சாகிப் நகரம், ஜோர்தான்

ஜோர்தான் நகரம்

சாகிப் (Sakib) என்பது ஜோர்டானின் வடமேற்கில் உள்ள ஒரு நகரமாகும். இது நிர்வாக ரீதியாக செராசு மாகாணத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. 2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 11,586 பேர் என பதிவாகியுள்ளது. இந்த நகரம் செராசு நகருக்கு மேற்கே சுமார் 9.7 கி.மீ தூரமும் மற்றும் அம்மான் நகர மையத்திலிருந்து 55 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

சொற்பிறப்பு

தொகு

சிலுவைப் போரின் போது சாகிப் "சீசிப்" என்று அழைக்கப்பட்டது. [2] அரபு இடப் பெயர் ஆய்வின்படி இதற்கு "பாயும் நீர்" என்று பொருள் படும்.

வரலாறு

தொகு

திரேபெட்டம் ஆலிவ் அச்சகங்கள், பண்டைய நீர்வழிகள் போன்ற தொல்பொருள் எச்சங்கள் உரோமானிய காலத்தில் இந்தப்பகுதியில் குடியேற்றம் இருந்துள்ளதைக் குறிப்பிடுகின்றன. 2008 ஆம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பைசாந்தியன் காலத்திற்கு முந்தைய கல்லறையைக் கண்டறிந்துள்ளனர். மேலும் இது ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்று மதிப்பைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. [3]

ஆரம்பகால இஸ்லாமிய சகாப்தம்

தொகு

உமையாத் பேரரசின் காலத்தில், நகரத்தின் தென்மேற்கு பகுதியில் ஒரு குக்கிராமமும் மசூதியும் கட்டப்பட்டன.

சிலுவைப்போர் ஆட்சி

தொகு

இந்நகரம் (சீசிப்) 1100 இல் சிலுவைப்போரில் கையகப்படுத்தப்பட்டது.[4] பின்னர், இது செல்யூக் பேரரசுடன் எருசலேம் இராச்சியத்தின் கிழக்கு எல்லையாக மாறியது. [5][6] 1120 ஆம் ஆண்டில், தமாசுகசின் அட்டபெக், சாகிர் அத்-தின் தோக்தெக்கின் சொராசில் நாற்பது பேரைக் கொண்ட ஒரு படைப்பிரிவு நிறுத்தப்பட்டு, ஆர்த்தெமிஸ் கோவிலை ஒரு கோட்டையாக மாற்றியது. இதை 1121 இல் எருசலேம் மன்னர் இரண்டாம் பால்த்வின் இதைக் கைப்பற்றி இடிக்க உத்தரவிட்டார்.[7][8]

நிலவியல்

தொகு

நகரம் கிழக்குக் கரை பீடபூமியில் அமைந்துள்ளது. முதலில், இந்த நகரம் மலைகளில் கட்டப்பட்டது. இதன் நிலப்பரப்பு அதன் மலைகளால் வகைப்படுத்தப்படுகிறது. மேலும் இப்பகுதியின் உயரம் 900 முதல் 1,200 மீ வரை இருக்கும்.[9] கிழக்கே செராசு அமைந்துள்ளது. வடக்கே இர்பிட் ஓயோ, தென்கிழக்கில் சர்கா மற்றும் தலைநகர் அம்மான் இந்நகரத்தின் தெற்கே உள்ளது.

காலநிலை

தொகு

இந்நகரத்தில் மத்திய தரைக்கடல் காலநிலை உள்ளது. குளிர்ந்த குளிர்காலத்தையும், வெப்பமான கோடையையும் கொண்டுள்ளது. சராசரி ஆண்டு மழையளவு வருடத்திற்கு சுமார் 422 மிமீ ஆகும்.(16.6   அங்குலங்கள்). இதன் சராசரி ஆண்டு வெப்பநிலை 23.5   °C ஆகும் (74.3   °F). பகலிலும், இரவிலும் வெப்பம் 13   °C (55.4   °F) வரை இருக்கும்.[10] வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பனி சூழும்.

