கேப்ரியல் தாமஸ்

அமெரிக்க தடகள வீராங்கனை

கேப்ரியல் லிசா தாமஸ் (Gabrielle Lisa Thomas, பிறப்பு 7, திசம்பர், 1996)[3] என்பவர் ஒரு அமெரிக்க தடகள வீராங்கனை ஆவார். இவர் 100 மற்றும் 200 மீட்டர் விரைவோட்டத்தில் மெய்வல்லுநராக உள்ளார். 2024 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீட்டர் தடகள வாகையராவார். ஜார்ஜியாவில் பிறந்து மாசசூசெட்ஸில் வளர்ந்த தாமஸ் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் பயிலும்போதே தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டார். 2018 இல் தொழில்முறை தடகள வாழ்க்கையைத் தொடங்கினார். தாமஸ் நோய்ப்பரவலியலில் துறையில் பொது சுகாதாரத்தில் பட்டம் பெற்றவர்.

கேப்ரியல் தாமஸ்
தாமஸ் 25, யூலை, 2024 அன்று பாரிசில்
தனிநபர் தகவல்
பிறப்புதிசம்பர் 7, 1996 (1996-12-07) (அகவை 27)[1]
அட்லான்டா, அமெரிக்கா[1]
கல்விபேஸ் அகாடமி[2]
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
ஹூஸ்டனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக சுகாதார அறிவியல் மையம்
உயரம்5 அடி 11 அங் (180 cm)[1]
விளையாட்டு
நாடுஅமெரிக்கா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)விரைவோட்டம்
சாதனைகளும் விருதுகளும்
ஒலிம்பிக் இறுதி
  • 2024 Paris
  • 200 m, 3 தங்கம்
  • 4 × 100 m, 3 தங்கம்
  • 4 × 400 m, 3 தங்கம்
  • 2020 Tokyo
  • 200 m, 3 வெண்கலம்
  • 4 × 100 m, 3 வெள்ளி
தனிப்பட்ட சாதனை(கள்)

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில், இவர் 200 மீ ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும், பெண்களுக்கான 4 × 100 மீ தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். 25, ஆகத்து, 2023 அன்று, புடாபெஸ்டில் நடந்த 2023 உலக தடகள சாம்பியன்சிப்பில் 21.81 வினாடிகளில் 200 மீட்டர் தொலைவிக் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.[4] இவர் பெண்களுக்கான 4x100மீ தொடர் ஓட்டப் பந்தையப் போட்டியில் 41.03 வினாடிகளில் இலக்கை அடைந்து சாதனை புரிந்து அமெரிக்க அணிக்கு ஒரு தங்கப் பதக்கம் பெற்றுத்தந்தார்.[5] பாரிசில் நடந்த 2024 கோடை ஒலிம்பிக் போட்டிகளில் தாமஸ் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார்.

துவக்ககால வாழ்க்கையும் பின்னணியும்

தொகு

தாமஸ் 7, திசம்பர், 1996 அன்று ஜார்ஜியாவின் அட்லான்டாவில் பிறந்தார். இவரது தாய், அமெரிக்கரான ஜெனிபர் ராண்டால் ஆவார். தந்தை ஜமைக்காவூச் சேர்ந்த டெஸ்மண்ட் தாமஸ் ஆவார். கேப்ரியலுக்கு இரட்டையர்களான சகோதரர்கள் உள்ளனர்.[6] 2007 ஆம் ஆண்டில், எமரி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவரது தந்தை, மாசச்சூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணிசெய்வதற்காக குடும்பத்துடன் மாசசூசெட்ஸ் மாநிலத்தின் புளோரன்சிக்கு இடம்பெயர்ந்தார். குடும்பம் புளோரன்சில் குடியேறிய போது, ​​தாமஸ் சாப்ட்பால் மற்றும் சாக்கர் விளையாட்டுகளை விரும்பி விளையாடினார், பின்னர் வில்லிஸ்டன் நார்தாம்ப்டன் பள்ளியில் தடகள அணியில் இணைந்தார். ஒரு சமயம் தன் பாட்டி வீட்டில் தொலைக்காட்சியில் அமெரிக்க வீராங்கனையான அலிசன் பெலிக்ஸ் ஓடுவதைப் பார்த்து, தனக்கு தடகள வீராங்கனையாக வேண்டும் என்ற ஆசை வந்ததாக கூறினார். உயர்நிலைப் பள்ளியில் பயின்ற நான்கு ஆண்டுகளில், தாமஸ் பல விளையாட்டு சாதனைகளைப் புரிந்தார். ஒவ்வொரு ஆண்டும் மிகவும் மதிப்புமிக்க வீரர் என்ற விருதைப் பெற்றார்.[7][8]

