கோபால்ட்(II) ஐதராக்சைடு
கோபால்ட்(II) ஐதராக்சைடு (Cobalt(II) hydroxide) என்பது Co(OH)2.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதை கோபால்ட்டசு ஐதராக்சைடு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். ரோசா சிவப்பு நிறத் தூளாக இது காணப்படுகிறது. α-Co(OH)2, என்ற வாய்ப்பாட்டுடன் கூடிய நீல நிற நிலைப்புத்தன்மையற்ற வடிவமும் அறியப்படுகிறது [3]. மிளிரிகள், மைகள், சாயங்களில் உலர்த்தும் முகவராக கோபால்ட்(II) ஐதராக்சைடு பயன்படுத்தப்படுகிறது. பிற கோபால்ட் சேர்மங்கள் தயாரித்தலிலும், மின்கல அடுக்கு மின்முனைகளை பேரளவில் தயாரிக்கும்போது ஒரு வினையூக்கியாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
கோபால்ட்(II) ஐதராக்சைடு
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்(II) ஐதராக்சைடு
| |
வேறு பெயர்கள்
கோபால்ட்டசு ஐதராக்சைடு, கோபால்ட் ஐதராக்சைடு, β-கோபால்ட்(II) ஐதராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
21041-93-0 | |
ChemSpider | 8305419 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10129900 |
| |
பண்புகள் | |
Co(OH)2 | |
வாய்ப்பாட்டு எடை | 92.948 கி/மோல் |
தோற்றம் | ரோசா சிவப்பு தூள் அல்லது நீலப் பச்சை தூள் |
அடர்த்தி | 3.597 கி/செ.மீ3 |
உருகுநிலை | 168 °C (334 °F; 441 K) (சிதைவடையும்)[1] |
3.20 மி.கி/லி | |
கரைதிறன் பெருக்கம் (Ksp)
|
1.0×10-15 |
கரைதிறன் | அமிலங்களில், அமோனியாவில் கரையும்; நீர்த்த காரங்களில் கரையாது. |
கட்டமைப்பு | |
ஒருங்கிணைவு வடிவியல் |
சாய்சதுரம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-539.7 கியூ•மோல்−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
79.0 யூல்•மோல்−1•K−1[1] |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Oxford University |
ஈயூ வகைப்பாடு | Xn |
R-சொற்றொடர்கள் | R20 R21 R22 R36 R37 R38 R43 |
S-சொற்றொடர்கள் | S24 S26 S36 S37 S39[2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | கோபால்ட்(II) குளோரைடு கோபால்ட்(II) புரோமைடு கோபால்ட்(II) அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இரும்பு(II) ஐதராக்சைடு நிக்கல்(II) ஐதராக்சைடு தாமிர(II) ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயரிப்பும் வினைகளும்
தொகுகார உலோக ஐதராக்சைடுடன் நீரிய Co2+ உப்புக் கரைசலைச் சேர்க்கும்போது கோபால்ட்(II) ஐதராக்சைடு திண்மமாக வீழ்படிவாகிறது :[4]
- Co2+ + 2 NaOH → Co(OH)2 + 2 Na+.
கோபால்ட்(II) ஐதராக்சைடு 168 ° செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தில் சூடுபடுத்தும்போது கோபால்ட்(II) ஆக்சைடாக சிதைவடைகிறது. காற்றில் ஆக்சிசனேற்றமும் அடைகிறது. 300 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சிதைவடையும்போது Co3O4 உருவாகிறது [5][6]. இரும்பு(II) ஐதராக்சைடு போலவே கோபால்ட்(II) ஐதராக்சைடும் ஓர் அடிப்படை ஐதராக்சைடாகும். இது அமில நீரிய கரைசல்களில் [Co(H2O)6]2+ என்ற அணைவுச் சேர்மமாக உருவாகிறது. வலிமையான காரங்களில் கூடுதல் ஐதராக்சைடு அயனிகளைக் ஏற்றுக் கொண்டு [Co(OH)4]2− மற்றும் [Co(OH)6]4−போன்ற அடர் நீல கோபால்டேட்டு(II) அணைவுகளாக உருவாகிறது.
கட்டமைப்பு
தொகுபுருசைட்டு படிகக் கட்டமைப்பில் கோபால்ட்(II) ஐதராக்சைடு படிகமாகிறது. இதன்படி, எதிர்மின் அயனிகளும், நேர்மின் அயனிகளும் காட்மியம் அயோடைடில் உள்ளது போல பொதிந்துள்ளன. அதில் காட்மியம் எண்முக மூலக்கூற்று வடிவியலை ஏற்றுள்ளது [7]. முன்னதாகக் கூறப்பட்ட α-Co(OH)2 சேர்மம் β-Co(OH)2 சேர்மத்துடன் கிட்டத்தட்ட நெருங்கிய தொடர்பைக் கொண்டது ஆகும். ஆனால் இது ஐதரோடால்சைடு கட்டமைப்பை ஏற்கிறது. இக்கட்டமைப்பின்படி எதிர்மின் அயனிகள் உள்ளடுக்குகளில் காணப்படுகின்றன. எனவே இதை ஒரு பல்லுறுத் தோற்றமாக கருதமுடியாது. β-Co(OH)2 சேர்மத்திற்கு α-Co(OH)2 சேர்மம் ஒரு முன்னோடிச் சேர்மம் எனலாம் [8]
.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, FL: CRC Press. p. 513. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
- ↑ "Safety (MSDS) data for cobalt (II) hydroxide". Oxford University. Archived from the original on 2009-03-09. பார்க்கப்பட்ட நாள் 2009-03-27.
- ↑ Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, FL: CRC Press. p. 454. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
- ↑ O. Glemser "Cobalt(II) Hydroxide" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 1521.
- ↑ Jayashree, R. S.; Kamath, P. Vishnu (1999). "Electrochemical synthesis of a-cobalt hydroxide". Journal of Materials Chemistry 9 (4): 961–963. doi:10.1039/A807000H.
- ↑ Xu, Z. P.; Zeng, H. C. (1998). "Thermal evolution of cobalt hydroxides: a comparative study of their various structural phases". Journal of Materials Chemistry 8 (11): 2499–2506. doi:10.1039/A804767G.
- ↑ Wiberg, Nils; Wiberg, Egon; Holleman, A. F. (2001). Inorganic Chemistry. Academic Press. pp. 1478–1479. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5. பார்க்கப்பட்ட நாள் 2009-03-27.
- ↑ Liu, Zhaoping; Ma, Renzhi; Osada, Minoru; Takada, Kazunori; Sasaki, Takayoshi (2005). "Selective and Controlled Synthesis of α- and β-Cobalt Hydroxides in Highly Developed Hexagonal Platelets". Journal of the American Chemical Society 127: 13869–13874. doi:10.1021/ja0523338.
- ↑ Ni, Bing; Liu, Huiling; Wang, Peng-Peng; He, Jie; Wang, Xun (2015). "General synthesis of inorganic single-walled nanotubes". Nature Communications 6: 8756. doi:10.1038/ncomms9756. பப்மெட்:26510862.