விலங்குகள் மற்றும் தாவரங்கள்

தொகு

இப்பகுதியில் உள்ள முழு வன இருப்பு 60 கிமீ .பரப்பளவில் பரவியுள்ளது இந்தகாட்டில் காட்டுப்பன்றி, குள்ளநரி, சிவப்பு நரி, பாரசீக அணில் மற்றும் முள்ளம்பன்றி உள்ளிட்ட பல உள்ளூர் பாலூட்டிகளுள் உள்ளன. இந்த காடு ஒரு குறிப்பிடத்தக்க பறவைகளான யூரேசிய கொண்டலாத்தி, காகம், தேன்-உண்ணி, பட்டாணிக்குருவி, கோல்ட் பிஞ்ச், இராப்பாடி மற்றும் ரோலர் ஆகிய பல பறவையினங்கள் இங்கு வசிக்கின்றன..

மரங்களில் ஓக், அலெப்போ பைன், கிரேக்க ஸ்ட்ராபெரி மரம், தபோர் ஓக் (தேசிய மரம்), மத்திய தரைக்கடல் சைப்ரஸ், கரோப், தெரெபிந்த் மற்றும் தேவதாரு ஆகியவை இப்பகுதியில் காணப்படும் மிகவும் பொதுவான தாவரங்கள் ஆகும்.[11] தரை தாவரங்களில் விண்ட்ப்ளவர், பிளாக் ஐரிசு (தேசிய மலர்), ஆக்சி டெய்சி, ஆர்க்கிட்ஸ், தீவனப்புல், ராக்ட்-ராபின், தேஜெட்ஸ், சைக்லேமன் மற்றும் துலிப் போன்ற பல வகையான இனங்கள் உள்ளன.

வருமானம் மற்றும் பொருளாதாரம்

தொகு

நகர மக்கள் பெரும்பாலும் அறிவுத் தொழிலாளர்கள் ( மருத்துவர்கள், கல்வியாளர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், ராணுவ அதிகாரிகள், இராஜதந்திரிகள், வங்கியாளர்கள் போன்றவை). வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகியவை நகரத்தின் பொருளாதாரத்தில் அம்சங்களாகும்.

கலாச்சார நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள்

தொகு

சாகிப் பல வெற்றிகரமான வருடாந்திர கலாச்சார நிகழ்வுகளை நடத்துகிறது. கூடுதலாக, சாகிப் சர்வதேச கலாச்சாரம் மற்றும் கலை விழா என்பது நகரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவாகும். பல ஜோர்தானிய / வெளிநாட்டு கவிஞர்கள் மற்றும் உருவாக்கும் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் கவிதை, இலக்கியம் மற்றும் விஞ்ஞான அமர்வுகள், அத்துடன் பிளீன் காற்று ஓவியம் ஆகியவை இடம்பெற்றுள்ளன .

குறிப்புகள்

தொகு
  1. "Sakib, Jordan - List of All Places". placebeam.com. Archived from the original on 2020-01-26. பார்க்கப்பட்ட நாள் 2017-05-11.
  2. Kareem 2000, ப. 8.
  3. Abu Abila 2008.
  4. Tibble (1989). Monarchy and lordships in the Latin Kingdom of Jerusalem, 1099-1291. p. 156
  5. Brooker (1988). Review of Crusader Institutions. 
  6. Riley-Smith. The Knights of St. John in Jerusalem and Cyprus, c. 1050–1310. p. 482 (Map 2)
  7. Boulanger (1965). The Middle East: Lebanon, Syria, Jordan, Iraq, Iran.
  8. Heath (1980). A wargamers' guide to the Crusades.
  9. "Google Maps". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 2017-03-21.
  10. "Sakib Weather Forecast". WorldWeatherOnline.com. பார்க்கப்பட்ட நாள் 2018-01-11.
  11. AL-Eisawi, Dawud. Conservation of Natural Ecosystems in Jordan. http://www.pakbs.org/pjbot/PDFs/44(SI2)/13.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகிப்_நகரம்,_ஜோர்தான்&oldid=3698054" இலிருந்து மீள்விக்கப்பட்டது