சக்லேன் முஸ்டாக்
சக்லேன் முஸ்டாக் (Saqlain Mushtaq, பிறப்பு: திசம்பர் 29 1976 ), முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். தற்போது, 2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடி வரும் பாக்கித்தான் அணியின் தற்காலிக பயிற்சியாளராக உள்ளார். தூஸ்ரா எனப்படும் ஒருவகைப் பந்து வீச்சு முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995இலிருந்து 2004வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சக்லேன் முஸ்டாக் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | சகி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 134) | செப்டம்பர் 8 1995 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | ஏப்ரல் 1 2004 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 103) | செப்டம்பர் 29 1995 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | அக்டோபர் 7 2003 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, டிசம்பர் 8 2009 |
சர்வதேச போட்டிகள்
தொகு1995 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. செப்டம்பர் 8 இல் பெசாவரில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 54 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 ஓட்டங்களை எடுத்தார். பந்துவீச்சில் 18 ஓவர்கள் வீசி 48 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.இதில் 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 4 ஓவர்களை மெய்டனாக வீசினார். இவரின் சராசரி 2.72 ஆகும்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 26 ஓவர்கள் வீசி 58 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 இலக்கினைக் கைப்பற்றியுள்ளார். இதில் 10 ஓவர்களை மெய்டனாக வீசினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[1]
இறுதிப் போட்டி
தொகு2004 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி , பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. ஏப்ரல் 28 இல் முல்தானில் நடைபெற்றஇந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 43 ஓவர்கள் வீசி 204 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.இதில் 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 4 ஓவர்களை மெய்டனாக வீசினார். இவரின் சராசரி 4.74 ஆகும். 6 பந்துகளில் 5 ஓட்டங்கள் எடுத்தார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 14 பந்துகளில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் அனில் கும்ப்ளேவின்பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 50ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2]
1995 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் பாக்கித்தான் அணியில் விளையாடும் வாய்பினைப் பெற்றார், செப்டம்பர் 29இல் குஜ்ரன்வாலாவில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 5 ஓவர்கள் வீசி 27 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 9 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[3]
இறுதிப் போட்டி
தொகு2003 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் பாக்கித்தான் அணியில் விளையாடும் வாய்பினைப் பெற்றார், அக்டோபர் 7 , இல் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியில் 8 ஓவர்கள் வீசி 52 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[3]
மேலும் இவர் இஸ்லாமாபாத் துடுப்பாட்ட சங்கம், லாகூர்பாட்ஷாஸ், பாக்கித்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்,சர்ரே மற்றும் சசக்ஸ் ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சான்றுகள்
தொகு- ↑ "1st Test, Sri Lanka tour of Pakistan at Peshawar, Sep 8-11 1995 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-25
- ↑ "1st Test, India tour of Pakistan at Multan, Mar 28-Apr 1 2004 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-25
- ↑ 3.0 3.1 "1st ODI, Sri Lanka tour of Pakistan at Gujranwala, Sep 29 1995 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-25