கோபால்ட்(II) புரோமைடு
கோபால்ட்(II) புரோமைடு (Cobalt(II) bromide) என்பது CoBr2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடன் கூடிய ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிவப்புநிறத்தில் திண்மமாக காணப்படும் இச்சேர்மம் தண்ணீரில் கரைகிறது. சில செயல்முறைகளில் இது வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
7789-43-7 | |
ChemSpider | 23012 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24610 |
வே.ந.வி.ப எண் | GF9595000 |
| |
பண்புகள் | |
CoBr2, CoBr2.6H2O, CoBr2.2H2O | |
வாய்ப்பாட்டு எடை | 218.7412 கி/மோல் (நீரிலி) 326.74 கி/மோல் (அறுவைதரேட்டு) |
தோற்றம் | பிரகாசமான பச்சை படிகங்கள் (நீரிலி) செம்பழுப்பு படிகங்கள் (அறுவைதரேட்டு) |
அடர்த்தி | 4.909 கி/செ.மீ3 (நீரிலி) 2.46 கி/செ.மீ3 (அறுவைதரேட்டு) |
உருகுநிலை | 678 °C (1,252 °F; 951 K) (நீரிலி) 47 °செ (அறுவைதரேட்டு) |
நீரிலி: 66.7 கி/100மி.லி (59 °செ) 68.1 கி/100மி.லி (97 °செ) அறுவைதரேட்டு: 113.2 கி/100மி.லி(20 °செ) | |
கரைதிறன் | 77.1 கி/100 மி.லி (எத்தனால், 20 °செ) 58.6 கி/100 மி.லி (மெத்தனால், 30 °செ) மெத்தில் அசிட்டேட்டு, ஈதர், ஆல்ககால், அசிட்டோன்ஆகியன்வற்றில் கரையும் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம், hP3, SpaceGroup = P-3m1, No. 164 |
ஒருங்கிணைவு வடிவியல் |
எண்முகம் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Fisher Scientific |
R-சொற்றொடர்கள் | R36, R37, R38 |
S-சொற்றொடர்கள் | S26, S37, S39, S45, S28A |
தீப்பற்றும் வெப்பநிலை | சுடர் விடாது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
406 mg/kg (oral, rat) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | கோபால்ட்(II)புளோரைடு கோபால்ட்(II) குளோரைடு கோபால்ட்(II)ஐயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இரும்பு(II)புரோமைடு நிக்கல்(II)புரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பண்புகள்
தொகுநீரற்ற கோபால்ட்(II) புரோமைடு பச்சைநிற படிகங்களாகக் காணப்படுகிறது. 100 பாகை செல்சியசு வெப்ப நிலையில் கோபால்ட்(II) புரோமைடின் அறுநீரிலியானது நான்கு நீர்ப்படிக மூலக்கூறுகளை இழந்து கோபால்ட் இருஐதரேட்டாக உருவாகிறது.
- CoBr2.6H2O → CoBr2.2H2O + 4 H2O
மேலும் 130 பாகை செல்சியசு வெப்பநிலை வரை சூடாக்கும்போது நீரற்ற கோபால்ட்(II) புரோமைடு உற்பத்தியாகிறது.
- CoBr2.2H2O → CoBr2 + 2 H2O
நீரற்ற கோபால்ட்(II) புரோமைடு 678 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகுகிறது. உயர் வெப்பநிலைகளில் இச்சேர்மம் ஆக்சிசனுடன் வினை புரிந்து கோபால்ட்(II, III) ஆக்சைடு மற்றும் புரோமின் ஆவியாக உருவாகிறது[1][2].
தயாரிப்பு
தொகுகோபால்ட் ஐதராக்சைடுடன் ஐதரோபுரோமிக் அமிலத்தைச் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் நீரேறிய கோபால்ட்(II) புரோமைடைத் தயாரிக்க முடியும்.
- Co(OH)2(s) + 2HBr(aq) → CoBr2.6H2O(aq)
தனிம கோபால்ட்டுடன் திரவ புரோமினை நேரடியாக வினைபுரியச் செய்து நீரற்ற கோபால்ட்(II) புரோமைடைத் தயாரிக்க முடியும்[3][4][5].
வினைகள் மற்றும் பயன்கள்
தொகுநீர்த்த அமோனியாவில் கோபால்ட்(II) புரோமைடின் கரைசலைச் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் மரபார்ந்த ஒருங்கிணைப்புச் சேர்மம் புரோமோபென்டமின் கோபால்ட்(III) புரோமைடு தயாரிக்க முடிகிறது[6].
- 2 CoBr2 + 8 NH3 + 2 NH4Br + H2O2 → 2 [Co(NH3)5Br]Br2 + 2 H2O
கோபால்ட்(II) புரோமைடின் முப்பீனைல்பொசுபீன் அணைவுச்சேர்மங்கள் கரிமத்தொகுப்பு வினைகளில் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகின்றன,
முன்பாதுகாப்பு
தொகுகோபால்ட்(II) சேர்மங்களுடன் அதிக நேரம் இருக்க நேர்ந்தால் கோபால்ட் நச்சால் பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் உண்டு. புரோமைடுகளும் கூட சிறிதளவு நச்சுத்தன்மை கொண்டவை என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்[7] Bromide is also mildly toxic.
மேற்கோள்கள்
தொகு- ↑ Cobalt Bromide Supplier & Tech Info American Elements
- ↑ WebElements Periodic Table of the Elements
- ↑ WebElements Periodic Table of the Elements | Cobalt | Essential information
- ↑ "Chemical Properties and Reaction Tendencies". Archived from the original on 2008-02-19. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
- ↑ "Pilgaard Solutions: Cobalt". Archived from the original on 2009-01-22. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
- ↑ Diehl, Harvey; Clark, Helen; Willard, H. H.; Bailar, John C. (1939). "Bromopentamminocobalti Bromide". Inorganic Syntheses. Inorganic Syntheses. Vol. 1. p. 186. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132326.ch66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-13232-6.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-06-25. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.