சுங்கை பூலோ மருத்துவமனை

சுங்கை பூலோ மருத்துவமனை (மலாய்: Hospital Sungai Buloh; ஆங்கிலம்: Serdang Hospital அல்லது Sungai Buloh Hospital) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், சுங்கை பூலோ புறநகர்ப் பகுதியில் உள்ள ஓர் அரசு பொது மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனை 130 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மருத்துவமனையின் முக்கிய வளாகம் ஏறக்குறைய 141,000 சதுர அடி (13,100 மீ2) பரப்பளவைக் கொண்டது.[2]

சுங்கை பூலோ மருத்துவமனை
Sungai Buloh Hospital
Hospital Sungai Buloh
அமைவிடம் சுங்கை பூலோ, சிலாங்கூர்
(Jalan Hospital 47000, Sungai Buloh, Selangor),
சுங்கை பூலோ,
சிலாங்கூர்
மலேசியா,
ஆள்கூறுகள் 3°13′11″N 101°35′58″E / 3.21972°N 101.59944°E / 3.21972; 101.59944
மருத்துவப்பணி பொது மருத்துவச் சேவை
நிதி மூலதனம் மலேசிய அரசு நிதியுதவி
வகை மாவட்ட மருத்துவமனை; பயிற்சி மருத்துவமனை
இணைப்புப் பல்கலைக்கழகம் மேலாண்மை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம்
மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
டெய்லர் பல்கலைக்கழகம்
அவசரப் பிரிவு 24 மணி நேர சேவை
படுக்கைகள் 620[1]
நிறுவல் 1999
மறு கட்டுமானம்: செப்டம்பர் 2006; 18 ஆண்டுகளுக்கு முன்னர் (2006-09)
வேறு இணைப்புகள் மலேசிய மருத்துவமனைகளின் பட்டியல்
Map
சுங்கை பூலோ மருத்துவமனை; அமைவிடம்

2.80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட கோம்பாக் மாவட்டம், பெட்டாலிங் மாவட்டம், மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் இந்த மருத்துவமனை சேவை செய்கிறது.[3]

பொது

தொகு

சுங்கை பூலோ மருத்துவமனை 1999-இல் உருவாக்கப்பட்டது; மற்றும் கூடுதலாகி வரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கோலாலம்பூர் மருத்துவமனையில் நோயாளிகளின் வருகையைக் குறைக்கவும், இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது.[3]

துனாஸ் செலாத்தான் (Tunas Selatan Sdn Bhd) என்ற நிறுவனத்தால் 2006-ஆம் ஆண்டில் இந்த மருத்துவமனைக்கான மறு கட்டுமானம் நடைபெற்றது; மற்றும் இந்த மருத்துவமனை கட்டப்படுவதற்கு RM 1.3 பில்லியன் மலேசிய ரிங்கிட் செலவானது.[4] மறு கட்டுமானத்திற்கான அனைத்துச் செலவுகளையும் மலேசிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.

சிறப்புகள்

தொகு
  • தொற்று நோய்கள் சிகிச்சை
  • அவசரநிலை சிகிச்சை
  • அதிர்ச்சி நிலை சிகிச்சை
  • நரம்பியல் அறுவை சிகிச்சை
  • முகத்தாடை அறுவை சிகிச்சை
  • ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை
  • தீ சிகிச்சை
  • எலும்பு காய அறுவை சிகிச்சை

ஆகிய 8 வகை சிகிச்சைகளுக்கான சிறந்த மையமாக சுங்கை பூலோ மருத்துவமனை அடையாளம் காணப்பட்டுள்ளது.[5]

விருதுகள் மற்றும் சாதனைகள்

தொகு
Year Nominated work Award Result
2002 Ward 54; மலேசியாவில் எயிட்சு நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்கான சிறந்த பணிக்கான விருது. ஐ.நா மலேசியாவின் சிறந்த நபர் / சிறந்த அமைப்பு விருது வெற்றி[6]
2020 கோவிட்-19 பெருந்தொற்று குழு; தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான மிகச் சிறந்த விருது. பன்னாட்டு விருது வெற்றி[7]
2022 சிறந்த மருத்துவச் சேவைக்கான சிறப்பு விருது மலேசியாவின் சிறந்த சாதனையாளர் விருதுகள் வெற்றி[8]

முகவரி

தொகு

Hospital Sungai Buloh
Jalan Hospital, 47000, Sungai Buloh, Selangor Darul Ehsan
Tel : +603-61454333
இணையத் தளம்: jknselangor.moh.gov.my/hsgbuloh/index.php/ms/mengenai-kami/latar-belakang

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Hospital Sungai Buloh – Government Hospital in Sungai Buloh, Selangor". Malaysia Central. 6 April 2010. பார்க்கப்பட்ட நாள் 31 May 2016.
  2. "SUNGAI BULOH HOSPITAL AND COLLEGE OF ALLIED SCIENCES, SUNGAI BULOH, SELANGOR". Tunas Selatan. பார்க்கப்பட்ட நாள் 27 April 2023.
  3. 3.0 3.1 "Hospital Sungai Buloh – Background". Hospital Sungai Buloh. Archived from the original on 30 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "#Highlight* Red alert at Sg Buloh Hospital as operating theatres closed". The Edge Markets. 10 January 2014. பார்க்கப்பட்ட நாள் 21 August 2018.
  5. Nurul Fareha binti Ahmad Khairon (2015). Kepuasan pelanggan terhadap perkhidmatan kaunter di Unit Hasil Utama, Hospital Sungai Buloh. Kuala Lumpur: University of Malaya. p. 8.
  6. "Nominations for outstanding UN Person / Organisation Award in Malaysia now open". unicef.org. பார்க்கப்பட்ட நாள் 17 July 2016.
  7. "Sungai Buloh Hospital Covid-19 team gets global health awards recognition". New Straits Times. பார்க்கப்பட்ட நாள் 5 December 2020.
  8. "IJN and Sungai Buloh Hospital bag Top Achievers Awards 2022". Revon Media. 29 June 2022. பார்க்கப்பட்ட நாள் 19 April 2023.
  9. "Pusat Kawalan Kusta Negara". Selangor Health Department. பார்க்கப்பட்ட நாள் 27 April 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்கை_பூலோ_மருத்துவமனை&oldid=4107822" இலிருந்து மீள்விக்கப்பட்டது