கொக்ரேபெல்லுர்
கொக்ரேபெல்லுர் (Kokkarebellur) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தின் மத்தூர் வட்டத்திலுள்ள உள்ள ஒரு கிராமம். இக்கிராமத்துக்கு மஞ்சள் மூக்கு நாரையின் கன்னடப் பெயரான "கொக்ரே" எனப் பெயரிடப்பட்டது. இந்த பறவை ஒவ்வொரு ஆண்டும் இங்கு அதிக எண்ணிக்கையில் கூடுகட்டுகிறது. மைசூர் மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு இடையில் மத்தூர் அருகே இந்த கிராமம் அமைந்துள்ளது. மஞ்சள் மூக்கு நாரைகளைத் தவிர, கூழைக்கடாக்களும் இங்கு அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இவ்விரு இனங்களும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறுத்தலுக்கு அருகில் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளனது. இந்தியாவிலுள்ள பறவைகளின் 21 இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் இந்த கிராமமும் ஒன்றாகும்.[1][2][3]
கொக்ரேபெல்லுர் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 12°30′40″N 77°05′28″E / 12.511°N 77.091°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | மண்டியா |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மஞ்சள் மூக்கு நாரையும் கூழைக்கடா அச்சுறுத்தலுக்கு ஆளாகிவரும் இனங்களாக பன்னாட்டை இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தல் வகைப்படுத்தப்பட்டுள்ளது.BirdLife International (2008). "Mycteria leucocephala". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/144777/0. |
கொக்கரேபெல்லூரின் தனித்தன்மை கூழைக்கடாக்களுக்கும் இந்த பறவையை தங்கள் உள்ளூர் பாரம்பரியமாக ஏற்றுக்கொண்ட கிராமவாசிகளுக்கும் இடையிலான நீண்டகால பிணைப்பில் உள்ளது. ஏனெனில் பறவைகள் கிராமத்திற்கு நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும் என்று கருதுகின்றனர். இந்தப் பறவைகளின் கழிவுகள் தாவர வளர்ச்சிக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களான குவானோ நைட்ரஜன், பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை வழங்கி கிராமவாசிகளுக்கு வணிக நன்மைகளைத் தருகிறது. பல ஆண்டுகளாக, கிராமவாசிகளுக்கும் புலம்பெயர்ந்த பறவைகளுக்கும் இடையிலான இந்த தனித்துவமான உறவின் கதை கிராமத்திற்கு பல சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது.[1][2]
சொற்பிறப்பியல்
தொகுகிராமத்தின் பெயர் "கொக்கரேபெல்லூர்" (கன்னடம் - ಕೊಕ್ಕರೆಬೆಳ್ಳೂರು) இரண்டு சொற்களிலிருந்து பெறப்பட்டது: 'கொக்கரே' அதாவது "நாரை" அல்லது "கூழைக்கடா" என்றும் "பெல்லூர்" என்றால் "வெள்ளை கிராமம்" எனவும் பொருள்.
