சக்ரசிலா வனவிலங்கு சரணாலயம்

சக்ரசிலா வனவிலங்கு சரணாலயம் (सक्रसिला) (Assamese) என்பது இந்தியாவின் அசாமின் துப்ரி மற்றும் கோக்ராஜர் மாவட்டங்களின் கீழ் அமைந்த வனவிலங்கு சரணாலயமாகும்.[1] [2] இது தங்க மந்திக்கு பிரபலமானது. இந்தியாவில் தங்க மந்திக்கான இரண்டாவது பாதுகாக்கப்பட்ட வாழ்விடமாகும்.[3]

Chakrashila Wildlife Sanctuary

வரலாறு

தொகு

சக்ரசிலா மலை முதன்முதலில் 1966ஆம் ஆண்டில் பாதுகாப்பு வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1994ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் நாளன்று அசாம் மாநில அரசாங்கத்தால் சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டது.[4] இப்பகுதி இச்சிறப்பு பெற இப்பகுதியினைச் சார்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் குழு, நேச்சர்ஸ் பெக்கன் முக்கிய பங்கு வகித்தது.[5]

அமைவிடம்

தொகு
 
நேச்சரின் பெக்கனால் தங்க லாங்கூருக்கான பாதுகாப்பு முன்னெடுப்பு

இந்த சரணாலயம் 45.568 (4556.8 ஹெக்டேர்) சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது கோக்ராஜர் நகரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், துப்ரி நகரத்திலிருந்து 68 கி.மீ. தொலைவிலும், குவகாத்தி லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 219 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் முக்கியமாக வடக்கு-தெற்கு நோக்கிய மலைகளுடன் இருபுறமும் இரண்டு ஏரிகள் (தீர் பீல் மற்றும் டிப்லாய் பீல்) சூழ அமைந்துள்ளது. இவை இச்சரணாலயத்துடன் ஒருங்கிணைந்த பரப்பாக அமைந்துள்ளது. மலையின் கீழ்ப்பகுதிகள் சால் காப்பிஸ் மீளுருவாக்கம், இடை மற்றும் மேல் பகுதிகளில் இலையுதிர் காடுகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த சரணாலயத்தில் கோக்ராஜர், சோரைகோலாவில் சுற்றுலா விடுதி வசதிகள் உள்ளன. மேலும் பறவைகள் கண்காணிப்பு, மலையேற்றம், வனவிலங்கு மற்றும் இயற்கையினைப் புகைப்படம் எடுப்பதற்கான வசதிகளும் உள்ளன.  [ மேற்கோள் தேவை ]

சரணாலயத்தில் விலங்குகள்

தொகு

இந்த சரணாலயத்தில் பல்வேறு வகையான பாலூட்டிகள், பறவைகள், மற்றும் பாம்புகள், பல்லிகள் மற்றும் ஆமைகள் உட்பட இருபத்தி மூன்று வகையான ஊர்வன, நாற்பதுக்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் காணப்படுகின்றன.[6] இந்த சரணாலயத்தில் காணப்படும் பாலூட்டிகளாக இந்திய குறுகிய வால் மோல், இந்திய பறக்கும் நரி எனப்படும் பழந்திண்ணி வெளவால், குறுகிய மூக்கு பழ வெளவால், இந்தியப் வாம்பயர் வெளவால், இந்திய மழுங்கு மூக்கு வெளவால், செம்முகக் குரங்கு, சீன எறும்புத்தின்னி, பொன்னிறக் குள்ளநரி மற்றும் வங்காள நரி .இருவாட்சியும் இங்கே காணப்படுகின்றன. இச்சரணாலயம் பல்வேறு ஆபத்தான விலங்குகளுக்கான புகலிடமாக உள்ளது.

பறவைகள்

தொகு

சக்ராசிலா வனவிலங்கு சரணாலயத்தில் மொத்தம் 119 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் உலகளவில் அச்சுறுத்தப்பட்ட மூன்று இனங்கள் அடங்கும்.[7] இங்கே பதிவுசெய்யப்பட்ட சில இனங்கள் கருப்பு பிராங்கோலின் (ஃபிராங்கோலினஸ் பிராங்கோலினஸ் ), புதர்க்காடை (பெர்டிகுலா ஆசியட்டிகா), குறைவான விசில் வாத்து, செங்குருகு, இந்தியக் குளத்துக் கொக்கு, உண்ணிக் கொக்கு, ஊதா ஹெரான், செந்தலை வல்லூறு, சிவப்பு தலை கழுகு, புள்ளி கழுகு, மற்றும் தாமிர இறக்கை இலைக்கோழி .

 
கருப்பு பிராங்கோலின்
 
சிறிய சீழ்க்கைச்சிரவி
 
செந்தலை வல்லூறு

மேற்கோள்கள்

தொகு
  1. Department of Tourism, Govt. of Assam
  2. "Chakrashila Wildlife Sanctuary". Mapsofindia.com. 2011-05-10. Archived from the original on 1 November 2012. பார்க்கப்பட்ட நாள் 2013-01-01.
  3. "Word document". Archived from the original on 2012-02-26. பார்க்கப்பட்ட நாள் 2013-01-01.
  4. "bodoland.net - de beste bron van informatie over bodoland. Deze website is te koop!". Boro.bodoland.net. பார்க்கப்பட்ட நாள் 2013-01-01.
  5. "Conservation drive by Nature's Beckon". Archived from the original on 2016-09-16. பார்க்கப்பட்ட நாள் 2020-10-17.
  6. "Chakrashila Wildlife Sanctuary,Wildlife in India and Jungle Tour to India with Travel Packages". Wildlifeinindia.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-01.
  7. "Avibase - Bird Checklists of the World: Chakrashila Wildlife Sanctuary". Avibase. பார்க்கப்பட்ட நாள் 12 February 2013.