சாதாரண மலைச் சிட்டான்
சாதாரண மலைச் சிட்டான் ( Common blackbird ) என்பது உண்மையான திரசு இனமாகும் . மேலும் இது ஐரவேசிய கரும்பறவை (குறிப்பாக வட அமெரிக்காவில், தொடர்பில்லாத புதிய உலக கரும்பறவைகளில் இருந்து வேறுபடுத்துவதற்காக),[2] அல்லது உள்ளூர் இனங்களுடன் குழப்பம் ஏற்படுவதைத் தவிற்க்க கரும்பறவை என்றும் அழைக்கப்படுகிறது. ஐரோப்பா, ஆசிய உருசியா, வட ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து வழ்ந்த இப்பறவை ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[3] இதன் பெரிய வாழிடப்பரப்பில் பல துணையினங்கள் உள்ளன; சில ஆசிய துணையினங்கள் சில நேரங்களில் முழு தனி இனங்களாகக் கருதப்படுகின்றன.
சாதாரண மலைச் சிட்டான் | |
---|---|
Male T. m. merula | |
Female T. m. mauritanicus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | T. merula
|
இருசொற் பெயரீடு | |
Turdus merula லின்னேயஸ், 1758 | |
Global range of the nominate subspecies based on reports to ஈபேர்டு Summer range Year-round range Winter range |
ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் சாதாரண மலைச் சிட்டானின் ( டர்டஸ் மெருலா மெருலா, துணையினம் ) துணையினத்தில் முதிர்ச்சியுற்ற ஆண் பறவையானது மஞ்சள் கண் வளையம் மற்றும் அலகைத் தவிர உடலின் மற்ற அனைத்துப் பகுதிகளும் கருப்பு நிறத்தில் இருக்கும். இனிமையாக பாடக்கூடியது. முதிர்ச்சியடைந்த பெண் பறவை மற்றும் இளம் பறவைகள் முக்கியமாக அடர் பழுப்பு நிற இறகுகளைக் கொண்டுள்ளன. இந்த இனம் காடுகளிலும் தோட்டங்களிலும் இனப்பெருக்கம் செய்கிறது. குச்சி, புல், பாசி ஆகியவற்றை மண்ணோடு சேர்த்துக் கலந்து, கோப்பை வடிவிலான கூட்டைக் கட்டுகிறது. பலவகையான பூச்சிகள், மண்புழுக்கள், பழங்கள் போன்றவற்றை உண்ணும் இது ஒரு அனைத்துண்ணி ஆகும்.
மிதமவெப்பமண்டலக் காலநிலை இருக்கும் இடத்தில், வாழும் இணைகள் ஆண்டு முழுவதும் தங்கள் வாழிடத்திலேயே தொடர்ந்து தங்கியிருக்கும் தன்மை கொண்டவே. வேறு சில இடங்களில் காணப்படும் பறவைகள் குளிர்காலத்தில் கூட்டமாக வலசை போகக்கூடியன. இந்த இனம் அதன் பாடலுக்காக பல இலக்கிய மற்றும் பண்பாட்டுக் குறிப்புகளில் இடம்பெற்றுள்ளது.
துணை இனங்கள்
தொகுஇந்த மலைச் சிட்டான் பறவை இனத்தில் பல துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு.
