அக்வாமேன் (திரைப்படம்)
அக்வாமேன் (ஆங்கில மொழி: Aquaman) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த படம் டிசி காமிக்ஸ் வரைகதையில் தோன்றிய 'அக்குவாமேன்' என்ற கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகம் செய்தது. இது டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் ஆறாவது திரைப்படம் ஆகும்.
அக்வாமேன் | |
---|---|
இயக்கம் | ஜேம்ஸ் வான் |
தயாரிப்பு |
|
திரைக்கதை | |
இசை | ரூபர்ட் கிரெக்சன்-வில்லியம்ஸ் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | டான் புர்கெஸ் |
படத்தொகுப்பு | கிர்க் மோரி |
கலையகம் |
|
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | நவம்பர் 26, 2018(பேரரசு, லெய்செஸ்டர்) திசம்பர் 21, 2018 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 143 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $160–200 மில்லியன்[2][3] |
மொத்த வருவாய் | $1.148 பில்லியன்[4] |
பீட்டர் சப்ரன் மற்றும் ராப் கோவன் ஆகியோர் தயாரிக்கும் இந்த படத்தை ஜேம்ஸ் வான் என்பவர் இயக்க, ஜேசன் மோமோவா, அம்பர் ஹார்ட், வில்லெம் டஃபோ, பேட்ரிக் வில்சன், டால்ப் லண்ட்கிரென், யஹ்யா அப்துல்-மாத்தீன் II மற்றும் நிக்கோல் கிட்மேன் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தில் அக்குவாமேன் அட்லாண்டிஸ் எனும் நீருக்கடியில் உள்ள பேரரசின் வாரிசு எனத் தெரிந்துக் கொண்டப் பின்னர் தனது சகோதரர் ஆர்மிற்கு எதிராக தனது மக்களை வழிநடத்தி முன்னேற வேண்டும் எனும் குறிக்கோள் கொண்டுள்ளார். ஏனெனில் ஆர்ம் மேற்பரப்பு உலகிற்கு எதிராக நீருக்கடியில் உள்ள ஏழு ராஜ்யங்களை ஐக்கியப்படுத்த விரும்புகிறார்.
அக்குவாமேன் என்ற படம் 26 நவம்பர் 2018 அன்று லண்டனில் திரையிடப்பட்டது மற்றும் 21 டிசம்பர் அன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இது உலகளவில் சுமார் 1.148 பில்லியனை வசூலித்தது. இந்த படம் டிசி காமிக்ஸ் படங்களில் அதிக வசூல் செய்த முதல் படம் ஆகும். இது 2018 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த ஐந்தாவது படமாகவும் மற்றும் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த 20 வது படமும் ஆகும். இந்த படத்தின் தொடர்சியாக அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம் என்ற படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
வரவேற்பு
தொகுவசூல்
தொகுஅக்குவாமேன் படம் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் 335.1 மில்லியன் டாலர்களை வசூலித்தது.மற்ற பிராந்தியங்களில் $ 812.6 மில்லியன் என உலகளவில் மொத்தம் $ 1.148 பில்லியன் டாலர்களை வசூலித்தது. உலகளாவிய ரீதியில், இது டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் மிக அதிமான வசூல் ஈட்டிய படமாகும்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Film Releases". Variety Insight. Archived from the original on September 3, 2018. பார்க்கப்பட்ட நாள் September 3, 2018.
- ↑ Clark, Travis (December 19, 2018). "'Aquaman' has already made more money than its production budget, and is looking at a big opening in the US". Business Insider. Archived from the original on December 19, 2018. பார்க்கப்பட்ட நாள் January 18, 2019.
- ↑ Mendelson, Scott (December 25, 2018). "'Aquaman' Tops $500 Million: DC Films Ranked From Worst To Best". Forbes. பார்க்கப்பட்ட நாள் March 17, 2019.
- ↑ "Aquaman (2018)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் April 1, 2019.
- ↑ "James Wan's $1B+ 'Aquaman' Became DC's Lifeboat After 'Justice League' Debacle: No. 5 In 2018 Most Valuable Blockbuster Tournament". பார்க்கப்பட்ட நாள் March 29, 2019.