சிக்மகளூர்
சிக்மகளூர் (Chickmagalur) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் சிக்கமகளூரு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். குளம்பிக்கு (coffee) புகழ்பெற்ற முல்லயாநகரி மலைத்தொடர் அடிவாரத்தில் சிக்மங்களூர் அமைந்துள்ளது, இது கர்நாடகாவின் குளம்பி விளையும் நிலமாக அறியப்படுகிறது. சிக்மகளூர் அதன் மலைவாழிடத்திற்குப் பிரபலமானது.
சிக்மகளூர் | |||||
— நகரம் — | |||||
அமைவிடம்: சிக்மகளூர், கருநாடகம்
| |||||
ஆள்கூறு | 13°19′N 75°46′E / 13.32°N 75.77°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | கருநாடகம் | ||||
ஆளுநர் | தவார் சந்த் கெலாட் | ||||
முதலமைச்சர் | கே. சித்தராமையா | ||||
மக்களவைத் தொகுதி | சிக்மகளூர் | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
1,01,021 (20[update]) • 27/km2 (70/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு | 3,742 சதுர கிலோமீட்டர்கள் (1,445 sq mi) | ||||
குறியீடுகள்
| |||||
இணையதளம் | www.chickamagalurcity.gov.in |
இந்த நகருக்கு அருகில் மங்களூர் சர்வதேச விமான நிலையம் (160 கிமீ) உள்ளது. இதன் மிக அருகில் உள்ள ரயில் நிலையம் கதூர் (40 கிமீ) ஆகும்.
இங்கு காபி அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மலைப்பகுதியில் உள்ளது.
வரலாறு
தொகுஇது மலைநாடு பகுதியைச் சேர்ந்தது. சிக்க+மகள்+ஊர்= சிக்கமகளூர். இளைய மகளின் ஊர் என்பது இதன் பொருள். முற்காலத்தில் இருந்து அரசர், தன் மகளுக்கு இவ்வூரை தானமாக அளித்தாராம். அதனால், இப்பெயர் பெற்றது. இங்குள்ள கோதண்டராமர் கோயில், ஹொய்சாள, திராவிட கட்டிடக் கலையைக் கொண்டது.
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகு- இந்திரா காந்தி: இந்த தொகுதியில் போட்டியிட்டு, மத்திய அமைச்சரவையில் தேர்வானார்.
- ஜெய்ராம் ரமேஷ்: மத்திய அமைச்சர்
மேற்கோள்கள்
தொகு
வெளிப்புற இணைப்புகள்
தொகு- Chickmagalur City Municipal Council Website பரணிடப்பட்டது 2016-03-14 at the வந்தவழி இயந்திரம்
- The travel and holiday guide to Chikmagalur பரணிடப்பட்டது 2014-06-16 at the வந்தவழி இயந்திரம்