- T. m. merula, பொதுவாக ஐசுலாந்து, பரோயே தீவுகள் மற்றும் பிரித்தானியத் தீவுகளின் கிழக்கே முதல் உரால் மலைகள் வரையிலும், வடக்கே சுமார் 70 N வரை ஐரோப்பா முழுவதும் பொதுவாக இனப்பெருக்கம் செய்கிறது. நைல் பள்ளத்தாக்கில் குறைந்த அளவிலான பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள ஐரோப்பா மற்றும் சைப்பிரசு மற்றும் வட ஆப்பிரிக்கா உட்பட பகுதிகளுக்கு குளிர்காலத்தில் வடக்கில் இருந்து வலசை வருகின்றன. ஆத்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் இந்த துணையினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[4]
- T. m. azorensis என்பது அசோரசில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு துணையினமாகும். ஆண் பறவை மெருலா துணையினத்தை விட கருமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.[5]
- டிT. m. cabrerae எசுபானிய விலங்கியல் நிபுணரான ஏஞ்சல் கப்ரேராவின் பெயர் இடப்பட்டட ஒரு துணையினமாகும். இது அசோரென்சிஸ் துணையினத்தை ஒத்திருக்கிறது. மேலும் மதீரா மற்றும் மேற்கு கேனரி தீவுகளில் இனப்பெருக்கம் செய்கிறது.[5]
- T. m. mauritanicus, ஆண் பறவைகளுக்கு பளபளப்பான கருப்பு இறகுகளைக் கொண்ட சிறிய கருத்த துணையினம். இது மத்திய மற்றும் வடக்கு மொரோக்கோ, கடலோர அல்சீரியா மற்றும் வடக்கு தூனிசியாவில் இனப்பெருக்கம் செய்கிறது.[5]
- T m. aterrimus. அங்கேரி, தெற்கு மற்றும் கிழக்கில் இருந்து தெற்கு கிரேக்கம், கிரீட், வடக்கு துருக்கி மற்றும் வடக்கு ஈரானில் இனப்பெருக்கம் செய்கிறது. தெற்கு துருக்கி, வடக்கு எகிப்து, ஈராக்கு, தெற்கு ஈரானுக்கு குளிர்காலத்தில் வலசை போகிறது. மங்கிய நிறத்தில் ஆணும், வெளிறிய நிறத்தில் பெண் இறகுகளும் கொண்ட இது மெருலா துணையினத்தை விட சிறியது.[5]
- T. m. syriacus தெற்கு துருக்கியின் மத்திய தரைக்கடல் கடற்கரையில் தெற்கே ஜோர்தான், இஸ்ரேல் மற்றும் வடக்கு சினாய் வரை இனப்பெருக்கம் செய்கிறது. இது பெரும்பாலும் வலசை போகாமல் ஒரே பகுதியை வசிப்பிடமாக கொண்டதாக உள்ளது, ஆனால் இதில் ஒரு பகுதி பறவைகள் தென்மேற்கு அல்லது மேற்காக குளிர்காலத்தில் யோர்டான் பள்ளத்தாக்கு மற்றும் வடக்கு எகிப்தின் நைல் வடிநிலத்தில் தெற்கே கெய்ரோ வரை வலசை போகின்றன.[4]
- T. m. intermedius என்பது மத்திய உருசியாவிலிருந்து தஜிகிஸ்தான், மேற்கு மற்றும் வடகிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் கிழக்கு சீனா வரை இனப்பெருக்கம் செய்யும் ஒரு ஆசிய துணைனமாகும். இதில் பல பறவைகள் வலசை போகாமல் ஒரே பகுதியில் வசிக்கின்றன. ஆனால் சில தெற்கு ஆப்கானித்தான் மற்றும் தெற்கு ஈராக்கிற்கு குளிர்காலத்தில் வலசை போகின்றன.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Turdus merula". IUCN Red List of Threatened Species 2016. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103888106A87871094.en. https://www.iucnredlist.org/species/103888106/87871094. பார்த்த நாள்: 25 July 2019.
- ↑ Complete Birds of North America.
- ↑ Long, John L. (1981).
- ↑ 4.0 4.1 4.2 Clement, Peter; Hathway, Ren; Wilczur, Jan (2000). Thrushes (Helm Identification Guides). Christopher Helm Publishers Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7136-3940-7.Clement, Peter; Hathway, Ren; Wilczur, Jan (2000).
- ↑ 5.0 5.1 5.2 5.3 The Birds of the Western Palearctic concise edition (2 volumes). Oxford University Press. 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-854099-X.