கேபி 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ஐவி லீக்கின் மிகச்சிறந்த தடகள வீராங்கனையாக அங்கீகரிக்கப்பட்டார். அது இவரது புகழ்பெற்ற தடகள வாழ்க்கையின் தொடக்கத்தைக் குறிப்பதாக உள்ளது.[9]

ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் அங்கு நரம்பியல் மற்றும் உலகளாவிய ஆரோக்கியத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பைப் பயின்றார்.[10] ஆஸ்டின் பிராந்திய வளாகத்தில் உள்ள ஹூஸ்டனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக ஹெல்த் சயின்ஸ் மையத்தில் நோய்ப்பரவலியல் துறையில்,[10][11] மே 2023 இல், இவர் பொது சுகாதாரப் பட்டப்படிப்பில் முதுகலை பட்டம் பெற்றார்.[12][13]

தொழில்

தொகு

தாமஸ் ஆர்வர்டில் பயின்ற காலத்தில், தடகளத்தில் மூன்று ஆண்டுகளில் ஆறு வெவ்வேறு போட்டிகளில் 22 வெற்றிகளை ஈட்டினார். கல்லூரி மற்றும் ஐவி லீக்கில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் உட்புற 60 மீட்டர் பந்தையங்களில் சாதனைப் புரிந்தார்.[8]

ஆர்வர்டில் படிப்பு முடிந்த பிறகு, டோன்ஜா புஃபோர்ட்- பெய்லியிடம் பயிற்சி பெற ஆஸ்டின், டெக்சாசுக்கு சென்றார்.[14]

 
தாமஸ் (இடது) இல் 2020 அமெரிக்க ஒலிம்பிக் தகுதி ஓட்டம்.

