கேட் பிசப் (ஆங்கில மொழி: Kate Bishop) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு கதாபாத்திரம் ஆகும்.

கேட் பிசப்
ஹாக்ஐ
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்சு
முதல் தோன்றியதுயங் அவெஞ்சர்சு #1 (ஏப்ரல் 2005)
உருவாக்கப்பட்டதுஆலன் கேய்ன்பெர்க்
ஜிம் சியுங்
கதை தகவல்கள்
மாற்று முனைப்புகேத்தரின் எலிசபெத் பிசப்
குழு இணைப்புயங் அவெஞ்சர்சு
பங்காளர்கள்கிளின்ட் பார்டன்
திறன்கள்மிகவும் திறமையான வில்லாளி, வாள்வீரங்கனை, தற்காப்புக் கலைஞர், குத்துச்சண்டை வீரர் மற்றும் பிற போர் வடிவங்கள்
இரண்டு போர் தண்டுகள், ஒரு வாள், ஒரு வில் மற்றும் தந்திர அம்புகளைப் பயன்படுத்துத

இந்த கதாபாத்திரத்தை ஆலன் கேய்ன்பெர்க் மற்றும் ஜிம் சியுங் ஆகியோர் இணைந்து உருவாக்கினார்கள். இவரின் முதல் தோற்றம் ஏப்ரல் 2005 இல் வெளியான யங் அவெஞ்சர்சு #1 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது. இவர் அவெஞ்சர்ஸின் கிளின்ட் பார்டன் மற்றும் பிளாக் ஆர்ச்சர் ஆகியோருக்குப் பிறகு ஹாக்கியின் பெயரைப் பெற்ற மூன்றாவது கதாபாத்திரம் மற்றும் முதல் பெண் ஆவார்.[1]

இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகை ஹைலி ஸ்டெயின்பீல்ட் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் தொடரான ஹாக்ஐ என்ற டிஸ்னி+ தொடரில் நடித்துள்ளார்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. McMillan, Graeme (April 10, 2019). "Meet Marvel's Next Hawkeye". The Hollywood Reporter. Archived from the original on April 11, 2019. பார்க்கப்பட்ட நாள் September 11, 2019.
  2. Mancuso, Vinnie (December 2, 2020). "'Hawkeye': Hailee Steinfeld Confirmed as Kate Bishop as Filming Begins". Collider. Archived from the original on December 2, 2020. பார்க்கப்பட்ட நாள் December 2, 2020.
  3. Otterson, Joe (2019-04-10). "Hawkeye Series Starring Jeremy Renner in the Works at Disney+ (EXCLUSIVE)". Variety (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேட்_பிசப்&oldid=3850722" இலிருந்து மீள்விக்கப்பட்டது