சுமித்ரா சரத் ராம்

இந்தியக் கலைகளின் புரவலர்

சுமித்ரா சரத் ராம் (Sumitra Charat Ram) 17 நவம்பர் 1914 - 8 ஆகஸ்ட் 2011) ஒரு குறிப்பிடத்தக்க இந்திய கலை புரவலரும், புது தில்லியில் 1952 இல் நிறுவப்பட்ட ஸ்ரீராம் பாரதிய கலா கேந்திராாவின் நிறுவனரும் ஆவார். சுதந்திரத்திற்குப் பிந்தைய சகாப்தத்தில் கலைநிகழ்ச்சிகள், குறிப்பாக கதக் ஆகியவற்றின் மறுமலர்ச்சியில் இவர் முக்கிய பங்கு வகித்தார். இதற்காக இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. [1]

Sumitra Charat Ram
பிறப்பு(1914-11-17)17 நவம்பர் 1914
Meerut, United Provinces
இறப்பு8 ஆகத்து 2011(2011-08-08) (அகவை 96)
அறியப்படுவதுFounder Shriram Bharatiya Kala Kendra (established 1952)

இவர் டிசிஎம் ஸ்ரீராம் குழுமத்தின் தொழிலதிபர் லாலா சரத் ராமின் மனைவியாவார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி

தொகு

1917 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் ராஜா ஜ்வாலா பிரசாத் மற்றும் ராணி பாக்யவதி ஆகியோருக்கு ஐக்கிய மாகாணங்களில் உள்ள மீரட்டில் பிறந்தார். (தற்போது உத்தரபிரதேசத்தில் உள்ளது). இவரது தந்தை ஐக்கிய மாகாணத்தின் கால்வாய்கள் மற்றும் நீர்ப்பாசனத்தின் தலைமைப் பொறியாளர் ஆவார். இவர் தனது ஐந்து உடன்பிறப்புகளில் இளையவர். [2]

இவரது மூத்த சகோதரர் தர்ம வீரா (1906-2000) ICS (1906-2000) இல் சேர்ந்தார். மேலும், இந்திய அரசாங்கத்தின் கேபினட் செயலாளராகவும், பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகாவின் ஆளுநராகவும் இருந்தார்.

லாலா ஸ்ரீராமின் மகன் லாலா சரத் ராமுடனான திருமணத்திற்குப் பிறகு, இவர் படிப்படியாக கலைகளின் புரவலராக மாறினார். 1947 இல், ரவிசங்கரின் ஆலோசனையின் பேரில், தனது மாமனாரிடம் இருந்து ரூ.10,000-த்தை கடனாகப் பெற்று தில்லியில் ஜாங்கர் குழுவைத் தொடங்கினார். இந்தியாவின் சுதந்திரத்தின் தொடக்கத்தில், சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டன. இது ஏராளமான இசைக்கலைஞர்களையும் நடனக் கலைஞர்களையும் ஆதரவில்லா நிலைமைக்கு இட்டுச் சென்றது. இவர் ஜாங்கர் இசைக் கச்சேரிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் அக்கால முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு ஆதரவை வழங்கினார். இதில் சித்தேஸ்வரி தேவி, ரவிசங்கர், அபீஸ் அலிகான், பாபா அல்லாவுதீன் கான், ஷம்பு மகாராஜ், சுந்தர் பிரசாத், பிர்ஜு மகராஜ், துர்கா லால் மற்றும் அமினுதீன் தாகர் ஆகியோர் அடங்குவர். [2][3]

 
1952 இல் சுமித்ரா சரத் ராம் என்பவரால் நிறுவப்பட்ட ஸ்ரீராம் பாரதிய கலா கேந்திரா, தில்லி

இவர் 1952 ஆம் ஆண்டில் ஸ்ரீராம் பாரதிய கலா கேந்திரா என்ற கலை மற்றும் இசைப் பள்ளியை நிறுவினார். அந்த நேரத்தில் குறிப்பிடப்பட்ட குருக்கள் ஆசிரியர்களாக இருந்தனர், [3] இந்துஸ்தானி பாரம்பரிய இசையின் இந்திய பாடகர் நைனா ரிப்ஜித் சிங் என்றும் அழைக்கப்பட்ட நைனா தேவி அதன் இயக்குநராக செயல்பட்டார். 1950கள் முழுவதும், இந்த மையம், அந்தக் காலத்தின் சிறந்த நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு, குறிப்பாக கதக் கரானாக்களின் முன்னணி குருக்களுக்கு ஒரு மையப் புள்ளியாக இருந்தது. மேலும் தில்லி கலாச்சார மறுமலர்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் புதிய படைப்புகளின் மையமாகவும் மாறியது. தேசிய கதக் நடன நிறுவனம் அல்லது கதக் கேந்திரா முதலில் 1955 இல் ஸ்ரீராம் பாரதிய கலா கேந்திராவின் கதக் பிரிவாக நிறுவப்பட்டது. பின்னர் 1964 இல் இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாடமியான சங்கீத் நாடக அகாடமியால் கையகப்படுத்தப்பட்டது [4]

பிப்ரவரி 2011 இல், ஸ்ரீ ராம் பாரதிய கலா கேந்திராவால் நிறுவப்பட்ட முதல் 'வாழ்நாள் சாதனைக்கான சுமித்ரா சரத் ராம் விருது' பண்டிட் பிர்ஜு மகாராஜுக்கு வழங்கப்பட்டது. [5]

விருதுகள்

தொகு

கலைக்கான இவரது பங்களிப்புகளுக்காக, 1966 இல், இந்திய அரசாங்கத்தால் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதுகளான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. [1]

உசாத்துணை

தொகு
  • Sumitra Charat Ram (1995). The essence of memories: a collage of renowned industrialist Dr. Charat Ram's life and work. Oxford & IBH Pub. Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-204-1042-8.
  • Ashish Khokar; Sumitra Charat Ram (1998). Shriram Bharatiya Kala Kendra: a history : Sumitra Charat Ram reminisces. Lustre Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7436-043-4.

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Padma Awards Directory (1954–2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 May 2013.
  2. 2.0 2.1 Ashish Khokar (9 August 2011). "Sumitra Charat Ram: Doyenne of art patronage dies". narthaki.com. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013.Ashish Khokar (9 August 2011). "Sumitra Charat Ram: Doyenne of art patronage dies". narthaki.com. Retrieved 11 June 2013.
  3. 3.0 3.1 "Sumitra Charat Ram passes away". 9 August 2011. Archived from the original on 20 June 2013. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013.
  4. Massey, p. 29
  5. "Pt. Birju Maharaj felicitated". 25 February 2011. Archived from the original on 15 December 2013. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்ரா_சரத்_ராம்&oldid=4109345" இலிருந்து மீள்விக்கப்பட்டது