2021 இல் இவருக்கு நடத்தபட்ட எம். ஆர். ஐ. சோதனையில் இவரது கல்லீரலில் ஒரு கட்டியை இருப்பது தெரியவந்தது. ஆனால் அது தீங்கற்றது என்று என பின்னர் அறியப்பட்டது.[15] ஒத்திவைக்கப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்கா சார்பில் கலந்துகொண்டார்.[16] 26, சூன், 2021 அன்று நடந்த ஐக்கிய மாநில ஒலிம்பிக் சோதனை போட்டிகளில் 21.61 வினாடிகளில் இவர் நிகழ்த்திய சாதனையானது, அந்த நேரத்தில் இரண்டாவது அதிவேகமான ஓட்டமாக இருந்தது. அது பின்னர் உலக சாதனை படைத்த புளோரன்ஸ் கிரிஃபித்-ஜாய்னரால் முறியடிக்கப்பட்டது.[17] இத் தருணம் தாமசுக்கே ஆச்சரியத்தை அளித்தது; பந்தயத்திற்குப் பிறகு, "ஒரு ஓட்டப்பந்தய வீரராங்கனையாக நான் என்னை உணர வைத்தது. நான் இன்னும் அதிர்ச்சியிலேயே இருக்கிறேன்... ஒலிம்பிக் அணியில் இடம்பெற வேண்டும் என்பதே எனது கனவு... இப்போது நான் [அதை] சாதித்துவிட்டேன், மேலும் உயர்ந்த இலக்குகளை அடைய திட்டடமிடப் போகிறேன்" என்றார்.[18] 3, ஆகத்து, 2021 அன்று, ஒலிம்பிக் இறுதிப் போட்டியில், எலைன் தாம்சன்-ஹேரா (தங்கம்) மற்றும் கிறிஸ்டின் ம்போமா (வெள்ளி) ஆகியோருக்கு அடுத்து தாமஸ் 21.87 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கம் வென்றார்.[19][20] மூன்று நாட்களுக்குப் பிறகு, அமெரிக்க அணி 4 x 100 மீ தொடர் ஓட்டத்தின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது, தாமஸ் சிறப்பாக ஓடினார். ஜமைக்கா அணிக்கு அடுத்து இவர் இடம்பெற்ற அமெமெரிக்க அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இதையடுத்து அணி வீரர்களான ஜவியானே ஆலிவர், டீஹானா டேனியல்ஸ், ஜென்னா பிரந்தினி ஆகியோருடன் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.[21][22][20]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Team USA | Gabby Thomas". teamusa.org. USOC. April 11, 2024. பார்க்கப்பட்ட நாள் August 9, 2024.
  2. "Gabby Thomas' Olympic flame was first lit racing the boys at Atlanta's Pace Academy". August 7, 2024.
  3. "Gabrielle THOMAS – Athlete Profile". உலக தடகள அமைப்பு. Archived from the original on June 14, 2021. பார்க்கப்பட்ட நாள் January 1, 2023.
  4. "FINAL | 200 Metres | Results | Budapest 23 | World Athletics Championships". worldathletics.org. Archived from the original on September 17, 2023. பார்க்கப்பட்ட நாள் September 17, 2023.
  5. McAlister, Sean (August 26, 2023). "World Athletics Championships 2023: Sha'Carri Richardson leads USA to 4x100m relay gold over Jamaica's superstars Shelly-Ann Fraser-Pryce and Shericka Jackson". olympics.com. பன்னாட்டு ஒலிம்பிக் குழு. Archived from the original on September 17, 2023. பார்க்கப்பட்ட நாள் September 16, 2023.
  6. Thomas, Gabrielle (February 21, 2021). "Instagram post". இன்ஸ்ட்டாகிராம். Archived from the original on December 25, 2021. பார்க்கப்பட்ட நாள் June 27, 2021.
  7. Dillon, Kevin (May 15, 2015). "Williston Northampton's Gabby Thomas to finish decorated track career at NEPSAC Championships Saturday". masslive. Archived from the original on July 9, 2021. பார்க்கப்பட்ட நாள் July 1, 2021.
  8. 8.0 8.1 Azzi, Alex (June 27, 2021). "Gabby Thomas's atypical - but fast! - journey to the Tokyo Olympics". NBC Sports: On Her Turf. Archived from the original on June 27, 2021. பார்க்கப்பட்ட நாள் June 27, 2021.
  9. "Thomas, Marshall Most Outstanding Track Performers at Ivy Indoor Heps For Harvard". Harvard University. 25 February 2018. பார்க்கப்பட்ட நாள் 10 September 2024.
  10. 10.0 10.1 Azzi, Alex (June 9, 2021). "Olympic hopeful Gabby Thomas: the world's fastest epidemiologist?". NBC Sports: On Her Turf. Archived from the original on June 27, 2021. பார்க்கப்பட்ட நாள் June 27, 2021.
  11. Bolies, Corbin (June 27, 2021). "Gabby Thomas Runs Second Fastest 200-Meter Race Ever". The Daily Beast. Archived from the original on June 27, 2021. பார்க்கப்பட்ட நாள் June 27, 2021.
  12. France, Sean Gregory / Saint-Denis (2024-08-07). "How Gabby Thomas Won 200-M Olympic Gold". TIME (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-14.
  13. Schnell, Lindsay. "Gabby Thomas was a late bloomer. Now, she's won Olympic gold in 200 meters". USA TODAY (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-14.
  14. "How training with 3-time Olympian Tonja Buford-Bailey has helped shape Gabby Thomas ahead of 2024 Olympics". Daily Hampshire Gazette (in ஆங்கிலம்). 2024-08-04. பார்க்கப்பட்ட நாள் 2024-08-13.
  15. Dragon, Tyler. "Gabby Thomas wins women's 200 meters at U.S. Olympic trials in world-best time, Allyson Felix fails to qualify". USA Today. Archived from the original on June 27, 2021. பார்க்கப்பட்ட நாள் June 27, 2021.
  16. Reid, Scott (June 25, 2021). "Gabby Thomas runs world-best 200 at Olympic Trials". Orange County Register. Archived from the original on June 25, 2021. பார்க்கப்பட்ட நாள் June 27, 2021.
  17. "200 meters - women". World Athletics. June 26, 2021. Archived from the original on June 27, 2021. பார்க்கப்பட்ட நாள் June 27, 2021.
  18. Kilgore, Adam. "Gabby Thomas, Rai Benjamin and Grant Holloway have a brush with history at U.S. track trials" இம் மூலத்தில் இருந்து June 27, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210627125733/https://www.washingtonpost.com/sports/olympics/2021/06/26/us-track-trials-rai-benjamin-grant-holloway-gabby-thomas/. 
  19. "Harvard grad Gabby Thomas wins bronze in women's 200-meter final in Tokyo". CBS News. August 3, 2021. Archived from the original on September 2, 2021. பார்க்கப்பட்ட நாள் August 6, 2021.
  20. 20.0 20.1 Alford, Jovan C. (August 6, 2021). "Jamaica wins women's 4x100-meter relay in dominating fashion". DraftKings Nation. Archived from the original on August 6, 2021. பார்க்கப்பட்ட நாள் August 6, 2021.
  21. "Gabby Thomas '19 Wins Silver Medal With U.S. 4x100m Relay Team at 2020 Tokyo Olympics". Harvard University. August 6, 2021. Archived from the original on August 6, 2021. பார்க்கப்பட்ட நாள் August 6, 2021.
  22. "Women's 4x100m relay Final - Results | Tokyo 2020 Olympics". Eurosport. Archived from the original on September 17, 2023. பார்க்கப்பட்ட நாள் August 6, 2021.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gabrielle Thomas
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்ரியல்_தாமஸ்&oldid=4096220" இலிருந்து மீள்விக்கப்பட்டது