சுதாகர்ராவ் நாயக்

சுதாகர்ராவ் ராஜூசிங் நாயக் (Sudhakarrao Rajusing Naik)(21 ஆகத்து 1934 - 10 மே 2001) என்பவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மும்பையில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரங்களைத் தொடர்ந்து 25 சூன் 1991 முதல் 22 பிப்ரவரி 1993 வரை மகாராட்டிராவின் முதலமைச்சராக பணியாற்றினார். பஞ்சாயத்து ராஜ் அமைப்புக்கு புதிய வடிவத்தை அளித்த இவர், மாநிலம் முழுவதும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் தொடர்ச்சியான தேர்தல் செயல்முறையைத் தொடங்கினார். மகாராட்டிர மாநிலத்தில் நீர்ப்பாசனப் புரட்சியைத் தொடங்கிய இவரை ஜல்கிராந்தியின் கதாநாயகன் என்று அழைக்கின்றனர்.

சுதாகர்ராவ் நாயக்
10வது மகாராட்டிரா முதலமைச்சர்
பதவியில்
25 சூன் 1991 – 22 பிப்ரவரி 1993
முன்னையவர்சரத் பவார்
பின்னவர்சரத் பவார்
10வது இமாச்சலப் பிரதேச ஆளுநர்
பதவியில்
30 சூலை 1994 – 17 செப்டம்பர் 1995
முன்னையவர்விசுவநாதன் இரத்தினம்
பின்னவர்மகாவீர் பிரசாத்
இந்தியர் நாடாளுமன்றம்
for வாசிம் மக்களவைத் தொகுதி
பதவியில்
1998–1999
முன்னையவர்புண்டுலிக்ராவ் ராம்ஜி கவளி
பின்னவர்பாவனா புண்டுலிக்ராவ் கவளி
சட்டமன்ற உறுப்பினர் Member
for புசாத் மகாராஷ்டிர சட்டமன்றம்
பதவியில்
(1978-1980), (1980-1985), (1985-1990), (1990-1995), (1999 – 2001)
முன்னையவர்வசந்தராவ் நாயக்
பின்னவர்மனோகர் நாயக்
அமைச்சர்
மகராட்டிர அரசு வீட்டுவசதி, கால்நடை & மீன்வளம்
பதவியில்
1978–1980
அமைச்சர் 3வது வசந்தத்தா பாட்டீல் அமைச்சரவை
பதவியில்
பெப்ரவரி 1983 – மார்ச்சு 1985
அமைச்சர்கல்வி, பால்வளம், கால்நடைத் துறை
அமைச்சர் நிலாங்ராவ் அமைச்சரவை
பதவியில்
மார்ச்சு 1985 – மார்ச்சு 1986
அமைச்சர்தொழிற்சாலை, வருவாய் & சமூக நலம்
அமைச்சர் சரத்பவார் இரண்டாவது அமைச்சரவை
பதவியில்
சூன் 1988 – மார்ச்சு 1990
அமைச்சர்சமூக நலம், சக்தி, & சட்டமன்ற விவகாரம்
அமைச்சர் சரத்பவார் மூன்றாவது அமைச்சரவை
பதவியில்
மார்ச்சு 1990 – சூன் 1991
அமைச்சர்வருவாய் & சட்டமன்ற விவகாரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1934-08-21)21 ஆகத்து 1934
காகுலி, ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா
இறப்பு10 மே 2001(2001-05-10) (அகவை 66)
மும்பை, மகாராட்டிர, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

அரசியல் தொகு

நாயக் அரசியல் வாழ்க்கையைத் தனது கிராமப்புற அடித்தளத்திலிருந்து தொடங்கினார். இவர் சர்பஞ்ச் கிராமத் தலைவராக பணியாற்றியுள்ளார். இவர் 1978, 1980, 1985, 1990 மற்றும் 1999 மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல்களில் 5 முறை புசாத் (சட்டமன்றத் தொகுதி) சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1992-1993 மும்பை கலவரத்தின் போது முதலமைச்சராக இருந்தார்.

அரசியல் ரீதியாக, சரத் பவாருடனான இவரது கருத்து வேறுபாடுகள் காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.[2]

நீர் பாதுகாப்பில் இவர் ஆற்றிய பணிக்காக நினைவுகூரப்படுகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொகு

நாயக், 1998-ல், வாஷிம் மக்களவைத் தொகுதியிலிருந்து 12வது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

ஆளுநர் பதவி தொகு

நாயக் 30 சூலை 1994 முதல்[4] செப்டம்பர் 1995 வரை இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராகப் பணியாற்றினார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Elections results analysis 1978–2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 28 January 2010.
  2. Gouri Shah (11 October 2004). "The F-factor: Kalani certain of clean sweep". தி எகனாமிக் டைம்ஸ். http://economictimes.indiatimes.com/articleshow/880573.cms. 
  3. "Archived copy". Archived from the original on 16 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2013-12-01.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "Governor House, Himachal Pradesh, India - Governors of Himachal Pradesh".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதாகர்ராவ்_நாயக்&oldid=3742737" இலிருந்து மீள்விக்கப்பட்டது