திரூர் வட்டம்
திரூர் வட்டம் (Tirur Taluk) என்பது இந்தியாவின் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள திரூர் வருவாய் கோட்டத்தின் கீழ் வரும் ஒரு வட்டமாகும்.[1] இதன் தலைமையகம் திரூர் நகரம் ஆகும். [1] திரூர் வட்டத்தில் தானூர், திரூர், கோட்டக்கல், வளஞ்சேரி ஆகிய நான்கு நகராட்சிகள் உள்ளன. [1] பெரும்பாலான நிர்வாக அலுவலகங்கள் திரூர், குட்டிப்புரம், தானூரில் உள்ள குறு-குடிமை நிலையங்களில் அமைந்துள்ளன. இன்றைய திரூர் வட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் இடைக்கால தானுர் இராச்சியத்தின் ( வெட்டத்துநாடு ) பகுதிகளாக இருந்தன. [2] தானூர் துறைமுகம் இடைக்காலத்தில் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் ஒரு முக்கியமான துறைமுக நகரமாக இருந்தது. [2]
திரூர் வட்டம் | |
---|---|
வட்டம் | |
கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 11°09′09″N 75°57′24″E / 11.152610°N 75.956678°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
Taluk formation | 1 நவம்பர் 1957 |
தோற்றுவித்தவர் | கேரள அரசு |
தலைமையகம் | திரூர் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | KL-55 |
வரலாறு
தொகுதிரூர் வட்டம் 1957 நவம்பர் முதல் நாளன்று பழைய பொன்னானி வட்டத்தில் இருந்து 43 கிராமங்களையும், பழைய ஏறநாடு வட்டத்திலிருந்து 30 கிராமங்களையும் பிரித்து உருவாக்கப்பட்டது.[3] திரூர், தானூர், குட்டிப்புரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் பழைய பொன்னானி வட்டத்திலிருந்தும், திரூரங்காடி மற்றும் வேங்கரா ஊராட்சி ஒன்றியங்கள் பழைய எறநாடு வட்டத்திலிருந்தும் பிரிக்கபட்டு இதில் சேர்க்கப்பட்டன. [3] அந்த நேரத்தில், பேப்பூர் துறைமுகத்திற்கும் பொன்னானி துறைமுகத்திற்கும் இடையில் (கிட்டத்தட்ட 65 கி. மீ. கடற்கரையைக் கொண்டது) கடலோரப் பகுதி முழுவதையும் உள்ளடக்கிய கேரளத்தின் மிகப்பெரிய கடற்கரை வட்டமாக திரூர் வட்டம் இருந்தது. பின்னர் 1969 சூன் 16 அன்று, ஃபெரோக், ராமநாட்டுக்கரா, கடலுண்டி ஆகிய மூன்று கிராமங்கள் திரூர் வட்டத்திலிருந்து கோழிக்கோடு வட்டத்திற்கும், குட்டிப்புரம் ஊராட்சி ஒன்றியத்தலிருந்து பருதூர் கிராமம் ஒற்றப்பாலம் வட்டத்திற்கும் மாற்றப்பட்டது. [4] பின்னர் 1990 களில், திருப்பூர் வட்டத்தில்ல் இருந்து திரூரங்காடி மற்றும் வேங்கரா ஊராட்சி ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு, திருவரங்கடி வட்டமாக உருவாக்கபட்டது. மேலும் கோட்டக்கல் மற்றும் பொன்மலை வருவாய் கிராமங்கள் எறநாடு வட்டத்தில் இருந்து புதிதாக திரூர் வட்டத்தில் சேர்க்கப்பட்டன. [5]
தற்போது, 30 கிராமங்களைக் கொண்ட திரூர் வட்டம், மலப்புரம் மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட வட்டமாக உள்ளது.[5]
சிற்றூர்கள்
தொகுதிரூர் வட்டத்தில் பின்வரும் 30 கிராமங்கள் உள்ளன.[1]
- ஆனந்தவூர்
- ஆதவநாடு
- செரியமுண்டம்
- எடையூர்
- இரிம்பிளியம்
- கல்பகஞ்சேரி
- கட்டிப்பருத்தி
- கோட்டக்கல்
- குரும்பத்தூர்
- குட்டிப்புரம்
- மங்களம்
- மரக்கரா
- மேல்மூரி
- நடுவட்டம்
- நிறமருதூர்
- ஒழூர்
- பரியாபுரம்
- பெருமண்ணா
- பொன்மலா
- பொன்முண்டம்
- புறத்தூர்
- தநலூர்
- தானூர்
- தலக்காடு
- திருநாவாய்
- திரூர்
- திருக்கண்டியூர்
- திரிபிரங்கோடு
- வளவண்ணூர்
- வெட்டம்
திரூர் வட்டத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்கவர்கள்
தொகுதிரூர் பிராந்தியம்
தொகு- அப்துரஹிமான் ரந்ததானி - அரசியல்வாதி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.
- அச்யுத பிஷாரதி - ஒரு சமஸ்கிருத இலக்கண அறிஞர், வானியலாளர் மற்றும் கணிதவியலாளர்.
- விஜயன் - நடிகர்
- ஹேமந்த் மேனன் - நடிகர்
- அடில் இப்ராஹிம் - நடிகர்.
- ஆசாத் மூப்பன் - மருத்துவர்.
- பி. எம். குட்டி - பத்திரிகையாளர்.
- சி. ராதாகிருஷ்ணன் - எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர்.
- தாமோதர நம்பூதிரி - கணிதவியலாளர்.
- திலீப் கே. நாயர் - கல்வியாளர்.
