கோபால்ட்(II) அயோடைடு

கோபால்ட்(II) அயோடைடு அல்லது கோபால்டசயோடைடு (Cobalt(II) iodide or cobaltous iodide ) என்பது CoI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். CoI2 சேர்மத்தின் இரண்டு அமைப்பிலான வடிவங்கள் மற்றும் அறுநீரேற்று வடிவம், CoI2(H2O)6 ஆகியன கோபால்ட்டின் முக்கியமான அயோடைடுகளாகும்[3].

கோபால்ட்(II) அயோடைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்(II) அயோடைடு
வேறு பெயர்கள்
கோபால்டசயோடைடு, கோபால்ட் ஈரயோடைடு
இனங்காட்டிகள்
(அறுநீரேற்று: 52595-03-6) 15238-00-3 (அறுநீரேற்று: 52595-03-6) N
பப்கெம் 419951
பண்புகள்
CoI2
வாய்ப்பாட்டு எடை 312.7421 கி/மோல் (நீரிலி)
420.83 கி/மோல் (அறுநீரேற்று)
தோற்றம் α-வடிவம்: கருப்பு அறுகோணப் படிகங்கள்
β-வடிவம்: மஞ்சள்நிறத் துகள்
அடர்த்தி α-வடிவம்: 5.584 கி/செ.மீ3
β-வடிவம்: 5.45 கி/செ.மீ3
அறுநீரேற்று: 2.79 கி/செ.மீ3
உருகுநிலை α-வடிவம்: 515-520 °செ (வெற்றிடத்தில்)
β-வடிவம்: 400 °செல்சியசில் α- வடிவமாக மாறுகிறது.
கொதிநிலை 570 °C (1,058 °F; 843 K)
67.0 கி/100 மி.லி[1]
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு தீங்கு (Xn)
R-சொற்றொடர்கள் R20/21/22, R36/37/38
S-சொற்றொடர்கள் S26, S36[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் கோபால்ட்(II) புளோரைடு
கோபால்ட்(II) குளோரைடு
கோபால்ட்(II) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் நிக்கல்(II) அயோடைடு
தாமிரம்(I) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு மற்றும் அமைப்பு

தொகு

கோபால்ட் தூளுடன் வாயுநிலை ஐதரசன் அயோடைடு சேர்த்து சூடுபடுத்துவதால் கோபால்ட்(II) அயோடைடு தயாரிக்கப்படுகிறது. கோபால்ட்(II) ஆக்சைடுடன் அல்லது தொடர்புடைய கோபால்ட் சேர்மங்களுடன் ஐதரயோடிக் அமிலத்தைச்[3] சேர்த்து வினைப்படுத்துவதால் நீரேற்று வடிவ கோபால்ட்(II) அயோடைடு தயாரிக்கப்படுகிறது.

α- மற்றும் β- அமைப்புகள் என்ற இரண்டு பல்லுருவ அமைப்புகளில் கோபால்ட்(II) அயோடைடு படிகமாகிறது.α பல்லுருவ அமைப்பில் உள்ள கோபால்ட்(II) அயோடைடின் கருப்புநிற அறுகோணப் படிகங்கள் காற்றில் படநேர்ந்தால் அடர்பச்சை நிறத்திற்கு மாறுகிறது. α-CoI2 சேர்மத்தை வெற்றிடத்தில் 500 ° செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்துவதால் பதங்கமாதல் நிகழ்ந்து β-பல்லுருவ அமைப்பு கோபால்ட்(II) அயோடை சேர்மம் மஞ்சள் நிறத்தில் உருவாகிறது. இச்சேர்மமும் காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி பச்சை நிறத்திற்கு மாறுகிறது. β-பல்லுருவ அமைப்பை 400 ° செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்துவதால் α-CoI2 உருவாகிறது[3]

அறுநீரேற்று வடிவ கோபால்ட் (II) அயோடைடானது [Co(H2O)6]2+ மற்றும் அயோடைடு அயனி என்ற தனித்தனி கூறுகளாக காணப்படுவதை படிகவுருவியல் முடிவுகள் தெரிவிக்கின்றன[4][5].

வினைகள் மற்றும் பயன்கள்

தொகு

பல்வேறு கரைப்பான்களில் உள்ள நீரைக் கண்டறியும் சோதனையில் நீரிலி வடிவ கோபால்ட் (II) அயோடைடு சிலசமயங்களில் பயன்படுத்தப்படுகிறது[6]. கார்பனைலேற்றம் போன்ற வினைகளில் கோபால்ட் (II) அயோடைடு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வினையில் இருகீட்டீனுடன் கிரிக்னார்டு கரணி வினைபுரியும் போது இது வினையூக்கியாகச் செயல்பட்டு தெர்பினாய்டுகளை உருவாக்குகிறது[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Perry, Dale L.; Phillips, Sidney L. (1995), Handbook of Inorganic Compounds, San Diego: CRC Press, pp. 127–8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-8671-3, பார்க்கப்பட்ட நாள் 2008-06-03
  2. "429740 Cobalt(II) iodide anhydrous, beads, −10 mesh, 99.999%". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 2008-06-03.
  3. 3.0 3.1 3.2 O. Glemser "Cobalt, Nickel" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 1518.
  4. “Structure Cristalline et Expansion Thermique de L’Iodure de Nickel Hexahydrate“ (Crystal structure and thermal expansion of nickel(II) iodide hexahydrate) Louër, Michele; Grandjean, Daniel; Weigel, Dominique Journal of Solid State Chemistry (1973), 7(2), 222-8. எஆசு:10.1016/0022-4596(73)90157-6 10.1016/0022-4596(73)90157-6
  5. "The crystal structure of the crystalline hydrates of transition metal salts. The structure of CoI2·6H2O" Shchukarev, S. A.; Stroganov, E. V.; Andreev, S. N.; Purvinskii, O. F. Zhurnal Strukturnoi Khimii 1963, vol. 4, pp. 63-6.
  6. Armarego, Wilfred L. F.; Chai, Christina L. L. (2003), Purification of Laboratory Chemicals, Butterworth-Heinemann, p. 26, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-7571-3, பார்க்கப்பட்ட நாள் 2008-06-03
  7. Agreda, V. H.; Zoeller, Joseph R. (1992), Acetic Acid and Its Derivatives, CRC Press, p. 74, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8247-8792-7, பார்க்கப்பட்ட நாள் 2008-06-03
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்ட்(II)_அயோடைடு&oldid=3946346" இலிருந்து மீள்விக்கப்பட்டது