சங்கமம் (1970 திரைப்படம்)

சங்கமம் (Sangamam) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] தாதா மிராசியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சங்கமம்
இயக்கம்தாதா மிராசி
தயாரிப்புஎம். டி. பெர்னாண்டோ
சியாரா பிலிம்ஸ்
இசைடி. கே. ராமமூர்த்தி
நடிப்புஜெமினி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுமே 15, 1970
ஓட்டம்.
நீளம்4515 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரைக்கதை

தொகு

அசோக்கும் சேகரும் உடன்பிறந்தோர். அண்ணன் அசோக் உணவக முதலாளி என்ற போர்வையில் சிங்காரத்துடன் சேர்ந்து கொள்ளையடித்து வசதியாக வாழ்கிறான். இலட்சுமியைக் காதலித்து மணந்து கர்ப்பமானவுடன் கைவிட்டு விடுகிறான். தம்பி சேகர் ராதா தோட்டத்தில் ஓட்டுனராகப் பணியாற்றுகிறான். சேகரும் ராதாவும் காதலிக்கிறார்கள். இதைக்கெடுக்க கங்காணி சுப்பையா முயல்கிறார். ஆனால் ராதாவின் தந்தை காதலுக்கு ஆதரவு தெரிவித்து அண்ணன் அசோக்கை பார்த்துவரும்படி சேகரை சென்னைக்கு அனுப்புகிறார். அசோக்-சிங்காரம் கூட்டணி வங்கியில் கொள்ளயடித்துவிட்டு தப்புகின்றனர். தன்னிடம் பிக் பாக்கெட் செய்த தம்புவைத் துரத்தி செல்லும் சேகரை வங்கிக் கொள்ளையன் என்று சொல்லி காவலர்கள் சிறையில் அடைக்கின்றனர். சேகர் கொள்ளைக்காரன் என நம்பும் ராதா தனது அப்பாவை மிரட்டும் அசோக்கிடம் இருந்து காப்பாற்ற அவனை மணந்துகொள்ளச் சம்மதிக்கிறாள்.

சிறையிலிருந்து தப்பிய சேகர் அண்ணன் அசோக் வீடு சென்று உதவி கேட்கிறான். அவனும் சரியென்று சொல்லிவிட்டு மறைவாகக் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கிறான். அப்போது ஏற்படும் கைகலப்பில் போதையிலிருந்த அசோக் மயங்கி விழுந்து விடுகிறான். அவன் இறந்து விட்டதாக எண்ணி வருந்தும் சேகர் காவல்துறையினரிடம் அசோக் ஆக நடிக்க ஆரம்பிக்கிறான். முதலுதவி வண்டியில் கொண்டு செல்லப்படும் அசோக்கின் உடலை சிங்காரம் கடத்துகிறான். மயக்கம் தெளிந்த அசோக் சேகராகவே நடித்து தன்னைக் கொன்றுவிட்டு தனது இடத்தில் தனது தம்பி சேகரை வைக்க முயலும் சிங்காரத்தின் சூழ்ச்சிகளை அறிந்து கொள்கிறான். அசோக் ஆக நடிக்கும் சேகருக்கும் உண்மை தெரியாத ராதாவுக்கும் திருமணம் முடிகிறது. இதற்கிடையில் அசோக்கின் மனைவி இலட்சுமி தனது மகனுடன் சென்னை வந்து தனது கணவன் வேறொரு திருமணம் செய்து கொண்டான் என்று நினைத்து வருந்துகிறாள். அங்கேயே வேலைக்காரியாகத் தங்குகிறாள்.

சிங்காரத்தின் மிரட்டல் கடிதத்தால் ராதாவின் தந்தை மரணமடைந்த செய்தி கேட்டு காரில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு ராதா பேச்சை இழக்கிறாள். சில்லறைத் திருடனும் சேகரை அறிந்தவனுமான தம்புவின் உதவியால் அசோக் சிங்காரத்திடமிருந்து தப்புகிறான். கணவனைக் கைது செய்ய காவல்துறையினர் வந்த அதிர்ச்சியில் ராதாவுக்கு பேச்சு வந்து விடுகிறது. அனைவரும் இணைகின்றனர்.

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

டி. கே. ராமமூர்த்தி இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

பாடல் பாடகர்(கள்)
இன்ப உலகத்தில் பறந்து வா
ஒரு பாட்டுக்கு பல ராகம் டி. எம். சௌந்தரராஜன்
கண்ணனிடம் கேட்டிருந்தேன் பி. சுசீலா
கண்ணு பூப்போட்ட சேலை கட்டி
தன்னந்தனியாக நான் வந்த போது டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
பார்த்தால் பார்க்கட்டும்

வெளி இணைப்புகள்

தொகு
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-147. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கமம்_(1970_திரைப்படம்)&oldid=4113772" இலிருந்து மீள்விக்கப்பட்டது