சுதாகர் (நடிகர்)
சுதாகர் (பிறப்பு 18 மே 1959) என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளார்.
சுதாகர் | |
---|---|
பிறப்பு | சுதாகர் 18 மே 1959[1] மார்க்கப்பூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பணி | நடிகர், நகைச்சுவை நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் |
வாழ்க்கை குறிப்பு
தொகுசுதாகர் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மார்க்கபுரத்தில் கங்கமாலாரத்னம்–கடாட்ச்சம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை ஆந்திரா முழுவதும் பயணம் செய்த ஒரு துணை ஆட்சியர் ஆவார். சுதாகருக்கு ஆறு சகோதரர்களில் இவர் இளையவராவார்.[2] அவர் குண்டூரில் உள்ள ஆந்திரா-கிறிஸ்டியன் கல்லூரியில் இடைநிலை வரை படித்தார், பின்னர் ஒரு மெட்ராஸ் திரைப்பட நிறுவனத்தில் சேர்ந்து திரைப்படங்களில் இறங்கினார்.
1976 இல் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தார். அங்கு அவர் சிரஞ்சீவி மற்றும் ஹரி பிரசாத் ஆகியோரைச் சந்தித்தார். 1978 பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் ராதிகாவுடன் நடித்தார். இவர் நாயகனாக நடித்த தமிழ்த் திரைப்படங்களில் சில 100 நாட்களை கடந்து ஓடியன. இவரும் ராதிகாவும் 11 படங்களில் இணைந்து நடித்து வெற்றி ஜோடியாக இருந்தனர்.
தமிழ் திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் |
---|---|---|
1978 | கிழக்கே போகும் ரயில் | பரஞ்சோதி |
1978 | மனிதரில் இத்தனை நிறங்களா! | |
1979 | இனிக்கும் இளமை | |
1979 | மாந்தோப்புக்கிளியே | |
1979 | பொண்ணு ஊருக்கு புதுசு | |
1979 | கரை கடந்த குறத்தி | |
1979 | நிறம் மாறாத பூக்கள் | சுதாகர் |
1979 | சுவர் இல்லாத சித்திரங்கள் | மூர்த்தி |
1979 | சக்களத்தி (திரைப்படம்) | |
1980 | ஆயிரம் வாசல் இதயம் | செந்தில் |
1980 | கல்லுக்குள் ஈரம் | சுதாகர் |
1980 | சின்ன சின்ன வீடு கட்டி | |
1980 | தைப்பொங்கல் | |
1980 | அன்னபறவை | |
1980 | சின்னஞ்சிறு கிளியே | |
1980 | அழைத்தல் வருவேன் | |
1980 | எதிர் வீட்டு ஜன்னல் | |
1980 | கரும்பு வில் | |
1980 | எங்க ஊர் ராசாத்தி | |
1980 | மலர்களே மலருங்கள் | |
1980 | ருசி கண்ட பூனை | ரமேஷ் |
1981 | பெண்ணின் வாழ்கை | |
1981 | ஒருத்தி மட்டும் கரையினிலே | |
1981 | பெண் மனம் பேசுகிறது | |
1981 | நதி ஒன்று கரை மூன்று | |
1982 | துணைவி | |
1982 | மாமியாரா மறுமகளா | |
1988 | கைநாட்டு (திரைப்படம்) | |
1988 | மதுரைக்காரதம்பி | |
1990 | அதிசயப் பிறவி | |
2001 | காதல் அழிவதில்லை | |
2018 | தானா சேர்ந்த கூட்டம் | அழகு மீனாவின் கணவர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Comedian G sudhakar birthday photos career info" (in en). Sakshi. https://www.sakshi.com/web-stories/entertainment/comedian-G-sudhakar-birthday-photos-career-info. பார்த்த நாள்: 18 May 2021.
- ↑ "Interview with Comedian Sudhakar". Telugucinema.com. 2006. Archived from the original on 2 February 2012.