வளஞ்சேரி

கேரள நகரம்

வளஞ்சேரி (Valanchery) என்பது இந்தியாவின் கேரளத்தின், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நகராட்சியாக உள்ள நகரம் ஆகும். திரூர், கோட்டக்கல், தானூர் தவிர, திரூர் வட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகளில் இதுவும் ஒன்று. இது கரிப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்கு தென்கிழக்கே சுமார் 40 கிலோமீட்டர்கள் (25 mi) தொலைவிலும், மாவட்ட தலைமையகத்துக்குத் தெற்கே 25 கிலோமீட்டர்கள் (16 mi) தொலைவிலும், மலப்புறம் பெருநகரப் பகுதியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. மலப்புறம் பெருநகர்ப்புறப் பகுதியில் ஒருங்கிணைக்கபட்ட முக்கிய வணிக நகரங்களில் இதுவும் ஒன்றாகும். துவக்க காலத்திலும், இடைக்காலத்திலும் வள்ளுவநாட்டின் பழைய சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த வளஞ்சேரி, கிபி 14 ஆம் நூற்றாண்டின் திருநாவாய் போரைத் தொடர்ந்து கோழிக்கோடு சாமுத்திரிகளின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது, வளஞ்சேரி பழைய மலபார் மாவட்டத்தின் பொன்னானி வட்டத்தில் சேர்க்கப்பட்டது.

வளஞ்சேரி
நகரம்
வளஞ்சேரி நகரத்தின் ஒரு பகுதியின் தோற்றம்
வளஞ்சேரி நகரத்தின் ஒரு பகுதியின் தோற்றம்
வளஞ்சேரி is located in கேரளம்
வளஞ்சேரி
வளஞ்சேரி
கேரளத்தில் அமைவிடம்
வளஞ்சேரி is located in இந்தியா
வளஞ்சேரி
வளஞ்சேரி
வளஞ்சேரி (இந்தியா)
வளஞ்சேரி is located in ஆசியா
வளஞ்சேரி
வளஞ்சேரி
வளஞ்சேரி (ஆசியா)
வளஞ்சேரி is located in புவி
வளஞ்சேரி
வளஞ்சேரி
வளஞ்சேரி (புவி)
ஆள்கூறுகள்: 10°53′0″N 76°4′0″E / 10.88333°N 76.06667°E / 10.88333; 76.06667
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
வட்டம்திரூர்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்வளஞ்சேரி நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்21.90 km2 (8.46 sq mi)
ஏற்றம்
30 m (100 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்40,318
 • அடர்த்தி1,841/km2 (4,770/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
676552
தொலைபேசி குறியீடு0494
வாகனப் பதிவுKL-55, KL −10
அருகில் உள்ள நகரங்கள்
பாலின விகிதம்1047 /
கல்வியறிவு94.6%
சட்டமன்றத் தொகுதிகோட்டக்கல்
மக்களவைத் தொகுதிபொன்னானி
காலநிலைவெப்பமண்டலம் (கோப்பென்)
இணையதளம்valancherymunicipality.lsgkerala.gov.in/en/

வரலாறு

தொகு

ஆரம்ப இடைக்காலம்

தொகு

வளஞ்சேரியானது ஆரம்பகால இடைக்காலத்தில் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு) வள்ளுவநாட்டு மன்னர் வம்சத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது. [2] வள்ளுவநாடு தற்போதைய கேரள மாநிலத்தில் இருந்த ஒரு சமஸ்தானமாகும். இடைக்காலத்தில் இதன் உச்சக்கட்டத்தின் போது தெற்கே பாரதப்புழா ஆற்றிலிருந்து வடக்கே பந்தலூர் மலை வரை பரவியிருந்தது. [2] மேற்கில், பொன்னானியும் அரபிக்கடலும், கிழக்கே அட்டப்பாடி மலைகளும் எல்லைகளாக இருந்தன. [2] பழைய வள்ளுவநாட்டின் தலைநகரம் இன்றைய அங்காடிபுரத்தில் இருந்தது. [2] உள்ளூர் செவிவழிக் கதைகளின் படி, கடைசி சேர மன்னனரான சேரமான் பெருமாள் மக்காவிற்குப் பயணம் மேற்கொண்ட போது, அவரின் ஆளுநர்களில் ஒருவரான வள்ளுவகோனாத்திரிக்கு, தென் மலபாரில் ஒரு பரந்த நிலப்பரப்பைக் கொடுத்து, புனித யாத்திரைக்குப் புறப்பட்டார். [2] வள்ளுவநாடு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாமாங்கம் விழாக்களுக்கும், கோழிக்கோடு சாமூத்திரிக்கு எதிரான முடிவில்லாத போர்களுக்கும் புகழ் பெற்றது. [2]

