கொல்கத்தாவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
கொல்கத்தாவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் (Environmental issues in Kolkata) பல உள்ளன. இந்நகரத்தின் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதன் உயிர் இயற்பியல் சூழலையும் மனித ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கின்றன. கொல்கத்தாவில் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, குப்பைகள் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவை அதிகமாக உள்ளன. வரலாற்று ரீதியாக கல்கத்தா என்று அழைக்கப்பட்டு வந்த கொல்கத்தா இந்திய நாட்டின் மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகரம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். .
அறிமுகம்
தொகுஅறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட தரவுகளின்படி, கொல்கத்தாவில் வளிமண்டல இடைநிறுத்தப்பட்ட நுண்துகள்கள் அளவு 511 ஆக இருந்தது. இந்த அளவு கொல்கத்தாவை இந்தியாவிலேயே மிகவும் மாசுபட்ட பெருநகரமாக மாற்றியது. இவ்வகைப்பாட்டில் முறையே மும்பை, தில்லி மற்றும் சென்னை போன்றவை கொல்கத்தாவை அடுத்துள்ள பிற முக்கிய நகரங்களாகும்.[1] 2007 ஆம் ஆண்டில் நிறைவடைந்த 6 வருட நீண்ட ஆய்வில், கொல்கத்தாவில் வசிப்பவர்களில் 70% பேர் காற்று மாசுபாட்டினால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய், மூச்சுத்திணறல் மற்றும் ஆத்துமா போன்ற சுவாச நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனம் (CNCI) கண்டறிந்துள்ளது. இந்நிறுவன ஆய்வின்படி, கொல்கத்தாவில் 100,000 பேருக்கு 18.4 நுரையீரல் புற்றுநோய்கள் பதிவாகியுள்ளன.[2]
2010 ஆம் ஆண்டு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, காற்று மாசுபாட்டின் போது மோசமாகப் பாதிக்கப்பட்ட இந்திய நகரங்களில் தில்லியுடன் கொல்கத்தாவும் உள்ளன. 2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவில் கொல்கத்தா, தில்லி மற்றும் மும்பையில் இருந்து அதிக நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் தயாரித்த அறிக்கையின்படி, 2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பதிவான புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையில், 12% நோயாளிகள் நுரையீரல் புற்றுநோயால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்களாக இருந்தனர்.[3] தி டெலிகிராப் என்ற ஆங்கிலமொழி செய்தித்தாள் வெளியிட்ட ஒரு கட்டுரையில் கொல்கத்தா "இந்தியாவின் நுரையீரல் புற்றுநோய் தலைநகரம்" என்று செல்லப்பெயர் கொடுக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் காற்று மாசுபாட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நகரங்களின் தரவரிசையில், மொத்தமுள்ள 1100 நகரங்களில் கொல்கத்தா 25 ஆவது இடத்தில் உள்ளது.[4]
பொதுப் போக்குவரத்துடன் ஒப்பிடுகையில், கொல்கத்தாவின் சிற்றுந்து உரிமையாளர்கள் ஒப்பீட்டளவில் குறைந்த விகிதங்களில் இருந்தபோதிலும், கொல்கத்தாவில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது. நிறுத்துமிடத் தேவை மேலாண்மை மற்றும் மேம்படுத்தப்பட்ட வாகனத் திறன் தரநிலைகள் போன்ற பணத்தைச் சேமிக்கும் நடவடிக்கைகள் மூலம் கொல்கத்தாவின் ஆற்றல் வெளியேற்றத்தைக் குறைக்க முடியும்.[5]
நீர் மாசுபாடு
தொகுநுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட 2003 ஆம் ஆண்டின் அறிக்கை, கொல்கத்தாவில் உள்ள குடிநீரின் பெரும்பகுதி மனிதக் கழிவுகளால் மாசுபட்டுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த அறிக்கையின்படி, குடியிருப்பு கட்டிடங்களுக்கு தண்ணீர் வழங்கும் 87% நீர்த்தேக்கங்கள் மனித கழிவுகளால் மாசுபட்டுள்ளன.[6] 63% குழாய்களில் மலத்தின் குறிப்பிடத்தக்க தடயங்கள் இருந்தன, மேலும் பல்வேறு நகர மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகளில் 20% அசுத்தமாக இருப்பது கண்டறியப்பட்டது. கொல்கத்தா நகராட்சி ஆணையத்தால் இயக்கப்படும் ஆழ்துளை கிணறுகள் மற்றும் கை பம்புகளில் தோராயமாக ஐந்தில் ஒரு பங்கு மனிதக் கழிவுகளால் மாசுபட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கசிவு சாக்கடை அமைப்பு மற்றும் நீர் அழுத்த அசாதாரணங்கள் தற்போதைய நீர் மாசுபாட்டிற்கு காரணம் என அனைத்திந்திய சுகாதாரம் மற்றும் பொது சுகாதார நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் குற்றம் சாட்டினார்.[6]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dasgupta, Abhijit (7 January 2009). "Most-polluted Kolkata kills 2.5 times more than Delhi; Vadodara safest". இந்தியா டுடே. http://indiatoday.intoday.in/story/Most-polluted+Kolkata+kills+2.5+times+more+than+Delhi;+Vadodara+safest/1/24641.html.
- ↑ Bhaumik, Subir (3 May 2007). "Air pollution suffocates Calcutta". BBC News Online. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6614561.stm.
- ↑ Mohan, Vishwa (19 October 2013). "Delhi, Kolkata have worst air quality in India: Report". Times of India. https://timesofindia.indiatimes.com/home/environment/pollution/Delhi-Kolkata-have-worst-air-quality-in-India-Report/articleshow/24361304.cms. பார்த்த நாள்: 15 October 2018.
- ↑ Basu, Jayanta (21 October 2013). "Choke on fumes, chafe at neglect". The Telegraph. https://www.telegraphindia.com/states/west-bengal/choke-on-fumes-chafe-at-neglect-pollution-posers-answered/cid/1284563#.VBuFhmOVptc. பார்த்த நாள்: 15 October 2018.
- ↑ Colenbrander, Sarah; Gouldson, Andy; Roy, Joyashree; Kerr, Niall; Sarkar, Sayantan; Hall, Stephen; Sudmant, Andrew; Ghatak, Amrita et al. (1 December 2016). "Can low-carbon urban development be pro-poor? The case of Kolkata, India" (in en). Environment and Urbanization 29 (1): 139–158. doi:10.1177/0956247816677775. பன்னாட்டுத் தர தொடர் எண்:0956-2478. http://eprints.whiterose.ac.uk/105982/8/0956247816677775.pdf.
- ↑ 6.0 6.1 Bhaumik, Subir (29 August 2003). "Warning over Calcutta water quality". BBC News Online. http://news.bbc.co.uk/2/hi/south_asia/3192957.stm.