- கோவிந்த பட்டத்திரி - கணிதவியலாளர்.
- கே. வி. இராமகிருஷ்ணன், கவிஞர்.
- கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா - மோகினியாட்டத்தின் மறுமலர்ச்சியாளர்.
- குறுக்கோழி மொய்தீன், அரசியல்வாதி மற்றும் ச.ம.உ.
- குட்டிகிருஷ்ணா மரார் - இலக்கிய விமர்சகர்.
- மலையத் அப்புண்ணி - கவிஞர் மற்றும் குழந்தைகள் எழுத்தாளர்.
- மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி - கணிதவியலாளர் மற்றும் சமசுகிருத கவிஞர்.
- முகமது இர்ஷாத் - கால்பந்து வீரர்.
- முகமது சாலா - கால்பந்து வீரர்.
- என். சம்சுதின் - அரசியல்வாதி மற்றும் ச.ம.உ.
- பி. நந்தகுமார் - அரசியல்வாதி மற்றும் எம்.எல்.ஏ.
- பரமேஸ்வர நம்பூதிரி - கணிதவியலாளர் .
- புலப்ரே பாலகிருஷ்ணன் - பொருளாதார நிபுணர் மற்றும் கல்வியாளர்.
- ரஞ்சித் பதின்ஹத்தேரி - உயிரியல் இயற்பியலாளர்,
- ரவி வள்ளத்தோல் - நடிகர்.
- சல்மான் கல்லியத் - கால்பந்து வீரர்.
- டி. எம். நாயர் - அரசியல் ஆர்வலர்.
- துஞ்சத்து எழுத்தச்சன் - மலையாள மொழியின் தந்தை.
- திரூர் நம்பீசன் - கதகளி பாடகர்.
- வி. அப்துரகிமான் - கேரள அமைச்சர்.
- வைத்தியரத்தினம் திரிபிரங்கோடு மூசாட் - ஆயுர்வேத மருத்துவர்.
- வள்ளத்தோள் நாராயண மேனன் - மலையாளத்தின் முப்பெரும் கவிஞர்களில் ஒருவர் மற்றும் கேரள கலாமண்டலத்தை நிறுவியவர்.
கோட்டக்கல் பிராந்தியம்
தொகு- வைத்தியரத்தினம் பி. எஸ். வாரியர் (கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலை நிறுவனர்)
- கே. சி. மனோரமா தம்புராட்டி (சிறந்த சமஸ்கிருத கவிஞர்)
- கே. சி. மானவேதன் ராஜா (1932-1937 காலக்கட்டத்தில் கோழிக்கோடு சாமுத்திரி மன்னர் உயர்நிலைப் பள்ளியின் நிறுவனர்)
- மு. க. வெல்லோடி (இந்திய அரசு ஊழியர், இராஜதந்திரி, முன்னாள் அமைச்சரவை செயலாளர்)
- டாக்டர். கே.சி.கே. இ ராஜா, முன்னாள் துணைவேந்தர் கேரளப் பல்கலைக்கழகம் மற்றும் சுகாதாரப் பணிகள் இயக்குநர் ஜெனரல்.
- சங்கீதா மாதவன் நாயர், நடிகை
- யு. ஏ. பீரன்
- ஜெயஸ்ரீ கலத்தில், ஆராய்ச்சியாளர்.
- பி. கே. வாரியர்
- கோட்டக்கல் சிவராமன் (சிறந்த கதகளி கலைஞர்)
- வி. சி. பாலகிருஷ்ண பணிக்கர்
- கோட்டக்கல் மது ( கதகளி பாடகி)
- எம்.பி. அப்துஸ்ஸமத் சமதானி (அரசியல்வாதி, ச.ம.உ., முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் )
- சச்சின் வாரியர் (பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளர்)
வளஞ்சேரி பிராந்தியம்
தொகு- ஆழ்வாஞ்சேரி தம்பிரகள் - கேரள நம்பூதிரிகளின் முன்னாள் தலைவர்.
- கே. டி. ஜலீல், அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சரும்.
- ஜகாரியா முகமது, இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர்.
- உண்ணிமேனன், பின்னணி பாடகர்.
- சுவேதா மேனன், நடிகை.
- அனீஷ் ஜி. மேனன், நடிகர்.
- இடச்சேரி கோவிந்தன் நாயர், கவிஞர்.
- கே. வி. இராமகிருஷ்ணன், கவிஞர்.
- இக்பால் குட்டிப்புரம், திரைக்கதை எழுத்தாளர்.
- குட்டிப்புரம் கேசவன் நாயர், கவிஞர்.
- எம். டி. வாசுதேவன் நாயர், கவிஞர்.
- வி. பி. சானு, அரசியல்வாதி.
- அஹ்மத் குட்டி, வட அமெரிக்க இஸ்லாமிய அறிஞர்.
- பைசல் குட்டி, வழக்கறிஞர், சட்டப் பேராசிரியர், பொதுப் பேச்சாளர், பேச்சாளர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Villages, Taluks, and Revenues divisions that make up Malappuram district".
- ↑ 2.0 2.1 Malabar Manual (Volume-I).
- ↑ 3.0 3.1 Devassy, M. K. (1965). District Census Handbook (2) - Kozhikode (1961) (PDF). Ernakulam: Government of Kerala.
- ↑ K. Narayanan (1972). District Census Handbook - Malappuram (Part-C) - 1971 (PDF). Thiruvananthapuram: Directorate of Census Operations, Kerala.
- ↑ 5.0 5.1 Directorate of Census Operations, Kerala. District Census Handbook, Malappuram (PDF). Thiruvananthapuram: Directorate of Census Operations, Kerala.