பின் இடைக்காலம்

தொகு

13/14 ஆம் நூற்றாண்டில் திருநாவாயப் போரில் வள்ளுவகோனாதிரிகளின் தோல்விக்குப் பிறகு இப்பகுதி கோழிக்கோடு சாமூத்திரிகளின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பெரும் போர்களுக்கு இறுதியில், வள்ளுவநாட்டின் இரு இளவரசர்களும் போர்களில் கொல்லப்பட்டனர் கோழிக்கோடு அரசு திருநாவாயாவை ஆக்கிரமித்தது. [3]

காலனித்துவ காலம்

தொகு

பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில், மைசூர் இராச்சியத்தின் படைகள் இப்பகுதியைக் கைப்பற்றின. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரைத் தொடர்ந்து, சிறீரங்கபட்டின உடன்படிக்கையின் மூலம் இப்பகுதி கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியின் கீழ் வந்தது. வளஞ்சேரி என்பது சேரநாட்டில் இருந்த ஒரு முக்கிய பகுதியாகும். சேரநாடு முந்தைய மலபார் மாவட்டத்தில் உள்ள ஏரநாடு மற்றும் பொன்னானி வட்டங்களில் பரவி இருந்தது. [4] சேரநாடு இடைக்காலத்தின் பிற்பகுதியில் கோழிக்கோடு சாமுத்திரிகளின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தது. [4] மட்பாண்டத் தொழிலும் அதை பாரம்பரிய சாதித் தொழிலாக ஏற்றுக்கொண்ட கொல்லர் சமூகமும் வளஞ்சேரியின் அடையாளமாக இருந்தனர். சங்கம்பள்ளி மம்மி குருக்கள் தற்காப்பு கலை மற்றும் நரம்பியல் துறையில் நன்கு அறியப்பட்ட நபராக இருந்தார்.

தேசிய இயக்கம்

தொகு

விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியிக 1932இல் வளஞ்சேரியில் தேசிய அரசியல் கண்ணோட்டத்தின் விதைகள் துளிர்விட சாதகமான சூழல் உருவானது. [5] குருவாயூர் கோயில் சத்தியாகிரகம் மற்றும் கேளப்பனின் உண்ணாவிரதத்தம் முடிந்த பிறகு, பொன்னானி வட்டத்தின் உயர்சாதி இந்துக்களின் கருத்துகளைப் பெற பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. [5] வாக்கெடுப்பின் மைய அலுவலகமாக வாலாஞ்சேரி இருந்தது. [5] இந்த சமயத்தில் தான் கஸ்தூரிபாய் காந்தி, சி. ஆர். தாஸின் சகோதரி ஊர்மிளா தேவி, சதாசிவ ராவ், சி. ராஜகோபாலாச்சாரி, யு. கோபால மேனன் உள்ளிட்ட முக்கிய தேசிய தலைவர்கள் வளஞ்சேரிக்கு வருகை தந்தனர். [5] இக்குழுவில் வி. டி. பத்ததிரிபாடும் குறிப்பிடத்தக்கவர். [5] வாலாஞ்சேரியில் முதல் இந்திய தேசிய காங்கிரசு குழு 1936 [5] இல் உருவாக்கப்பட்டது. இங்கு 1938ல் முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்டது. [5] அரிசி விலை உயர்வின் போது, நாளிதழ்களில் வளஞ்சேரி மட்டை அரிசி ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. [5] மழவாஞ்சேரி தாமோதரன் நம்பூதிரி மற்றும் பலரின் முயற்சியின் பலனாக வளஞ்சேரியில் ஐக்கிய நாணயக் குழுமம் ( ஐக்ய நாணய சங்கம் ) இயங்கியது. [5] போருக்குப் பிறகு, மலபாரில் கே. கேளப்பனின் முயற்சியின் விளைவாக, ஃபிர்கா அடிப்படையில் ஃபிர்கா நுகர்வோர் கூட்டுறவுச் சங்கம் உருவாக்கப்பட்டது. [5] டி. கே. சி.மொய்தீன்குட்டி கலத்தில் அவரது தலைமையில் வாலாஞ்சேரியில் கூட்டுறவு சங்கமும் உருவாக்கப்பட்டது. [5] அதன் தொடர்ச்சிதான் இன்றைய குட்டிப்புரம் கூட்டுறவு வங்கி ஆகும். [5]

