கே. எஸ். ஹெக்டே
கௌடூர் சதானந்தா ஹெக்டே (11 சூன் 1909 - 24 மே 1990) என்பவர் ஒரு இந்திய நீதிபதியும் அரசியல்வாதியும் ஆவார். இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பின்னர் மக்களவை சபாநாயகராகவும் பணியாற்றினார் .
கௌடூர் சதானந்தா ஹெக்டே | |
---|---|
இந்திய உச்ச நீதிமன்றம் நீதியரசர் | |
பதவியில் 17 சூலை 1967 – 30 ஏப்ரல் 1973 | |
7வது இந்திய மக்களவைத் தலைவர் | |
பதவியில் 21 சூலை 1977 – 21 சனவரி 1980 | |
Deputy | கோடி முராஹரி |
முன்னையவர் | நீலம் சஞ்சீவ ரெட்டி |
பின்னவர் | பல்ராம் சாக்கர் |
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் for பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1977–1980 | |
பின்னவர் | டி. ஆர். ஷமண்ணா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | காவ்தூர் கிராமம், தென் கன்னட மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போதைய இந்தியா, கருநாடகம்) | 11 சூன் 1909
இறப்பு | 25 மே 1990 மங்களூர், இந்தியா | (அகவை 81)
அரசியல் கட்சி | ஜனதா கட்சி |
துணைவர் | மீனாட்சி ஹெக்டே |
பிள்ளைகள் | என். சந்தோசு எக்டே உட்பட ஆறுபேர் |
முன்னாள் கல்லூரி | மாநிலக் கல்லூரி, சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை |
மூலம்: [1] |
ஹெக்டே நிட்டே கல்வி அறக்கட்டளையின் நிறுவனராவார். இவர் சந்தோஷ் ஹெக்டேவின் தந்தை ஆவார், இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பணியாற்றினார்.
அரசியல் வாழ்க்கை
தொகுஹெக்டே 1947 முதல் 1951 வரை அரசு வழக்கறிஞராக பணியாற்றினார். 1952 ஆம் ஆண்டில், இவர் மாநிலங்களவை க்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினராக 1957 வரை இருந்தார். அப்போதைய மைசூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படதையடுத்து மக்களவை உறுப்பினர் பதவியை விட்டு விலகினார். தில்லி, இமாச்சலப்பிரதேசம் ஆகிய உயர்நீதி மன்றங்களில் தலைமை நீதிபதியாக இருந்தார்.[1] 1967 ஆம் ஆண்டில், ஹெக்டே இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 30, 1973 அன்று, தனது இளைய சகாக்களில் ஒருவர் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதால், இவர் தனது பதவி விலகலை கொள்கை அடிப்படையில் மேற்கொண்டார்.
அதன்பிறகு, ஹெக்டே மீண்டும் சமூக-அரசியல் இயக்கங்களில் தீவிரமாக பங்கேற்கத் தொடங்கினார். 1977 ஆம் ஆண்டில், பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியில் இருந்து ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பல மாதங்களுக்குப் பிறகு நீலம் சஞ்சீவ ரெட்டி பதவி விலகிய பின்னர் இவர் சபாநாயகரானார். 1977 முதல் 1980 வரை இவர் இந்த பதவியை வகித்தார். லால் கிருஷ்ண அத்வானி ஹெக்டேவின் பெயரை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைத்திருந்தார். ஆனால் சஞ்சீவ ரெட்டிக்கே வாய்ப்பு கிடைத்தது. இதனால் ரெட்டி பதவி விலக அவருக்கு பதிலாக ஹெக்டே மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பபடார்.[2] 1979 ல் மக்களவை கலைக்கப்பட்ட பின்னர் ஹெக்டே தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கினார். 1980 இல் பாஜக நிறுவப்பட்டபோது இவர் பாஜகவில் சேர்ந்தார். அதன் துணைத் தலைவராக சிலகாலம் பணியாற்றினார்.[3] 1979 ஆம் ஆண்டு நிட்டே கிராமத்தில் ஒரு உயர்நிலைப் பள்ளியை துவக்குவதற்காக நிட்டே கல்வி அறக்கட்டளையை நிறுவினார். ஹெக்டே 1990 மே 24 அன்று மங்களூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், மூன்று மகன்களும், மூன்று மகள்களும் இருந்தனர்.[4]
நீதிபதியாக
தொகுஇந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக, இவரது தலைமையில் பதின்மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இருந்தார் இந்த அமர்வு பிரபலமான கேசவானந்த பாரதி எதிர் கேரள மாநில வழக்கை விசாரித்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ கே. எஸ். ஹெக்டேவின் பிறந்த நாள்: நாடாளுமன்றத்தில் மரியாதை, செய்தி, 2018 சூன் 12, தினமணி
- ↑ https://www.indiatoday.in/latest-headlines/story/karnataka-govt-will-take-full-care-of-hegdes-concerns-advani-78429-2010-07-10
- ↑ Swain, Pratap Chandra (2001). Bharatiya Janata Party: Profile and Performance. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176482578.
- ↑ "Obituary". https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19900526&printsec=frontpage&hl=en.
வெளி இணைப்புகள்
தொகு- Speakerloksabha.nic.in இல் முன்னாள் சபாநாயகர் கே.எஸ்.ஹெக்டே
- நாடாளுமன்ற நாடாளுமன்ற இணையதளத்தில் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்று ஓவியம்