சிதார்கஞ்ச்
சிதார்கஞ்ச் (Sitarganj) வட இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். தெராய் பகுதியில் அமைந்த இந்நகரம் தொழிற்சாலைகள் நிறைந்த ஒரு தொழிற்பேட்டையாக உள்ளது.[1]இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 298 மீட்டர் உயரத்தில் உள்ளது.
சிதார்கஞ்ச் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் சிதார்கஞ்ச் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 28°56′N 79°42′E / 28.93°N 79.70°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்ட் |
மாவட்டம் | உதம் சிங் நகர் |
ஏற்றம் | 298 m (978 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 29,965 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி/பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 262405 |
தொலைபேசி குறியீடு | 05948 |
வாகனப் பதிவு | UK 06 |
பாலின விகிதம் | 798 ♂/♀ |
இணையதளம் | sitarganj |
பஞ்சாப் மாநிலத்தின் தென்மேற்கில் உள்ள மலௌத் நகரத்தையும், உத்தராகண்ட் மாநிலத்தின் வடகிழக்கில் உள்ள அஸ்கோட் எனுமிடத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 9 சிதார்கஞ்ச் நகரத்தின் வழியாகச் செல்கிறது.
அருகில் அமைந்த நகரங்கள்
தொகுமக்கள் தொகை பரம்பல்
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 11 வார்டுகள் கொண்ட சிதார்கஞ்ச் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 29,965. அதில் ஆண்கள் 15,623 மற்றும் 14,342 பெண்கள் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 4249 (14.18%) ஆக உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 74.07% ஆக உள்ளது. மக்கள் தொகையில் இந்துக்கள் 50.87%, இசுலாமியர் 43.55%, சீக்கியர் 4.87% மற்றவர்கள் 0.71% ஆக உள்ளனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Industrial Estate பரணிடப்பட்டது 24 மார்ச்சு 2008 at the வந்தவழி இயந்திரம் www.uttaranchalonline.
- ↑ Sitarganj Population Census 2011