கொடுமுண்ட
கொடுமுண்ட (Kodumunda) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி வட்டத்தில் உள்ள முத்துதாலா மற்றும் பருதூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூராகும். இது முத்துதால ஊராட்சியில் உள்ள ஒரு சிறு வணிக மையமாகும். பருதூர் ஊராட்சியில் உள்ள கொடுமுண்டா பகுதிகள் மேற்கு கொடுமுண்டா என அழைக்கப்படுகிறது. முத்தாலாவில் உள்ள ஒரே தொடருந்து நிலையம் கொடுமுண்டாவில் அமைந்துள்ளது. இங்கு குறிப்பிடத்தக்க கோயில்களாக, முத்தச்சியர்காவு, செருநீர்க்கரை சிவன் கோயில், மண்ணியம்பத்தூர் சரசுவதி கோயில், மடயில் லட்சுமிநரசிம்மர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. இக்கிராமத்தில் முத்தச்சியர்காவு தாளப்பொலியும், கொடுமுண்டா நேர்ச்சையும் முக்கிய திருவிழாக்களாகும்.
கொடுமுண்ட
Kodumunda east and west | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 10°49′13″N 76°09′08″E / 10.8203°N 76.1523°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
அரசு | |
• வகை | கிராம ஊராட்சி |
• நிர்வாகம் | முதுதல ஊராட்சி&பருதூர் ஊராட்சி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 679303 |
தொலைபேசி குறியீடு | 091-466 |
வாகனப் பதிவு | KL-52 |
அருகில் உள்ள நகரம் | பட்டம்பி |
மக்களவைத் தொகுதி | பாலக்காடு&பொன்னானி |
குடிமை முகமை | முதுதல ஊராட்சி&பருதூர் ஊராட்சி |
காலநிலை | மிதமான (கோப்பென்) |
புவியியல்
தொகுகொடுமுண்டா இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதுதல ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி கிழக்கு கொடுமுண்டா (மலையாளத்தில் கிழக்கே கொடுமுண்டா) என்றும், மற்றொரு பகுதியாக, பருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியானது மேற்கு கொடுமுண்டா (மலையாளத்தில் பதின்ஹரே கொடுமுண்டா) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு பகுதிகளும் தொடருந்து பாதையால் பிரிக்கப்பட்டுள்ளன. கிராமத்தின் உள்கட்டமைப்பு இரண்டு பிரிவுகளுக்கும் தனித்தனியே உருவாக்கபட்டுள்ளதன.
அரசியல்
தொகுகொடுமுண்டாவின் கிழக்குப் பகுதி பட்டாம்பி சட்டமன்றத் தொகுதிக்கும் பாலக்காடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மேற்கு கொடுமுண்டா, பொன்னானி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திரித்தாலாவில் உள்ளது.
வழிபாட்டுத் தலங்கள்
தொகுகொடுமுண்டாவில் பல கோயில்களும், பள்ளிவாசல்களும் உள்ளன. கொடுமுண்டாவில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்று நெடுங்கநாடு முத்தச்சியர்காவு ஆகும். மேற்கு கொடுமுண்டாவில் அமைந்துள்ள மணியம்பத்தூர் சரஸ்வதி கோயில் மலபாரில் உள்ள ஒரே சரசுவதி கோயிலாகும். கொடுமுண்டா ஜும்ஆ பள்ளிவாசல் மேற்கு கொடுமுண்டா ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியவை இங்கு உள்ள முக்கியமான பள்ளிவாசல்களாகும். முத்தச்சியர்காவு தாளப்பொலி, வளவில் கசேத்திர (செருநீர்க்கரை சிவன் கோவில்) சிவராத்திரி கொடுமுண்டாவின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகும். இது ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கொடுமுண்டா நேர்ச்சை இப்பகுதியில் மற்றொரு முக்கிய திருவிழாவாக கருதப்படுகிறது.
கல்வி
தொகுகொடுமுண்டா அருகே ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. முத்துதால ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இது பருதூர் ஊராட்சியில் அமைந்துள்ளது. ஜி.எச்.எஸ். அரசுப் பள்ளியானது மேற்கு கொடுமுண்டாவில் அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் கொடுமுண்டாவில் தொடக்கக் கல்வியை வழங்கும் இரண்டு கல்வி நிறுவனங்களும் உள்ளன.
நலவாழ்வு
தொகுமுத்துதால ஊராட்சிக்கு உட்பட்ட கொடுமுண்டாவில் அரசு ஆயுர்வேத மருந்தகம் உள்ளது. கொடுமுண்டாவில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் முத்துதால அரசு மருத்துவமனை உள்ளது. மேல் சிகிச்சைக்காக மக்கள் பட்டாம்பி செல்கின்றனர்.
போக்குவரத்து
தொகுநீர்வழிகள்
தொகுபாரதப்புழா ஆற்றின் வழியாக வர்த்தக போக்குவரத்து இருந்தது. வரந்தகுட்டிக்கடவு என்பது திரிதலையும் கொடுமுண்டாவையும் இணைக்கும் படகு மையமாகும். இப்போது நீர்வழி போக்குவரத்து வசதி இல்லை. 2000 ஆம் ஆண்டு வரை, சிறிய படகுகள் மற்றும் பெரிய படகுகள் இந்த பகுதியில் ஒரு பொதுவான போக்குவரத்து சாதனமாக இருந்தன.
சாலை
தொகுஇந்த ஊரனது பட்டாம்பியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பட்டாம்பி-பள்ளிப்புரம் சாலையில் அமைந்துள்ளது. இந்த ஊரை சாலை அல்லது தொடருந்து மூலம் அடையலாம். இதன் வழித்தடத்தில் கொடுமுண்டா முக்கியமான இடமாகும். பட்டாம்பி - பள்ளிப்புரம், பட்டாம்பி - வளஞ்சேரி (கொடுமுண்டா- முத்துதாலா வழியாக), மற்றும் பட்டாம்பி - கொப்பம் (கொடுமுண்டா- முத்துதாலா வழியாக) செல்லும் பேருந்துகள் கொடுமுண்டா வழியாக செல்கின்றன, இருப்பினும் மேற்கு கொடுமுண்டாவை இந்த பேருந்து தடம் வழியாக அடைய முடியாது. ஆனால் தீரதேசம் சாலையில் செல்லும் பட்டாம்பி-பள்ளிப்புரம் பேருந்து, மேற்கு கொடுமுண்டாவுக்கு பேருந்து வசதியை வழங்குகிறது.
தொடருந்து
தொகுகொடுமுண்டா என்பது முத்துதாலாவில் உள்ள ஒரே தொடருந்து நிலையம் ஆகும், இது ஷோரனூர்-கோழிக்கோடு இருப்புப் பாதையில் கோழிக்கோடு செல்லும் வழியில் உள்ளது. ஒரு சில பயணிகள் வண்டிகள் மட்டுமே இந்த நிலையத்தில் நிற்கின்றன. எனவே கொடுமுண்டாவை அடைய விரும்பத்தக்க வழியாக சாலை வழியே உள்ளது. பெரும்பாலான தொடருந்துகள் நிற்கும் முக்கிய தொடருந்து நிலையமாக பட்டாம்பி உள்ளது.
அருகிலுள்ள நகரங்களும் முக்கியமான புறநகர்ப் பகுதிகளும்
தொகு- பட்டாம்பி
- கருவன்பாடி
- பள்ளிப்புரம்
- திரித்தாலா
- கொப்பம்