார் பாடலிலும் இவ்வுணவைப்பற்றிய குறிப்பு உள்ளது.[2]

தமிழரல்லாதோர் உணவில்

தொகு
 
நிப்பானியர் தக்கோயாக்கி செய்யும் காட்சி

பணியாரத்தைப்போலவே தோன்றும், அதேபோன்ற அச்சில் வார்த்தெடுக்கும் உணவுகள் பல்வேறு நாடுகளில் உள்ளன. எசுப்பானிய மூர் மக்களின் உணவிலும், இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளிலும் உள்ளன. நிப்பானியர் எண்காலியைக் கொண்டு செய்யும் உணவு ஒன்றும் உண்டு. (எ. கா.) "தக்கோயாக்கி"

இவற்றையும் பார்க்க

தொகு

காட்சிக்கூடம்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Takoyaki
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. மருதநிலநாகன் (கணிப்பு). கலித்தொகை. பார்க்கப்பட்ட நாள் 2014-08-20. வுழுந்தினுந் துவ்வாக் குறுவட்டா நின்னி னிழிந்ததோகூனின் பிறப்பு
  2. Jerome K. Jose. Muduvan Oratures: An Ethnopoetic Study (With Translation Of Primary Texts) (PDF). Archived from the original (PDF) on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-08-20. Tānā tattana tānānē, tānā tattana tānānē Bring, o , bring, b ring kolakatta paniyaram
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழிப்பணியாரம்&oldid=3366281" இலிருந்து மீள்விக்கப்பட்டது