கௌரி கான்
கௌரி காளி கான் (Gauri Kali Khan) (பிறப்பு 8 அக்டோபர் 1970), ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் உட்புற வடிவமைப்பாளர். இவர் முகேஷ் அம்பானி, பாலிவுட் பிரபலங்கள் கரண் ஜோஹர் [1] , ஜாக்குலின் பெர்னாண்டஸ் [2] மற்றும் சிதார்த் மல்ஹோத்ரா[3] போன்றவர்களுக்கு உட்புற வடிவமைப்பு செய்து கொடுத்துள்ளார் . ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மென்ட் என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனர் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் இணை-நிறுவனர் மற்றும் இணைத் தலைவராக செயல்படுகிறார். 2018 ஆம் ஆண்டில், ஃபார்ச்சூன் இதழின் "உலகின் 50 சக்தி வாய்ந்த பெண்கள்" என்ற பட்டியலில் கௌரியின் பெயர் இடம் பெற்றது.[4]
கௌரி கான் | |
---|---|
2016இல் ஒரு விழாவில் | |
பிறப்பு | கௌரி சிப்பர் 8 அக்டோபர் 1970 புது தில்லி, தில்லி, இந்தியா |
இருப்பிடம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | லேடி ஸ்ரீராம் மகளீர் கல்லூரி |
பணி | திரைப்படத் தயாரிப்பாளர், உட்புற வடிவமைப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1992–தற்பொழுதுவரை |
வாழ்க்கைத் துணை | சாருக் கான் (தி. 1991) |
பிள்ளைகள் | 3 |
ஆரம்ப வாழ்க்கை
தொகுகௌரி தில்லியில், பஞ்சாபி இந்து மத பிராமணப் பெற்றோர்களான சவிதா மற்றும் கர்னல் ரமேஷ் சந்திர சிப்பர் அகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[5] லொரேட்டோ கான்வெண்ட் பள்ளியில் தனது பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார். தில்லி மாடர்ன் ஸ்கூலில் இருந்து பன்னிரண்டாவது நிறைவு பெற்றார்; லேடி ஸ்ரீ ராம் மகளீர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார் . அவர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜியில் 6 மாத கால ஆடை வடிவமைப்பு படிப்பை முடித்து [1], தனது தந்தையின் ஆடை வியாபாரத்தால் தையல் கற்றுக்கொண்டார்.[6]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசாருக் கானை 1984 ஆம் ஆண்டில் தில்லி நகரில் கௌரி முதல் முறையாக சந்தித்தார். அப்பொழுது சாருக் கான் பாலிவுட்டில் நடிக்கத் துவங்கவில்லை.[7] ஆறு வருட காலம் காதலித்த பின்பு இவர்கள் 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.[8]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "I don't want to make my business mass: Gauri Khan" (in ஆங்கிலம்).
- ↑ "Gauri Khan revamps Jacqueline Fernandez's apartment, shares pics on Instagram" (in ஆங்கிலம்).
- ↑ "Gauri Khan designs Sidharth Malhotra's new home, Shah Rukh says they stole his hammock" (in ஆங்கிலம்).
- ↑ "Shah Rukh Khan calls wife Gauri their family's 'fortunate, most powerful' as she features on power list" (in ஆங்கிலம்).
- ↑ "Gauri Khan Biography". Movies Dosthana. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-03-07.
- ↑ "Gauri Khan". http://www.planetsrk.com/community/threads/gauri-khan.1863/. பார்த்த நாள்: 2016-12-08.
- ↑ "Famous inter-religious marriages". Archived from the original on 3 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ "B'day Special: Shah Rukh Khan (p. 16)" இம் மூலத்தில் இருந்து 9 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141109191757/http://photogallery.indiatimes.com/celebs/bollywood/shah-rukh-khan/bday-special-shah-rukh-khan/articleshow/25059326.cms. பார்த்த நாள்: 3 September 2014.