சிறீதரன் ஜெகநாதன்
சிறீதரன் ஜெகநாதன் (Sridharan Jeganathan, சூலை 11, 1951 – மே 14, 1996) இலங்கைத் துடுப்பாட்டக் காரர். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக இரண்டு தேர்வு ஆட்டங்களிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் 1983 முதல் 1988 வரை விளையாடினார். துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மலேசியத் துடுப்பாட்ட அணியின் தேசிய பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலக்கைத் துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வேகம் குறைந்த இடக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], 9 பெப்ரவரி 2006 |
1982-1983 இல் இலங்கை அணியில் சேர்ந்து நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான நியூசிலாந்தில் இடம்பெற்ற இரண்டு தேர்வுப் போட்டிகளில் துடுப்பாட்டம், மற்றும் பந்து வீச்சில் கலந்து கொண்டார். இரண்டு போட்டிகளிலும் மொத்தம் 19 ஓட்டங்களே எடுத்திருந்தார். எந்த இலக்குகளையும் கைப்பற்றவில்லை. சில காலம் இலங்கை அணிக்காக விளையாட அவர் அழைக்கப்படவில்லை. பின்னர் இந்தியா, மற்றும் பாக்கித்தானில் நடைபெற்ற 1987 உலகக்கிண்ணத்துக்கான போட்டிகளில் இலங்கை அணிக்காகப் பங்கு பற்ற அழைக்கப்பட்டார். அங்கு ஐந்து போட்டிகளில் அவர் பங்குபற்றினார்.
முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அவர் மொத்தம் 49 இலக்குகளையும், 437 ஓட்டங்களையும் பெற்றார். 1982-83 காலப்பகுதியில் தாஸ்மானியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 74 ஓட்டங்களைப் பெற்றார். இதுவே இவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும். இலங்கை அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் மலேசியாவின் தேசிய பயிற்சியாளராகப் பணியாற்றினார்.