சரவாக் நிலமகள் கட்சி
சரவாக் நிலமகள் கட்சி அல்லது கென்யாலாங் நிலமகள் கட்சி (ஆங்கிலம்: Sarawak Land of the Hornbill Party; மலாய்: Parti Bumi Kenyalang) (PBK) என்பது மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். 2013-இல் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட இந்தக் கட்சியின் தலைமையகங்கள் பிந்துலு மற்றும் கூச்சிங் மாநகரங்களில் உள்ளன.[1]
சரவாக் நிலமகள் கட்சி கென்யாலாங் நிலமகள் கட்சி Land of the Hornbill Party Parti Bumi Kenyalang 肯雅蘭全民黨< | |
---|---|
சுருக்கக்குறி | PBK |
தலைவர் | ஊன் லீ சான் (Voon Lee Shan) |
சட்ட அனுமதி | 2013 |
தலைமையகம் | பிந்துலு, சரவாக் (தலைமையகம்) கூச்சிங், சரவாக் (புதிய தலைமையகம்) |
உறுப்பினர் | 3,570 (திசம்பர் 2022) |
கொள்கை | சரவாக் தேசியவாதம் சுய உறுதிப்பாடு பிரிவினை தேசிய சீர்த்திருத்தம் பல்லின மக்களாட்சி |
அரசியல் நிலைப்பாடு | தனிக் கொள்கை |
தேசியக் கூட்டணி | சரவாக் மக்கள் கூட்டணி (Gabungan Anak Sarawak) (2018–2022) சரவாக் ஐக்கிய மக்கள் கூட்டணி (PERKASA) (2022– ) |
நிறங்கள் | தங்கம், சிவப்பு, கறுப்பு |
மலேசிய மேலவை: | 0 / 70 |
மலேசிய மக்களவை: | 0 / 31 |
சரவாக் மாநில சட்டமன்றம்: | 0 / 82 |
சரவாக் பிரதமர்: | 0 / 1 |
இணையதளம் | |
www |
ஒரு நியாயமான, சமமான, முற்போக்கான மற்றும் இணக்கமான சமுதாயத்தை நிறுவுவதும்; மற்றும் சரவாக்கியர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து அவர்களின் கவலைகளை வெளிப்படுத்துவதற்கும்; சரவாக்கின் சுயாட்சியைப் பாதுகாப்பதற்கும்; ஒரு தளமாகச் செயல்படுவதே கட்சியின் நோக்கமாகும்.[1]
கொள்கை
தொகுமலேசிய ஒப்பந்தம் மற்றும் காபோல்டு ஆணையம் அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு, சரவாக்கின் உரிமைகளின் நிலையை மறுபரிசீலனை செய்ய முயல்வதே இந்தக் கட்சியின் முதன்மைக் கொள்கையாகும்.
"சுதந்திரத் தேடல்" (In Quest of Independence) எனும் கருத்தில் செயல்படும் ஒரே அரசியல் கட்சியாகத் திகழும் இந்தச் சரவாக் நிலமகள் கட்சி, தற்போது சரவாக் மக்களின் ஆதரவைப் பெற்று வரும் கட்சியாக அறியப்படுகிறது.[2]
வரலாறு
தொகு2018 மலேசியப் பொதுத் தேர்தலில், சரிக்கே மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட சரவாக் நிலமகள் கட்சி, அந்தத் தேர்தலின் வழியாகத் தனது அரசியல் வாழ்க்கையில் அறிமுகமானது. ஆனாலும் அந்தத் தேர்தலில் 392 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இதன் விளைவாக வேட்பாளர் தன் முன்பணத்தையே இழக்க நேர்ந்தது.
2022 மலேசியப் பொதுத் தேர்தலில்,சரவாக் நிலமகள் கட்சி; சரவாக் பெர்சத்து கட்சியின் (Parti Sarawak Bersatu) சின்னத்தைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டது.[3]
தேர்தல் முடிவுகள்
தொகுதேர்தல் | பெற்ற இடங்கள் | இடங்கள் | மொத்த வாக்குகள் | % | முடிவு | உறுப்பினர் |
---|---|---|---|---|---|---|
மலேசியப் பொதுத் தேர்தல் 2018 | 0 / 222
|
11 | 392 | 0.00% | 0 இடம்; மக்களவையில் இடம் இல்லை | இயூ சாங் பிங் (Yu Chang Ping) |
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 | 0 / 222
|
3 | 2,311 | 0.01% | 0 இடம்; மக்களவையில் இடம் இல்லை | ஊன் லீ சான் (Voon Lee Shan) |
மாநிலத் தேர்தல்
தொகுமாநிலத் தேர்தல் | மாநில சட்டமன்றம் | |
---|---|---|
சரவாக் | வென்றது / போட்டியிட்டது | |
2/3 பெரும்பான்மை | 2 / 3 |
2 / 3
|
2021 | 0 / 82 |
0 / 73
|
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Parti Bumi Kenyalang explained by pro tem secretary". The Star (Malaysia). 2013-10-26.
- ↑ Not stated (2016-06-04). "Menyeru memperluaskan Jawatankuasa untuk menuntut kembali hak autoriti kepada Sabah dan Sarawak dan membuat Agenda laporan Kerja". eHornbill. பார்க்கப்பட்ட நாள் 2018-06-06.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "PBK to use PSB's logo for parliamentary polls, says Soon Koh". Borneo Post Online (in அமெரிக்க ஆங்கிலம்). 11 October 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-10-11.
வெளி இணைப்புகள்
தொகு- [1] on PBK_Facebook-Live
- [2] on PBK_website
- [3] on Voice_Of_Kenyalang