விடுதலைக்குப் பின்

தொகு

கோலமங்கலம் புத்தன்களத்தில் 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாலாஞ்சேரி மேல்நிலைப் பள்ளியின் நிறுவன மேலாளராக சி. எம். இராமகுருப் இருந்தார். [5] இன்று, திரூர் கல்வி மாவட்டத்தில் தனியார் துறையின் கீழ் இயங்கும் மிகப்பெரிய பள்ளியாக இது உள்ளது. [5] 1980 ஆம் ஆண்டு சிறப்பு நிலை ஊராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கட்டிப்பருத்தி கிராம ஊராட்சி, 1981 ஆம் ஆண்டு வாலாஞ்சேரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [5] கடந்த தசாப்தங்களில் தென் மலபார் பிராந்தியத்தின் முக்கிய வணிக மற்றும் கல்வி மையங்களில் ஒன்றாக வளஞ்சேரி விளங்கியது. 2015இல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

இப்போது மலப்புரம் மாவட்டத்தில் உள்ள 12 நகராட்சி நகரங்களில் ஒன்றான வளஞ்சேரி, மலப்புரம் பெருநகரப் பகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. [6]

மக்கள்தொகையியல்

தொகு




 

வளஞ்சேரியில் சமயங்கள் (2011)[7]

  பிறர் (0.11%)

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகராட்சி எல்லைக்குட்பட்ட மொத்த மக்கள் தொகை 40,318 ஆகும். இதில் ஆண்களின் விகிதம் 48.1% என்றும், பெண்களின் விகிதம் 51.9% என்றும் உள்ளது. மலையாளம் ஊரில் பரவலாக பேசப்படும் மொழி. வளஞ்சேரி ஆரம்பகால இடைக்காலத்திலிருந்து பல இன மற்றும் பல சமயத்தவர் வாழும் நகரமாக இருந்து வருகிறது. முஸ்லிம்கள் மிகப்பெரிய சமயக் குழுவினராக உள்ளனர். அதைத் தொடர்ந்து இந்துக்கள் உளனர். வளஞ்சேரி நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 94.6% ஆகும், இது மாநில சராசரியான 94% ஐ விட அதிகமாகும்.

குடிமை நிர்வாகம்

தொகு

இந்த நகரம் வளஞ்சேரி நகர மன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த மன்றம் ஒரு தலைவர் தலைமையில் இயங்குகிறது. நிர்வாக நோக்கங்களுக்காக, நகரம் 33 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு நகரமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 1988 அக்டோபர் 18 ஆம் நாள் உருவாக்கபட்ட வளஞ்சேரி காவல் நிலையத்தின் எல்லைக்குள் இந்த நகராட்சி வருகிறது. . வாலாஞ்சேரி நகரத்தைத் தவிர ஆதவநாடு, எடையூர், இரிம்பிளியம், நடுவட்டம் ஆகிய கிராமங்களும் வளஞ்சேரி காவல் நிலைய அதிகார எல்லைக்குள் வருகிறது.

2020 நகராட்சி தேர்தல்

தொகு
வ.எண். கட்சியின் பெயர் கட்சி சின்னம் கவுன்சிலர்களின் எண்ணிக்கை
01 ஐஜமு  </img> 17 [8]
02 சுயேச்சைகள்   12
03 எல்.டி.எஃப்   03
04 பா.ஜ.க   01

காணத்தக்க இடங்கள்

தொகு

குறிப்பிடத்தக்கவர்கள்

தொகு
  • ஆழ்வாஞ்சேரி தம்பிரன்கள்
  • கே. டி. ஜலீல், அரசியல்வாதி
  • ஜகாரியா முகமது, இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர்
  • உண்ணிமேனன், பின்னணி பாடகர்
  • சுவேதா மேனன், நடிகை
  • அனீஷ் ஜி. மேனன், நடிகர்
  • கே. வி. ராமகிருஷ்ணன், கவிஞர்
  • வி. பி. சானு, அரசியல்வாதி
  • அஹ்மத் குட்டி, வட அமெரிக்க இஸ்லாமிய அறிஞர்
  • பைசல் குட்டி, வழக்கறிஞர், சட்டப் பேராசிரியர், பொதுப் பேச்சாளர், பேச்சாளர்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Malappuram census handbook" (PDF). censusindia.gov.in.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "princelystatesofindia.com". Archived from the original on 16 March 2012. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
  3. K. V. Krishna Iyer, Zamorins of Calicut: From the earliest times to AD 1806.
  4. 4.0 4.1 Malabar Manual (Volume-I).
  5. 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 5.12 5.13 5.14 "History | Valanchery Municipality". Valancherymunicipality.lsgkerala.gov.in. 2022-07-07. பார்க்கப்பட்ட நாள் 2022-08-11.
  6. {{cite web}}: Empty citation (help)
  7. "Religion – Kerala, Districts and Sub-districts". Census of India 2011. Office of the Registrar General.
  8. "Valanchery Municipality election 2020". Archived from the original on 2021-03-09. பார்க்கப்பட்ட நாள் 2020-12-11.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வளஞ்சேரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளஞ்சேரி&oldid=4108487" இலிருந்து மீள்விக்கப்பட்டது