சாலிகுண்டம்
சாலிகுண்டம் (Salihundam,) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், பௌத்த நினைவுச் சின்னங்கள் கொண்டதுமான பண்டைய கிராமம் ஆகும்.[1] மலையில் உள்ள இக்கிராமம், வம்சதாரா ஆற்றின் தென் கரையில் உள்ளது. சிறீகாகுளம் நகரத்திலிருந்து 14 மைல் தொலைவில் உள்ளது.
சாலிகுண்டம் | |
---|---|
பாதுகாக்கப்பட்ட பௌத்த நினைவுச் சின்னம் | |
ஆள்கூறுகள்: 18°20′00″N 84°03′00″E / 18.33333°N 84.05000°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | சிறீகாகுளம் மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 532405 |
அருகமைந்த நகரம் | விசாகப்பட்டினம் |
மக்களவைத் தொகுதி | சிறீகாகுளம் |
சட்டமன்றத் தொகுதி | சிறீகாகுளம் |
1919ல் சாலிகுண்டம் கிராமத்தை அகழாய்வு செய்த போது, நான்கு பௌத்த தூபிகளும், விகாரைகளும், பௌத்த நினைவுப் பொருட்கள் கொண்ட பேழைகளும், பௌத்த சமய தேவதைகளான தாரா உள்ளிட்ட சிலைகளும் கண்டெடுக்கப்பட்டது.[2] இவிடத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாயானம், தேரவாதம் மற்றும் வஜ்ஜிராயனப் பௌத்தப் பிரிவுகளைச் சேர்ந்த நினைவுச் சின்னங்கள், கிபி 2ஆம் நூற்றாண்டு முதல் கிபி 12ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தவைகள் ஆகும்.
இதனையும் காணக
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Rao, K. Srinivasa (March 31, 2014). "Srikakulam waits for tourism package" (in en). The Hindu. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/srikakulam-waits-for-tourism-package/article5848783.ece. பார்த்த நாள்: 1 August 2017.
- ↑ Archaeological Survey of India. "Archeological Survey of India". asihyd.ap.nic.in (in ஆங்கிலம்). Hyderabad Circle. Archived from the original on 1 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 1 August 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)