சம்பல்பூர் சமஸ்தானம்

சம்பல்பூர் சமஸ்தானம் (Sambalpur State, also known as Hirakhand Kingdom), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் சம்பல்பூர் நகரம் ஆகும். இது தற்கால ஒடிசா மாநிலத்தின் சம்பூல் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சம்பல்பூர் 1399 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 79,900 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. சம்பல்பூர் ஆட்சியாளர்களுக்கு 1857-ஆம் ஆண்டு வரை, பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநர் டல்ஹவுசி கொண்டு வந்த வாரிசு இல்லா சமஸ்தானம் கொள்கையின்படி, வாரிசு இல்லாத சம்பல்பூர் சமஸ்தானத்தை 1849ஆம் ஆண்டில் வங்காள மாகாண ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டது. மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ஒரியா மொழி பேசும் பகுதிகளைக் கொண்டு 1 நவம்பர் 1956 அன்று ஒடிசா மாநிலம் நிறுவப்பட்ட போது சம்பல்பூர் சமஸ்தானப் பகுதிகள் சம்பல்பூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது.

சம்பல்பூர் சமஸ்தானம்
ସମ୍ବଲପୁର
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1570–1849
Location of சம்பல்பூர்
Location of சம்பல்பூர்
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் முன்னாள் சம்பல்பூர் சமஸ்தானம்
தலைநகரம் சம்பல்பூர்
வரலாறு
 •  நிறுவப்பட்ட ஆண்டு 1570
 •  அவகாசியிலிக் கொள்கை, வங்காள மாகாணத்துடன் இணைத்தல் 1849
Population
 •  1901 79,900 
தற்காலத்தில் அங்கம் சம்பல்பூர் மாவட்டம், ஒடிசா, இந்தியா
சம்பல்பூர் சமஸ்தானத்தின் பழைய கோட்டை, ஆண்டு 1825

வரலாறு

தொகு

ஒடிசா பகுதியில் கீழைக் கங்கர் ஆட்சி வீழ்ச்சி அடைந்த போது, பாட்னா சமஸ்தானத்தின் மன்னர் நரசிங் தேவனின் இளைய தம்பியும், இராஜபுத்திர குல சௌகான் வம்சத்தின் பலராம தேவன் என்பவர் சம்பல்பூர் இராச்சியத்தை கிபி 1570-ஆம் ஆண்டில் நிறுவினார்[1] [2][3]இதன் தெற்கில் பாட்னா சமஸ்தானம் மற்றும் தென்கிழக்கில் சோன்பூர் சமஸ்தானம் இருந்தது.

1800-ஆம் ஆண்டில் சம்பல்பூர் சமஸ்தானம் மராத்தியப் பேரரசில் ஒரு சிற்றரசாக இருநதது. [4]1803-ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது ஆங்கில-மராட்டிய போரின் முடிவில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் வெற்றிபெற்றதால், சம்பல்பூர் சமஸ்தானத்தின் முந்தைய மன்னர் ஜெயந்த் சிங், 1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்றனர். எனவே சம்பல்பூர் சமஸ்தான மன்னர்கள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில் உள்ள கிழக்கிந்திய முகமையின் கீழ் செயல்பட்டது. சம்பல்பூர் சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

தலைமை ஆளுநர் டல்ஹவுசி கொண்டு வந்த வாரிசு இல்லா சமஸ்தானம் கொள்கையின்படி, வாரிசு இல்லாத சம்பல்பூர் சமஸ்தானம் 1849ஆம் ஆண்டில் வங்காள மாகாண ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டது.[5] 1862-ஆம் ஆண்டில் சம்பல்பூர் பகுதிகள் மத்திய மாகாணத்தில் இணைக்கப்பட்டது.[6]

சம்பல்பூர் சமஸ்தானம் 1912-ஆம் ஆண்டு முதல் 1936-வது ஆண்டு வரை பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்துடன் இணக்கப்பட்டது. பின்னர் 1936-ஆம் ஆண்டில் ஒரிசா மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ஒரியா மொழி பேசும் பகுதிகளைக் கொண்டு 1 நவம்பர் 1956 அன்று ஒடிசா மாநிலம் நிறுவப்பட்ட போது சம்பல்பூர் சமஸ்தானப் பகுதிகள் சம்பல்பூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Orissa District Gazetteers, Appendix III, Page 86-87
  2. Raghumani Naik (5 May 2018), CHAUHANS RULE IN SAMBALPUR IN PRECOLONIAL ODISHA (1570-1781 A.D.) (PDF), IJRHRSS, பார்க்கப்பட்ட நாள் 12 March 2021
  3. Raghumani Naik (3 March 2018), GENEALOGICAL ANALYSIS OF CHAUHAN RULERS OF PATNAGARH IN WESTERN ORISSA: A STUDY, IRJHRSS, பார்க்கப்பட்ட நாள் 12 March 2021
  4. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908.
  5.    "Sambalpur". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 24. (1911). Cambridge University Press. 
  6.    "Sambalpur". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 24. (1911). Cambridge University Press. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பல்பூர்_சமஸ்தானம்&oldid=3378880" இலிருந்து மீள்விக்கப்பட்டது