நிலவியல்
தொகுஇந்த கிராமம் சிம்சா ஆற்றின் மேற்கே 800 மீட்டர் (2,600 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. கிராமத்திற்கு அருகிலுள்ள பகுதி பல பெரிய குளங்கங்களின் வடிவத்தில் பெரிய நீர்நிலைகளை வழங்குகிறது. அதாவது தைலூர் கெரே ('கெரே' என்றால் "குளம்"), மத்தூர் கெரே மற்றும் சோல் கெரே போன்றவை கூழைக்கடாக்களுக்கும் பிற பறவைகளுக்கு உணவு தேவைகளை (குறிப்பாக, மீன்கள், கிளிஞ்சல் பூச்சி) நிறைவு செய்கிறது. கொக்கரேபெல்லூரில் கிராமத்திலுள்ள அத்தி மரங்கள், புளிய மரங்கள் இப்பறவைகள் கூடு கட்ட உதவியாக உள்ளன. கிராமம் அமைந்துள்ள கரும்பு உட்பட பெரிய பயிர்கள் பயிரிடும் விவசாய நிலங்கள் உள்ளன. பறவைகள் இடம்பெயரும் பருவத்தில், கூழைக்கடாக்களும் மஞ்சள் மூக்கு நாரைகளும் அதிக அளவில் பெரும்பாலும் புளியமரங்களில் இங்கு கூடு கட்டுகின்றன.[1][2]
இந்த மரங்களிலிருந்தும், மரத்திற்குக் கீழே உள்ள நிலத்திலிருந்தும் பயிர்கள் (புளி) மூலம் கிடைக்கும் நன்மைகள் இழக்கப்படுவதால், கர்நாடக வனத்துறை பறவைகள் கூடு கட்ட பயன்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை கிராம மக்களுக்கு ஈடுசெய்கிறது.[1]
பிற பறவைகள்
தொகுஇவ்விரு பறவையினக்களைத் தவிர, கிராமத்து மரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் மற்ற நீர்ப்பறவைகளாக சின்ன நீர்க்காகம் கரிய அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, இராக்கொக்கு, குளத்துக் கொக்கு போன்றவைகளும் உள்ளன.[2]
கொக்கரேபெல்லூரில் கூடு கட்டும் முக்கிய இனங்கள் -கூழைக்கடாக்களும், மஞ்சள் மூக்கு நாரைகளும் 2008ஆம் ஆண்டின் பன்னாட்டு பறவைகள் பாதுப்புச் சங்கத்தின் சிவப்புப் பட்டியலில் "அச்சுறுத்தப்பட்ட பறவை வகைகள்" என வகைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு நிலையை வழங்குகின்றன [4]
மேலே கூறப்பட்ட பறவைகளுக்கு மேலதிகமாக, இந்த பகுதியில் 250க்கும் மேற்பட்ட பறவையினங்களும் [5] காணப்படுகின்றன.
பாதுகாப்பு முயற்சிகள்
தொகுவிவசாய நோக்கங்களுக்காக மரம் வெட்டுதல் வடிவத்தில் அச்சுறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக கூழைக்கடாக்கள் இந்தியாவிலும், பிற ஆசியாவின் பல நாடுகளிலும் ( இலங்கை, சீனா, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா , இலாவோசு) சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றன. கிராம மக்களுடன் கூழைக்கடாக்களின் வரலாற்று தொடர்புகளை நிலைநாட்ட சமூக அடிப்படையிலானத் திட்டம் நிறுவப்பட்டுள்ளது.[3][4]
அணுகல்
தொகுஇது, சாலை, தொடர் வண்டி, விமானப் போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இது ,பெங்களூரு-மைசூர் நெடுஞ்சாலையில் பெங்களூரிலிருந்து 83 கிலோமீட்டர் (52 மைல்) தொலைவிலும், மண்டியாவின் வடகிழக்கில் 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவிலும் உள்ளது. மத்தூர் மற்றும் மண்டியா ஆகியவை மைசூர்-பெங்களூர் நகரத்திலிருந்து தொடர் வண்டிகள் மண்டியா வழியாக இயக்கப்படுகின்றன. நாட்டின் பெரும்பாலான நகரங்களுக்கும் சில சர்வதேச நாடுகளுக்கும் தினசரி சேவைகளுடன் அருகிலுள்ள கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் பெங்களூரில் உள்ளது.[1][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Karnataka State of Environment Report and Action Plan Biodiversity Sector" (PDF). Kokkrebennur. Bangalore: Environmental Information System (ENVIS), Centre for Ecological Sciences, Indian Institute of Science. 2004. p. 120. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Kokrebellur-the Haven for Spot-billed Pelicans" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
- ↑ 3.0 3.1 "Spot-billed Pelican - BirdLife Species Factsheet". BirdLife International. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 4.0 4.1 "Spot-billed pelican (Pelecanus philippensis)". ARKIVE Images of Life on Earth. Archived from the original on 2013-04-14. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Archived copy". Archived from the original on 2012-06-18. பார்க்கப்பட்ட நாள் 2012-06-18.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Kokarebellur". பார்க்கப்பட்ட நாள் 2009-10-02.