கேரள நாள்

கேரள மாநிலம் உருவான நாள்

கேரள நாள் அல்லது கேரள பிறவி என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் பிறப்பைக் குறிப்பதாகும். இந்தியா விடுதலை அடைந்த பிறகு, 1 நவம்பர் 1956 அன்று கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன், இது பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் மூன்று பெரிய மாகாணங்கள் மற்றும் பல வெளிப் பிரதேசங்களைச் சேர்ந்ததாக இருந்தது.

இந்தியாவில் கேரளத்தின் இருப்பிடம்

காலக்கோடு/வரலாறு

தொகு

1956 இக்கு முன், கேரளம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது: தென் கனரா ( காசர்கோடு பகுதி ), மலபார், கொச்சி, திருவிதாங்கூர் .

மலபார் கண்ணூர், கோழிக்கோடு, மலப்புறம், பாலக்காட்டைச் சுற்றியுள்ள சில பகுதிகள், திருச்சூர் மற்றும் கொச்சியைச் சுற்றியுள்ள சில பகுதிகள் வடக்கு மற்றும் வட-மத்திய பகுதியை உள்ளடக்கியது. திப்பு சுல்தானால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு, இந்தப் பகுதி கோழிக்கோடு சாமூத்திரி, அரக்கல் இராச்சியம், கொளத்துநாடு, தனுர் இராச்சியம், வள்ளுவநாடு இராச்சியம் போன்ற பல சிறிய சிற்றரசுகளால் ஆளப்பட்டது. ஆங்கிலேய-மைசூர் போர்களுக்குப் பிறகு இது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் வசம் வந்து சேர்ந்தது.[1][2] அப்பகுதியில் முதலில் பிரித்தானிய பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது, பின்னர் மதராசு மாகாணத்துக்கு மாற்றப்பட்டது.[3][4][5] கடலோர நகரமான மாகே 1950 களின் முற்பகுதியில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒருங்கிணைக்கப்படும் வரை பிரெஞ்சு குடியேற்றமாகவே இருந்தது. மத்தியப் பகுதியானது திருச்சூரில் இருந்து நிர்வகிக்கப்பட்ட முந்தைய கொச்சி இராச்சியத்தை உள்ளடக்கியது. தெற்கே உள்ள மாகாணம் திருவாங்கூர் இராச்சியம், திருவனந்தபுரம் நகரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கொச்சி ஒரு அடிமை இராச்சியமாகமாக இருந்தபோது, திருவிதாங்கூர் இராச்சியம் ஆங்கிலேயரின் மேலாதிக்கத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டது.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கோழிக்கோடு பகுதியின் மாப்பிளமார் முசுலீம்கள் பெரும்பாலும் இந்துக்களாக இருந்த ஜமீன்தார்களுக்கும் பிரித்தானிய இராச்சியத்திற்கும் எதிராக கிளர்ச்சி செய்தனர்.[6] அடுத்த ஆண்டுகளில், திருவிதாங்கூர் மற்றும் கொச்சியிலும் அரசியல் உரிமைகள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராட்டங்கள் நடந்தன. 1947 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாக்கித்தான் என பிரிக்கப்பட்ட பிறகு, இந்தியாவின் ஒரு பகுயாக ஆன திருவிதாங்கூரும் கொச்சியும் 1949 சூலை முதல் நாள் இணைக்கப்பட்டு திருவாங்கூர்-கொச்சி (திரு-கொச்சி) ஆனது.[7] ஐக்கிய கேரள இயக்கம் என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான இயக்கம், மொழிவழியாக மாநிலங்களை சீரமைத்து கேரள மாநிலத்தை உருவாக்குவதற்கு உந்துதலைக் கொடுத்தது.[8][9]

நவம்பர் 1, 1956 அன்று, சென்னை மாநிலத்தின் தென் கனரா மாவட்டத்தில் உள்ள காசர்கோடு வட்டம், மலபார் மாவட்டம் மற்றும் திருவாங்கூர்-கொச்சி மாநிலம் ( (தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்ட நான்கு தெற்கு வட்டங்களை விடுத்து) ஆகியவற்றை ஒன்றிணைந்து, மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது .[10][11] 1957 இல் புதிய கேரள சட்டமன்றத்திற்கான முதல் தேர்தலைத் தொடர்ந்து ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் பொதுவுடைமைக் கட்சியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. சான் மரீனோ குடியரசில் 1945 தேர்தல்களில் பொதுவுடமைக் கட்சியின் வெற்றிக்குப் பிறகு, இது ஆரம்பகாலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிச அரசாங்கங்களில் ஒன்றாகும்.

நிகழ்வுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. British Museum; Anna Libera Dallapiccola (22 June 2010). South Indian Paintings: A Catalogue of the British Museum Collection. Mapin Publishing Pvt Ltd. pp. 12–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7141-2424-7. பார்க்கப்பட்ட நாள் 18 November 2012.
  2. Edgar Thorpe, Showick Thorpe; Thorpe Edgar. The Pearson CSAT Manual 2011. Pearson Education India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-5830-4. பார்க்கப்பட்ட நாள் 18 November 2012.
  3. The Edinburgh Gazetteer. Longman, Rees, Orme, Brown, and Green. pp. 63–. பார்க்கப்பட்ட நாள் 18 November 2012.
  4. Dharma Kumar. Land and Caste in South India: Agricultural Labor in the Madras Presidency During the Nineteenth Century. CUP Archive. pp. 87–. பார்க்கப்பட்ட நாள் 18 November 2012.
  5. K.P. Ittaman (1 June 2003). History of Mughal Architecture Volume Ii. Abhinav Publications. pp. 30–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-034-1. பார்க்கப்பட்ட நாள் 18 November 2012.
  6. Pan-Islam in British Indian Politics: A Study of the Khilafat Movement, 1918–1924.
  7. India Since 1947: The Independent Years. பார்க்கப்பட்ட நாள் 18 November 2012.
  8. "Gulf Manorama | Kerala Day November First". பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.
  9. "Kerala state turns 55 - Economic Times". பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.
  10. Nossiter, Thomas Johnson (1982). Communism in Kerala: A Study in Political Adaptation (in ஆங்கிலம்). University of California Press. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520046672.
  11. Sarina Singh; Amy Karafin; Anirban Mahapatra (1 September 2009). South India. Lonely Planet. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74179-155-6. பார்க்கப்பட்ட நாள் 6 January 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_நாள்&oldid=3924896" இலிருந்து மீள்விக்கப்பட்டது